Advertisement
உடல்நலம்

பூ போன்ற கோதுமை ரவா இட்லி இப்படி செய்து பாருங்க! 2 இட்லி அதிகமாவே சாப்பிடுவாங்க!

Advertisement

காலை உணவுக்கு உகந்த உணவு என வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களை சொன்ன உணவு தான் இட்லி. நமது வாழ்வில் பாரம்பரிய உணவுகளில் இட்லியும் ஒன்றாக பல ஆண்டுகளாக உணவுகளில் வருகிறது. பெரும்பாலும் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கும் அதிகபட்ச உணவு பொருள் என்றால் அது இட்லி தான் இருந்தாலும்.

இதையும் படியுங்கள் : பூ போன்ற சுவையான ரவா இட்லி செய்வது எப்படி ?

Advertisement
Advertisement

ஏனென்றால் அனைவருக்கும் பிடித்த உணவாக இட்லி இருக்கும் இட்லியை பெறுபவர்கள் என்று யாருமே இருக்க மாட்டார்கள் இருந்தாலும் ஒரு மாறுதலுக்காக புது விதமாக சுவையான இட்லி செய்து சாப்பிடலாம். ஆம், இன்று கோதுமை ரவா இட்லி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இதில் நம் காய்கறிகளும் சேர்த்து இட்லி செய்வதால் நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு வழி வகுக்கும். மேலும் சுவையான கோதுமை ரவா இட்லி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

கோதுமை ரவா இட்லி | Wheate Rava Idli Recipe in Tamil

Print Recipe
அனைவருக்கும் பிடித்த உணவாக இட்லி இருக்கும் இட்லியை பெறுபவர்கள் என்று யாருமே இருக்க மாட்டார்கள் இருந்தாலும் ஒரு மாறுதலுக்காக புது விதமாக சுவையான இட்லி செய்து சாப்பிடலாம். ஆம், இன்று கோதுமை ரவா இட்லி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இதில் நம் காய்கறிகளும் சேர்த்து இட்லி செய்வதால் நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு வழி வகுக்கும். மேலும் சுவையான கோதுமை ரவா இட்லி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Course Breakfast
Cuisine Indian, TAMIL
Keyword Wheate Rava Idli, கோதுமை ரவா இட்லி
Prep Time 20 minutes
Cook Time 20 minutes
Total Time 40 minutes
Servings 4 People
Calories 364

Equipment

  • 1 கடாய்
  • 1 இட்லி பாத்திரம்
  • 2 பவுள்

Ingredients

  • 2 tbsp எண்ணெய்
  • 1 tbsp கடுகு
  • 1 tbsp உளுந்தம் பருப்பு
  • 1 tbsp கடலை பருப்பு
  • 8 முந்திரி பருப்பு
  • ¼ tbsp பெருங்காயத்தூள்
  • 1 துண்டு இஞ்சி நறுக்கியது
  • 3 பச்சை மிளகாய்
  • கருவேப்பிலை சிறிது
  • ¼ tbsp மஞ்சள் தூள்
  • 1 கப் கோதுமை ரவா
  • 1 கப் தயிர்
  • உப்பு தேவையான அளவு
  • ½ கப் தண்ணீர்

Instructions

  • முதலில் கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும், எண்ணெய் நன்றாக காய்ந்தவுடன் கடுகு, உளுந்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பு போன்றவற்றை சேர்த்து கொள்ளவும்.
    Advertisement
  • கடுகு நன்றாக பொரிந்ததும் பின் பருப்புகள் பொன்னிறமாக வரும் வரை வறுத்து கொள்ளுங்கள். அதன்பின் இதனுடன் முந்திரி பருப்பையும் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
  • பின் இதனுடன் சிறிது பெருங்காயத்தூள் மற்றும் பொடியாக நறுக்கிய இஞ்சி, நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். அதன் பின் இதனுடன் சிறிது கருவேப்பிலை மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளறி விட்டுக் கொண்டே இருங்கள்.
  • அனைத்து பொருட்களும் நன்றாக வதங்கியதும் நாம் வைத்திருக்கும் கோதுமை ரவாவை கடாயில் சேர்த்து நன்றாக வறுக்கவும் தொடர்ந்து ஒரு ஐந்து நிமிடம் நன்றாக வருத்து கடாயை இறக்கி தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.
  • பின் கோதுமை ரவையை குளிர்ந்த உடன் தனியாக ஒரு பவுளில் எடுத்துக் கொண்டு இதனுடன் தயிர் மற்றும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கலக்கிக் கொள்ளவும் மாவு தண்ணியாகவும் இல்லாமல் ரொம்ப கட்டியாகவும் இல்லாமல் இருக்கும் மாறு தயார் செய்து கொள்ளவும்.
  • பின்பு தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கி அவ்வளவுதான் மாவு தயார் இதை இட்லி பாத்திரத்தில் சிறிது எண்ணெய் தடவி விட்டு அதன் கீழ் ஒரு முந்திரியை வைத்து அதன் மேல் மாவை ஊற்றி விடுங்கள் அவ்வளவுதான் இட்லி அவிந்தவுடன் எடுத்து விடுங்கள் ரூசியான கோதுமை ரவை இட்லி தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 4person | Calories: 364kcal | Carbohydrates: 76g | Protein: 10g | Fat: 1g | Saturated Fat: 0.2g | Sodium: 2mg | Potassium: 107mg
Advertisement
Prem Kumar

Recent Posts

இரவு உணவுக்கு இப்படி மட்டும் புட்டு செய்து கொடுத்தால், அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட அழகாக சாப்பிடுவார்கள்!

புட்டு வகைகள் என்றாலே, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதிலும், குறிப்பாக கம்பு மாவில் செய்யும் கம்பு புட்டு, உடலுக்கு…

6 மணி நேரங்கள் ago

கடாய் சிக்கன் சாப்பிட இனிமேல் கடைக்கு போகணும் என்ற அவசியம் இல்லை வீட்டில் சூப்பரா செஞ்சு சாப்பிடலாம்!

சிக்கன்ல நம்ம என்ன வெரைட்டி செஞ்சு கொடுத்தாலும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவோம் அந்த வகையில் இன்னைக்கு நம்ம வீட்ல இருக்கிற…

7 மணி நேரங்கள் ago

வாயில் கரைந்தோடும் சுவையில் சூப்பரான ஷாகி துக்டா வீட்டிலேயே இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஷாகி துக்டா அப்டின்னா சில பேருக்கு என்னன்னே தெரியாது.ஆனா ஒரு சிலர் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.பிரட் வச்சு செய்ய கூடிய…

9 மணி நேரங்கள் ago

அருமையான பிரயாணி சாப்பிட ருசியான மலபார் சிக்கன் பிரியாணி இப்படி வீட்டில் ஈஸியாக செய்து பாருங்க!

அசைவ பிரியர்கள் அனைவருக்குமே பிரியாணி என்பது மிகவும் பிடித்த உணவு ஆகும். அதிலும் குறிப்பாக சிக்கன் பிரியாணி என்றால் சொல்லவா…

15 மணி நேரங்கள் ago

வெயிலுக்கு வெள்ளரி ஜூஸ் இப்படி ஒரு தடவை போட்டு குடிச்சு பாருங்க!

பொதுவாகவே தண்ணீர் பழம் வெள்ளரிக்காய் இதுல எல்லாத்துலயும் நிறைய தண்ணீர் இருக்கும் இத தண்ணீர் பழங்கள் அப்படின்னு சொல்லலாம் இந்த…

17 மணி நேரங்கள் ago

சேமியா பொங்கல் இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க சேமியா பிடிக்காதவங்க கூட கேட்டு கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க!

சேமியா உப்புமாவா?? என்று அலறி அடித்து ஓடுபவர்களுக்கு சேமியாவில் இது போல ஒருமுறை நீங்கள் பொங்கல் செய்து கொடுத்தால் ரொம்பவே…

18 மணி நேரங்கள் ago