Home சைவம் ரசம் சாதம், சாம்பார் சாதமுடன் சாப்பிட பக்காவான கருணைக்கிழங்கு வறுவல் இப்படி செஞ்சி ட்ரை பண்ணி...

ரசம் சாதம், சாம்பார் சாதமுடன் சாப்பிட பக்காவான கருணைக்கிழங்கு வறுவல் இப்படி செஞ்சி ட்ரை பண்ணி பாருங்க!

கருணைக்கிழங்கு சுவையை மிஞ்சிய ஒரு கிழங்கு இருக்கவே முடியாது. கருணைக்கிழங்கை இந்த மாதிரி செஞ்சு பாருங்க அரிக்கவும் செய்யாது, சுவையும் அட்டகாசமாக இருக்கும். புளி பேஸ்ட் சேர்த்துள்ளதால் கருணைக்கிழங்கில் இருக்கும் அரிப்பு தன்மையை நீக்கி நல்ல ஒரு சுவையை கொடுக்கும்.கருணைக்கிழங்கு வறுவல் இந்த முறையில் செய்து கொடுத்தால் இன்னும் கொஞ்சம் சாப்பாடு போடுங்க என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.  அந்த அளவிற்கு ருசியாக இருக்கும்.

-விளம்பரம்-

கருணைக்கிழங்கு சாப்பிடுவதால், கபம், வாதம், ஆகியவை குணப்படுத்துகின்றன. பசியை தூண்டி, இரைப்பைக்கு பலம் சேர்க்கும். மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள், அதை முற்றிலும் குணப்படுத்த விரும்பினால், கருணைக் கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வர நிவாரணம் கிடைக்கும். உடல் உஷ்ண மிகுதியால் ஏற்படும் நோய்களில் இருந்து காக்க வல்லது.

நாம வழக்கமா வீட்டில் செய்கிற கருணைக்கிழங்கு வறுவலுக்கும், இந்த முறையில் செய்யப்படும்  கருணைக்கிழங்கு வறுவலுக்கும் நிறையவே வித்தியாசம் இருக்கும். எப்படி  என்கிற குழப்பமும், ஆர்வமும் சாப்பிடும் போது நமக்கு அதிகமாகவே இருக்கும். இந்த வறுவல் கறியையே மிஞ்சுகிற டேஸ்டுக்கு இருக்கும். நாவூறாத குறை தான். ஆனா இது ஒண்ணும் அவ்ளோ பெரிய ரகசியம் எல்லாம் இல்லைங்க! ரொம்ப ரொம்ப ஈசியான ஒரு விஷயம் தான்.

இனி இதே மாதிரி தான் நீங்கள் கருணைக்கிழங்கு வறுவல் செய்ய ஆரம்பிப்பீங்க. அந்த அளவிற்கு டேஸ்டியா இருக்கக்கூடிய இந்த கருணைக்கிழங்கு வறுவல் ரெசிபியை இதே மாதிரி நீங்களும் ட்ரை பண்ணி அசத்துங்க சுலபமா நம்ம வீட்டிலேயே அந்த சுவையான கருணைக்கிழங்கு வறுவலை எப்படி செய்யலாம் என்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

Print
5 from 3 votes

கருணைக்கிழங்கு வறுவல் | Elephant Yam Fry In Tamil

வீட்டில் செய்கிற கருணைக்கிழங்கு வறுவலுக்கும், இந்த முறையில் செய்யப்படும் கருணைக்கிழங்கு வறுவலுக்கும் நிறையவே வித்தியாசம் இருக்கும். எப்படி  என்கிற குழப்பமும், ஆர்வமும் சாப்பிடும் போது நமக்குஅதிகமாகவே இருக்கும். இந்த வறுவல் கறியையே மிஞ்சுகிற டேஸ்டுக்கு இருக்கும். நாவூறாதகுறை தான். ஆனா இது ஒண்ணும் அவ்ளோ பெரிய ரகசியம் எல்லாம் இல்லைங்க! ரொம்ப ரொம்ப ஈசியானஒரு விஷயம் தான். இனி இதே மாதிரி தான் நீங்கள் கருணைக்கிழங்கு வறுவல் செய்ய ஆரம்பிப்பீங்க. அந்த அளவிற்கு டேஸ்டியா இருக்கக்கூடிய இந்த கருணைக்கிழங்கு வறுவல் ரெசிபியை இதே மாதிரி நீங்களும் ட்ரை பண்ணி அசத்துங்க சுலபமாநம்ம வீட்டிலேயே அந்த சுவையான கருணைக்கிழங்கு வறுவலை எப்படி செய்யலாம் என்று இப்பதிவில்தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Fry, LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Elephant Yam Fry
Yield: 4
Calories: 206kcal

Equipment

  • 1 தோசை கல்
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 1/2 கிலோ கருணைக்கிழங்கு
  • சமையல் எண்ணெய் தேவையான அளவு
  • 2 டீஸ்பூன் குழம்பு மிளகாய் தூள்
  • 1/2 டீஸ்பூன் சிக்கன் 65 மசாலா
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் புளி கரைசல்
  • உப்பு தேவையான அளவு
  • தண்ணீர் தேவையான அளவு
  • 1 கொத்து கருவேப்பிலை

செய்முறை

  • முதலில் கருணைக்கிழங்கை தோல் எல்லாம் நன்கு சீவி எடுத்து கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். கருணைக்கிழங்கை சீவும் பொழுது கைகள் அரிக்கும் என்பதால் கைகளில் தேங்காய் எண்ணெய் தடவிக் கொள்ளுங்கள்.
  • சுத்தம் செய்து வைத்த கருணைக்கிழங்கை பெரிய பெரிய துண்டுகளாக பட்டை பட்டையாக நறுக்கி அதை குக்கரில் அல்லது ஏதாவது ஒரு பாத்திரத்தில் போட்டு ஐந்து நிமிடம் முக்கால் பாகம் வேக எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • குக்கரில் ஒரு விசில் விட்டு எடுத்தாலே சரியாக இருக்கும். கருணைக்கிழங்கை வேக வைக்கும் பொழுது கால் ஸ்பூன் மஞ்சள் தூள், கால் ஸ்பூன் உப்பு போட்டு வேக வையுங்கள். குழம்பு மிளகாய்த்தூள் மற்றும் சிக்கன் 65 மசாலா தேவையான அளவிற்கு உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளுங்கள்.
  • திக்கான புளி பேஸ்ட் சேர்த்து கைகளால் பேஸ்ட் போல கரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் கொஞ்சம் போல நீங்கள் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். மீன் வறுவலுக்கு செய்யும் பொழுது மசாலா எப்படி இருக்குமோ, அந்த அளவிற்கு இருந்தால் சரியாக இருக்கும். பின்னர் ஒவ்வொரு கருணைக்கிழங்கு துண்டுகளையும் எடுத்து மசாலா தடவி வைத்துக் கொள்ளுங்கள்.
  • மசாலா தடவிய கருணைக்கிழங்கை பத்து நிமிடம் அப்படியே ஊற விட்டு விடுங்கள்.10 நிமிடத்திற்கு பிறகு ஒரு பேன் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நாலு டீஸ்பூன் அளவிற்கு எண்ணெய்யை சுற்றிலும் ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் ஒரு கொத்து கருவேப்பிலையை போட்டு பொரிய விடுங்கள். கருவேப்பிலையின் வாசம் சேரும் பொழுது ரொம்பவே ருசியாக இருக்கும்.
  • இப்போது ஒவ்வொரு துண்டுகளையும் எடுத்து பரப்பி வையுங்கள். சுற்றிலும் எண்ணெயை விடுங்கள். ஒரு ஐந்து நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். ஒரு புறம் நன்கு சிவக்க வெந்ததும், மறுபுறம் திருப்பி போடுங்கள். அவ்வளவுதான் இதை எடுத்து சுடச்சுட சாதத்துடன் பரிமாறி பாருங்கள், அட்டகாசமாக இருக்கும்.

Nutrition

Serving: 250g | Calories: 206kcal | Carbohydrates: 67g | Protein: 26g | Saturated Fat: 2.1g | Sodium: 8mg | Potassium: 328mg | Sugar: 2g