- Prep
- 10 min
- Cook
- 15 min
- Serves
- 4
- Cuisine
- Afganistan
- Course
- dinner
ஆப்கானி பன்னீர் குக் வித் கோமாளி இந்த சீசன் பாக்குற எல்லாருக்குமே தெரிஞ்சிருக்கும். பாடகி பூஜா செஞ்ச இந்த சூப்பரான ஆப்கானி பன்னீரை நம்மளும் செஞ்சு பார்த்தா நல்லா இருக்கும் அப்படின்னு தோணுதா. அப்போ கவலையே படாதீங்க ரொம்ப ரொம்ப சுலபமா இதே செய்முறைல இந்த பொருட்களை வைத்து சூப்பரா செஞ்சு முடிச்சிடலாம். டேஸ்ட் ரொம்பவே டிஃப்ரண்டா சூப்பரா இருக்கும். இந்த ஆப்கானிப் பன்னீர நீங்க சப்பாத்தி பூரி எல்லாத்துக்கும் சைடு டிஷ்ஷா வைத்து சாப்பிடலாம்.
பன்னீர் வச்சு எப்பவுமே ஒரே மாதிரியா பன்னீர் பிரைட் ரைஸ் பன்னீர் கிரேவி பன்னீர் பட்டர் மசாலா பன்னீர் பிரியாணி செஞ்சு போர் அடிச்சிடுச்சா அப்போ இந்த மாதிரி சூப்பரான ஆப்கானி பன்னீர் ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க. வீட்ல இருக்குற சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. வீட்டுக்கு வர்ற விருந்தாளிகளுக்கும் வித்தியாசமா இந்த டிஷ்ஷா செஞ்சு குடுங்க கண்டிப்பா பாராட்டிட்டு தான் போவாங்க. இப்ப வாங்க இந்த சூப்பரான ஆப்கானி பன்னீர் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ருசியான ஹைதராபாத்தி பன்னீர் மசாலா ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க கொஞ்சம் கூட மீதமிருக்காது!!
Ingredients
Method
பன்னீரை நீளவாக்கில் நறுக்கி அதில் உப்பு மிளகாய் தூள் மஞ்சள் தூள் கரம் மசாலா இஞ்சி பூண்டு விழுது அனைத்தும் ஒரு டீஸ்பூன் அளவிற்கு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்த கலந்து வைத்துள்ள பன்னீரை சேர்த்து இரண்டு பக்கமும் பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
அதே எண்ணெயில் நறுக்கிய பெரிய வெங்காயம் இஞ்சி பூண்டு கொத்தமல்லி இலைகள் மிளகு, முந்திரி அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கி ஆறவைத்த அரைத்துக் கொள்ளவும்.
பிறகு அதனுடன் மிளகாய் தூள் கரம் மசாலா மஞ்சள் தூள் சிறிதளவு உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் சேர்த்து அரைத்து வைத்த விழுதை சேர்த்து அதனுடன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து 10 நிமிடம் கொதிக்க வைத்த பிறகு பொறித்து வைத்துள்ள பன்னீரை சேர்த்து இறக்கினால் சுவையான ஆப்கானி பன்னீர் தயார்.






