- Prep
- 15 min
- Cook
- 15 min
- Total
- 30 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- dinner
பொதுவாக நாம் அனைவருக்குமே பால் சார்ந்த உணவு என்றால் மிகவும் பிடிக்கும். அப்படி பால் உணவு மிகவும் பிடித்த நபர்களுக்கு மிக மிக பிடித்து விரும்பி சாப்பிடுவது பன்னீர் தான். பன்னீர் பிரியர்கள் அனைவரின் உணவு பட்டியலிலும் இந்த பன்னீர் கிரேவி இடம் பெற்றிருக்கும். அப்படி பன்னீர் பிரியர்கள் அனைவருக்கும் பிடித்த பன்னீரை ஒரே முறையிலேயே செய்து சுவைத்து சலித்து போய்விட்டதா. அப்படி என்றால் இன்றைய பதிவு உங்களுக்கு தான்.
இன்றைய பதிவில் மிகவும் சுவையான ஹைதராபாத் பன்னீர் மசாலா செய்வது எப்படி என்பதை பற்றி அறிந்து கொள்வோம். எந்த ஒரு சாப்பாட்டிற்கும் பன்னீர் வச்சு சாப்பிடும் பழக்கம் நம்ம எல்லாருக்குமே இருக்கும். அப்படி இந்த ஹைதராபாத் ஸ்டைலில் செய்யும் பன்னீர் மசாலா எல்லாருக்கும் பிடிக்கும். நிறைய பன்னீர் ரெசிபிகள் இருந்தாலும் 65 , வறுவல், தந்தூரிகள் எப்படி பல வகைகளில் பன்னீர் இருந்தாலும், மசாலாக்கள் இருந்தாலும் இந்த ஹைதராபாத் பன்னீர் மசாலா ஒரு டைம் நீங்க ட்ரை பண்ணி பார்த்தீங்கனா உங்களுக்கு ரொம்பவே பிடிக்கும்.
சுவையான இந்த ஹைதராபாத் பன்னீர் மசாலா நீங்க செஞ்சு கொடுக்கும்போது உங்க வீட்ல இருக்கிற எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். இந்த பன்னீர் மசாலா சப்பாத்தி, பரோட்டா, நாண், போன்றவற்றுடன் சுவையாக இருக்கும். இதனை சுலபமாகவும் விரைவாகவும் செய்யலாம். பன்னீர் மசாலா வட இந்தியாவில் இருந்து பெறப்பட்ட உணவு வகை. இது பன்னீர் பட்டர் மசாலாவில் இருந்து வேறுபட்டது. இதனை வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு சுலபமாக செய்யலாம். சப்பாத்தி, பரோட்டா, தவிர்த்து சீரக சாதம் வெஜிடபிள் பிரியாணி தக்காளி சாதம் ஆகியவற்றுடன் இது சுவையாக இருக்கும். இப்போது இந்த பன்னீர் வகைகளில் ஒன்றான ஹைதராபாத் பன்னீர் மசாலா எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
இதனையும் படியுங்கள் : அட்டகாசமான ருசியில் செட்டிநாடு பன்னீர் கிரேவி இப்படி செய்து பாருங்க! சப்பாத்தி மற்றும் சாதத்திற்கு பக்காவான கிரேவி!
Ingredients
Method
முதலில் பன்னீரை துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய் விட்டு பன்னீர் துண்டுகளை சேர்த்து லேசாக பிரட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பின் அதே கடாயில் சிறிது வெண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி, பின் தக்காளி, மிளகாய்த்தூள், சோம்பு தூள், உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேகவிடவும்.
பின் இவை நன்கு வதங்கியதும் இதனுடன் முந்திரி சேர்த்து கலந்து அடுப்பை அணைத்து விடவும்.
பின் இவை நன்கு ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
அதன்பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய் விட்டு அரைத்து வைத்துள்ள கலவையை ஊற்றி பச்சை வாசனை போகும் வரை நன்கு கொதிக்க விடவும்.
பின் பன்னீர் சேர்த்து நன்கு கலந்து விடவும். சிறிதளவு கசூரி மேத்தி சேர்த்து நன்கு கலந்து ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான ஹைதராபாத் பன்னீர் மசாலா தயார்.






