வெள்ளை காராமணி சேர்த்த, புரத சத்து அதிகமாக உள்ள ருசியான மொறு மொறு தோசை! மிக எளிமையா மாவு தயார் செய்யலாம்!

- Advertisement -

தோசை என்றாலே அதற்கு அரிசி ஊற வைத்து தான் செய்யவேண்டும். ஆனால் இந்த தோசைக்கு அப்படி எந்த அவசியமும் இல்லை. உடலுக்கு மிகவும் சத்து தரக்கூடிய தானியத்தை வைத்து, புதுவிதமான சுவையான தோசை ஒன்றை இப்போது எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இது சுவையானது என்று சொல்லுவதை விட உடலுக்கு மிக மிக ஆரோக்கியமானது.

-விளம்பரம்-

தானிய வகைகளில் எதை எடுத்துக் கொண்டாலும் நம் உடலுக்கு அத்தனை ஆரோக்கியமும் சத்துக்களும் கிடைக்கக்கூடிய ஒன்று தான். நாம் தான் நேரமின்மை காரணத்தாலும் ருசிக்கு அடிமைப்பட்டு கிடந்ததாலும் இது போல் தானிய வகைகளை பெரும்பாலும் நாம் உணவில் சேர்த்துக் கொள்வதில்லை. அதிலும் இந்த வெள்ளை காராமணி இவையெல்லாம் வீட்டில் விசேஷ நாட்களில் சுவாமிக்கு செய்ய மட்டும் தான் அதிகமாக பயன்படுத்துகிறோம்.இந்த தோசை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. குழந்தைகளுக்கு வாரத்திற்கு இரண்டு நாட்கள் இந்த தோசை செய்து தருவது புரதச் சத்தை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதை எல்லாம் சாதாரணமாகவே அவித்து நம் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் போல கொடுத்தால் உடலுக்கு அத்தனை சத்துக்கள் கிடைக்கும். இதில் புரோட்டீன் மற்றும் இரும்பு சத்து உள்ளது ,  இதில் எண்ணற்ற சத்துகள் உள்ளது. இதை அப்படியே வேக வைத்து தந்தால் குழந்தைகளுக்குக் பிடிக்காது. இந்த வெள்ளை காராமணி குழந்தைகளுக்கு மட்டும் அல்ல பெரியவர்களும் எடுத்து கொள்ள வேண்டிய உணவு தான். இதையே கொஞ்சம் வேற மாதிரி செய்து தாருங்கள் உங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதோ வெள்ளை காராமணி தோசை செய்முறை பதிவு.

Print
2.34 from 3 votes

வெள்ளை காராமணி தோசை | White Kaaramani Dosa Recipe In Tamil

தானிய வகைகளில் எதை எடுத்துக் கொண்டாலும் நம் உடலுக்கு அத்தனை ஆரோக்கியமும் சத்துக்களும் கிடைக்கக்கூடிய ஒன்று தான். நாம் தான் நேரமின்மை காரணத்தாலும் ருசிக்கு அடிமைப்பட்டு கிடந்ததாலும் இது போல் தானிய வகைகளை பெரும்பாலும் நாம் உணவில் சேர்த்துக் கொள்வதில்லை. இதில் எண்ணற்ற சத்துகள் உள்ளது. இதை அப்படியே வேக வைத்து தந்தால் குழந்தைகளுக்குக் பிடிக்காது. இந்த வெள்ளை காராமணி குழந்தைகளுக்கு மட்டும் அல்ல பெரியவர்களும் எடுத்து கொள்ள வேண்டிய உணவு தான். இதையே கொஞ்சம் வேற மாதிரி செய்து தாருங்கள் உங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதோ வெள்ளை காராமணி தோசை செய்முறை பதிவு.
Prep Time5 minutes
Active Time5 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: White Kaaramani Dosa
Yield: 4
Calories: 91kcal

Equipment

  • 1 தோசை கல்
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 1 கப் வெள்ளை காராமணி
  • 1/2 கப் வடித்த சாதம்
  • 2 பச்சை மிளகாய்
  • இஞ்சி சிறிதளவு தோல் சீவியது,
  • 1 ஸ்பூன் சோம்பு
  • 6 சின்ன வெங்காயம்
  • 2 தயிர் டேபிள் ஸ்பூன்,
  • மல்லித்தழை சிறிதளவு பொடியாக நறுக்கியது.

செய்முறை

  • நீங்கள் எதில் காராமணியை அளந்து எடுக்கிறீர்களா, அதே அளவில் பாதி அளவு, வேக வைத்த சாதத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள். 150 கிராம் காராமணியை எடுத்துக் கொண்டால் மேல் குறிப்பிட்டுள்ள அளவுகள் சரியாக இருக்கும்.
     
  • மறுநாள் காலை காராமணி தோசை செய்ய வேண்டும் என்றால், முதல் நாள் இரவே காராமணியை நன்றாக கழுவி விட்டு, தண்ணீரில் போட்டு ஊற வைத்து விட வேண்டும்.
  • மறுநாள் காலை ஒரு மிக்ஸி ஜாரில், வேகவைத்த சாதம், பச்சை மிளகாய், இஞ்சி, சோம்பு, தயிர், சின்ன வெங்காயம், மல்லித்தழை இவைகளை முதலில் போட்டு, ஒரு ஓட்டு ஓட்டி விட்டு, அதன் பின்பாக ஊற வைத்திருக்கும் காராமணியை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவு உப்பையும் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.
  • அதை மிக்ஸியில் இருந்து அகலமான பாத்திரத்தில் மாற்றி வைத்து, மாவு மிகவும் கெட்டியான பதத்தில் இருந்தால், கொஞ்சம் தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்து தோசை கல்லில், தோசை போல் வார்த்து சாப்பிட வேண்டியது தான்.
  •  
    இது மொறு மொறுவென்று இருக்காது. மொறு மொறுவென்று தோசை வேண்டும் என்று நினைப்பவர்கள், சிறிதளவு அரிசி மாவை தண்ணீரில் கரைத்து, தோசை மாவில் சேர்த்தும், சுட்டு சாப்பிடலாம்.

Nutrition

Serving: 2ns | Calories: 91kcal | Carbohydrates: 19g | Protein: 7.6g | Sodium: 84mg | Potassium: 198mg | Fiber: 4g | Iron: 0.1mg

இதையும் படியுங்கள் : கமகமனு ருசியான குடைமிளகாய் தோசை இரவு டிபனுக்கு இப்படி செய்து பாருங்கள்! 2 தோசை அதிகமாவே சாப்பிடுவாங்க!