நம்முடைய வாழ்க்கையில் நமக்கு பலவிதமான பிரச்சனைகள் இருக்கும் நம் குடும்பத்தில் இருக்கும் அனைவருக்குள்ளும் ஏதாவது ஒரு மனஸ்தாபங்கள் இருக்கும். அப்படி இருப்பதால் ஒவ்வொருவரும் புரிந்து நடந்து கொண்டால் வீட்டில் சண்டைகளை வராது புரிந்து கொள்ளாமல் இருப்பதால் தான் சண்டைகளும் பிரச்சினைகளும் நிறைய வருகிறது எனவே அவைகள் அனைத்தும் நீங்குவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
நவகிரகங்கள்

இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு குணம் இருக்கும் அந்த குணத்திற்கு காரணமாகிறது தான் நவகிரகங்கள். நவகிரகங்கள் எந்தெந்த இடத்தில் எப்படி இருக்கிறார்களோ அதற்கு ஏற்ற மாதிரி தான் மனிதர்களுடைய குணநலன்களும் இருக்கும் அதனால் தான் ராசி நட்சத்திரத்தை வைத்து ஒருவருடைய குணங்களை கூறுகிறார்கள் அப்படி இருந்தால் எதற்கெடுத்தாலும் பிறரிடம் சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார்கள் என்றால் சந்திர பகவான் அதற்கு காரணமாக திகழ்வார்.
சந்திர பகவான்

மனதுக்கு அதிபதியாக திகழ்பவர்தான் சந்திர பகவான் மனம் சொல்கிறது அப்படியே கேட்டு நடக்கிறோம் அதனால் பிரச்சனைகள் ஏற்படுகின்றது என்றால் சந்திர பகவான் அந்த ஜாதகக்காரருக்கு சாதகமாக இல்லை என்று அர்த்தம்.புரிதல் இல்லாமல் தான் குடும்பத்தில் சண்டைகள் ஏற்படும். புரிதலுக்கு அதிபதியாக திகழ்பவரும் சந்திர பகவான். எனவே வீட்டில் அடிக்கடி சண்டை ஏற்பட்டால் சந்திர பகவானுக்குரிய பாதிப்புகள் ஏதும் இருக்கிறதா என்பதை நாம் பார்க்க வேண்டும்.
வீடு மகிழ்ச்சியாக இருக்க வாங்கி வைக்க வேண்டிய செடி
வாஸ்து ரீதியாக வீட்டில் சில விஷயங்களை செய்தால் வீட்டில் சண்டைகள் வராது. அதற்கு நாம் சந்திர பகவானுக்குரிய ஒரு செடியை வாங்கி வைக்க வேண்டும் சந்திர பகவானின் ஆதிக்கம் நிறைந்த செடி என்றால் அது பன்னீர் செடிதான். பன்னீர் இலைகள் இருக்கக்கூடிய சுடிதார் பன்னீர் செடி என்று நாம். திருச்செந்தூரில் பன்னீர் இலையில் தான் விபூதி பிரசாதத்தை கொடுப்பார்கள் இந்த குறிப்பிட்ட பன்னீர் செடியை நம் வீட்டில் வைத்து தண்ணீர் ஊற்றி வளர்ப்பதின் மூலம் சந்திர பகவானுடைய ஆதிக்கம் நிறைந்து வீட்டில் சண்டைகள் வராது. தெற்கு அல்லது மேற்கு திசையில் இந்த செடியை வைப்பதால் குடும்பத்தில் சந்திர பகவானின் ஆதிக்கம் நிறைந்திருக்கும் எளிமையான இந்த வாச பரிகாரத்தை செய்து குடும்பத்தில் சண்டை சச்சரவுகளை நீக்கி மகிழ்ச்சியோடு வாழுங்கள்.
இதனையும் படியுங்கள் : உங்கள் வீட்டில் துளசி செடி உள்ளது எனில் துளசி செடியை மறந்தும் இந்த இடங்களில் வச்சுடாதீங்க!





