Advertisement
சைவம்

ஒரே மாதிரியான சாம்பார் சாப்புட்டு போரடிச்சுடுச்சு அப்படின்னா இந்த மாதிரி வெள்ளை சாம்பார் ஒரு தடவை செஞ்சு பாருங்க.

Advertisement

எப்போவுமே நம்ம வீட்ல செவ்வாய்க்கிழமை வெள்ளிக்கிழமை நாட்கள் வந்தாலும் உங்க வீட்ல சாம்பார் தான் வைப்போம். அதே மாதிரி வீட்ல விசேஷங்கள் பண்டிகைகள் அப்படின்னு வந்தாலும் அதிகமாக சாம்பார் தான் செய்வோம் அந்த வகையில் எப்பவுமே ஒரே மாதிரியான சாம்பார் சாப்பிடாமல் கொஞ்சம் புதுசா ரொம்ப டேஸ்டா இருக்கக்கூடிய வெள்ளை சாம்பார் செஞ்சு பாருங்க.

இந்த வெள்ளை சாம்பார் நிறைய பேர் வீட்ல செய்வாங்க ஆனா ஒரு சிலருக்கு இது எப்படி செய்யறதுன்னு தெரியாது அவங்க இந்த மாதிரி செஞ்சா செம டேஸ்டா சூப்பராவே இருக்கும். வெள்ளை குருமா செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா வெள்ளை சாம்பார் செஞ்சு ஒரு தடவ சாதத்துக்கு போட்டு பிசைந்து சாப்பிட்டு பாருங்க டேஸ்ட் ரொம்பவே அட்டகாசமா இருக்கும். சாம்பார் பிடிக்காதவங்க கூட இந்த வெள்ளை சாம்பார் வச்சா கண்டிப்பாக விரும்பி சாப்பிடுவாங்க.

Advertisement

இதுல உங்களுக்கு பிடித்தமான எந்த காய்கள் வேணும்னாலும் சேர்த்துக்கலாம் ஆனா கத்திரிக்காய் சேர்த்து செஞ்சா இன்னும் டேஸ்டா இருக்கும். இந்த சாம்பார் செய்வது ரொம்பவே ஈஸி தான் இதுல காரத்துக்கு வெறும் பச்சை மிளகாய் மட்டும் சேர்த்தாலே போதும் காரமாகவும் இருக்கும் அதே நேரத்தில் டேஸ்ட்டாவும் இருக்கும். நீங்க எதிர்பார்க்காத வகையில் இந்த வெள்ளை சாம்பார் உடைய டேஸ்ட் இருக்கும். இப்ப வாங்க இந்த சூப்பர் டேஸ்டான வெள்ளை சாம்பார் சிம்பிளா எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்

வெள்ளை சாம்பார் | White Sambar Recipe In Tamil

Print Recipe
வெள்ளை சாம்பார் நிறைய பேர் வீட்ல செய்வாங்க ஆனா ஒரு சிலருக்கு இது எப்படி
Advertisement
செய்யறதுன்னு தெரியாது அவங்க இந்த மாதிரி செஞ்சா செம டேஸ்டா சூப்பராவே இருக்கும். வெள்ளை குருமா செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா வெள்ளை சாம்பார் செஞ்சு ஒரு தடவ சாதத்துக்கு போட்டு பிசைந்து சாப்பிட்டு பாருங்க டேஸ்ட் ரொம்பவே அட்டகாசமா இருக்கும். சாம்பார் பிடிக்காதவங்க கூட இந்த வெள்ளை சாம்பார் வச்சா கண்டிப்பாக விரும்பி சாப்பிடுவாங்க.
Course Breakfast, LUNCH
Cuisine tamil nadu
Keyword White Sambar
Prep Time 10 minutes
Cook Time 15 minutes
Total Time 25 minutes
Servings 4
Calories 328

Equipment

  • 1 கடாய்
  • 1 குக்கர்

Ingredients

  • 1 கப் துவரம் பருப்பு
  • 1/4 கப் பாசிப் பருப்பு
  • 1/4 கிலோ கத்தரிக்காய்
  • 8 பச்சை மிளகாய்
  • 100 கிராம் சின்ன வெங்காயம்
  • 1 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 3 தக்காளி
  • 2 காய்ந்தமிளகாய்
  • புளி சிறிய நெல்லிக்காய் அளவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • ஒரு பாத்திரத்தில் துவரம்பருப்பு பாசிப்பருப்பு இரண்டையும் சேர்த்து நன்றாக வேக வைக்கவும்
  • பிறகு தக்காளியை நறுக்கி அதில் சேர்த்து வேக வைக்கவும். கத்திரிக்காயை உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப வெட்டி அதில் சேர்த்து அதனுடன் பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளவும்
  • சின்ன வெங்காயத்தையும் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வேக வைக்கவும்
  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு கருவேப்பிலை பெருங்காயத்தூள் காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து சேர்த்துக் கொள்ளவும்
  • இப்பொழுது சுவையான வெள்ளை சாம்பார் தயார்

Nutrition

Serving: 400g | Calories: 328kcal | Carbohydrates: 79g | Protein: 23g | Sodium: 6.9mg | Potassium: 11.7mg | Vitamin C: 7.9mg | Calcium: 7mg | Iron: 2mg

இதையும் படியுங்க : ருசியான கேரளா ஸ்டைல் சாம்பார் செய்ய மணமணக்கும் கேரளா ஸ்டைல் சாம்பார் பொடி இப்படி செய்து பாருங்க!

Advertisement
Ramya

Recent Posts

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

1 மணி நேரம் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

2 மணி நேரங்கள் ago

ருசியான கேழ்வரகு முருங்கைக்கீரை அடை டிபனாகவும் சாப்பிடலாம் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்!

தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…

4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

6 மணி நேரங்கள் ago

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

16 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

16 மணி நேரங்கள் ago