நாம் வீட்டில் என்ன தான் வகை வகையாக செய்து கொடுத்தாலும் ஹோட்டல் உணவுகள் என்றால் கொஞ்சம் அதிகமாகவே விரும்பி தான் சாப்பிடுவார்கள். அதிலும் இந்த பரோட்டா என்றால் கேட்கவே வேண்டாம். அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடிய உணவுகளில் முக்கியமான உணவாகவே பரோட்டா உள்ளது. இந்த பரோட்டா இனி கடைகளில் செய்வது போல மைதா மாவில் செய்யமல் உடலுக்கு ஆரோக்கியம் நிறைந்த கோதுமை மாவில் பரோட்டா செய்தால் அருமையாக இருக்கும். பரோட்டாவை கடைகளில் வாங்காமல் வீட்டிலே கோதுமை உயோகித்துப சுலபமாக செய்துவிடலாம்
சாதாரணமாக பரோட்டா செய்வதை விட இந்த கோதுமை பரோட்டா செய்வது ரொம்ப ரொம்ப சுலபம். முட்டை சேர்க்காமல் தான் இன்று கோதுமை பரோட்டா செய்யப் போகின்றோம். நம்முடைய வீட்டிலேயே மிக மிக எளிமையான முறையில் இந்த பரோட்டாவை செய்து சுடச்சுட சாப்பிட்டு ருசிக்கலாம். இதற்கு சைட் டிஷ் ஆக சால்னா, சைவ குருமா, அசைவ குருமா, குழம்பு என்று உங்கள் விருப்பம் போல எதை வேண்டுமென்றாலும் பரிமாறிக் கொள்ளலாம். வாங்க இந்த அருமையான கோதுமை பரோட்டா எப்படி செய்யறதுன்னு நாமும் தெரிந்து கொள்வோம்.
கோதுமை பரோட்டா | Wheat Parotta Recipe In Tamil
Equipment
- 1 தோசை கல்
தேவையான பொருட்கள்
- 2 டம்ளர் கோதுமை மாவு
- 1 தேக்கரண்டி சர்க்கரை
- 1/2 தேக்கரண்டி உப்பு
- 2 தேக்கரண்டி எண்ணெய்
- எண்ணெய் சுட்டு எடுக்க தேவையான அளவு
- 1/2 டம்ளர் தண்ணீர்
செய்முறை
- கோதுமை மாவில் உப்பு, சர்க்கரை, தண்ணீர் சேர்த்து ஒரு பெரிய ஃபோர்கால் நல்ல கிளறி ஐந்து நிமிடம் வைத்து விடவும். இப்போது மாவு நன்கு சேர்ந்து இருக்கும். அதில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி நன்கு பிசையவும்.
- தண்ணீர் தேவைப்பட்டால் சிறிதளவு தெளித்து நன்றாக அடித்து பிசைந்து கடைசியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி பிசைந்து சிறு உருண்டைகளாக போட்டு வைக்கவும்.
- ஒரு உருண்டையை எடுத்து சப்பாத்தி கட்டையில் வைத்து வட்டமாக தேய்க்கவும். தேய்த்த சப்பாத்தியை புடவை கொசுவம் போல் ஒன்றோடு ஒன்று வைத்து மடித்துக் கொண்டே வரவும்.
- மடித்த சப்பாத்தியை அப்படியே சுருட்டவும். இதே போல் எல்லா உருண்டைகளையும் செய்து வைத்துக் கொள்ளவும்.
- தவாவில் போடும் முன் செய்து வைத்திருக்கும் உருண்டைகளை சப்பாத்தி கட்டையில் வைத்து தேய்த்துக் கொள்ளவும். நேய்ந்து வைத்திருக்கும் சப்பாத்தியை தவாவில் போட்டு தீயை மிதமாக வைத்து வேக விடவும்.
- ஒரு புறம் வெந்ததும் திருப்பி போட்டு சுற்றிலும் எண்ணெய் ஊற்றவும். நன்கு இரண்டு கரண்டிக் கொண்டு அடுப்பிலேயே வைத்திருந்து நன்கு வேக விட்டு (பொசுக்கி) எடுக்கவும்.
- அப்பொழுது தான் பிரியும். சுவையான கோதுமை பரோட்டா ரெடி.