புதினா சாதத்தை மிக மிக சுலபமாக 10 நிமிடத்தில் இப்படியும் செய்யலாம் உடம்புக்கு ஆரோக்கியம் தரக்கூடிய புதினாக்கீரையை வாரத்தில் ஒரு முறையாவது நம்முடைய உணவோடு சேர்த்துக்கொள்ள வேண்டும். பெரும்பாலும் குழந்தைகள் புதினா சட்னியை அவ்வளவு
இதையும் படியுங்கள் : ருசியான பட்டர் பீ்ன்ஸ் சாதம் இப்படி செய்து பாருங்கள்!
விருப்பமாக சாப்பிட மாட்டார்கள். ஆனால் புதினாவை வைத்து இப்படி புதினா சாதம், ஒரு வெரைட்டி ரைஸ் செய்து கொடுத்தால் அவர்கள் விருப்பமாக சாப்பிடுவார்கள். லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி. சட்டென்று பத்து நிமிஷத்தில புதினா சாதம் மிக சுவையாக செய்வது எப்படி தெரிந்து கொள்வோமா.
சுவையான புதினா சாதம் | Pudina Sadam Recipe in Tamil
புதினா சாதத்தை மிக மிக சுலபமாக 10 நிமிடத்தில் இப்படியும் செய்யலாம் உடம்புக்கு ஆரோக்கியம் தரக்கூடிய புதினாக்கீரையை வாரத்தில் ஒரு முறையாவது நம்முடைய உணவோடு சேர்த்துக்கொள்ள வேண்டும். பெரும்பாலும் குழந்தைகள் புதினா சட்னியை அவ்வளவு விருப்பமாக சாப்பிட மாட்டார்கள். ஆனால் புதினாவை வைத்து இப்படி புதினா சாதம், ஒரு வெரைட்டி ரைஸ் செய்து கொடுத்தால் அவர்கள் விருப்பமாக சாப்பிடுவார்கள். லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி. சட்டென்று பத்து நிமிஷத்தில புதினா சாதம் மிக சுவையாக செய்வது எப்படி தெரிந்து கொள்வோமா.
Yield: 4 People
Calories: 115kcal
Equipment
- 1 குக்கர்
- 1 பெரிய பவுள்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
புதினா சாதம் செய்ய
- 1 கப் தேங்காய் பால்
- 1 பெரிய வெங்காயம் நறுக்கியது
- 1/4 Tsp மஞ்சள் தூள்
- 3 கப் தண்ணீர்
அரைக்க
- 2 கப் புதினா இலை
- 1/2 கப் கொத்த மல்லி
- 2 பச்சை மிளகாய்
- 1 Tsp இஞ்சி பூண்டு விழுது
தாளிக்க
- 2 Tbsp எண்ணெய்
- 2 பட்டை
- 2 கிராம்பு
- 2 முழு ஏலக்காய்
- 1 பிரியாணி இலை
- 1 Tsp சோம்பு
செய்முறை
- முதலில் அரிசியைக் கழுவி 15 நிமிடங்கள் ஊற விட வேண்டும்.வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். புதினா, கொத்துமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
- குக்கரில் எண்ணையை விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, சோம்பு ஆகியவற்றைப் போட்டு சற்று வறுக்க வேண்டும்.
- பின் வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள புதினா விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
- பின்னர் அதில் ஊற வைத்த அரிசியை எடுத்து தண்ணீரை நன்றாக வடித்து விட்டு சேர்க்க வேண்டும். அத்துடன் தேங்காய் பால், மூன்று கப் தண்ணீர் (தேங்காய் பால் மற்றும் தண்ணீர் இரண்டும் சேர்ந்து 4 கப் அளவிற்கு இருக்க வேண்டும்.) விட்டு கிளறி விட வேண்டும்.
- அதன் பின்பு குக்கரை மூடி வைத்து, மூன்று விசில் வரும் வரை வேக விட்டு இறக்கி வைக்க வேண்டும். பின் சற்று ஆறிய பின் குக்கரைத் திறந்து, எலுமிச்சம் பழச்சாற்றை சேர்த்து கிளற வேண்டும்.
- அதன் மேல் சிறிது புதினா இலைகள் மற்றும், எலுமிச்சம் பழத்துண்டுகளை வைத்து பரிமாற வேண்டும். அவ்வளவு தான் சுட சுட புதினா கீரை சாதம் இனிதே தயார்.
Nutrition
Serving: 1.2KG | Calories: 115kcal | Carbohydrates: 62g | Fat: 0.1g | Cholesterol: 0.5mg | Fiber: 10g | Sugar: 0.6g | Iron: 2mg