Advertisement
ஆன்மிகம்

அக்னி நட்சத்திரம் 2024 எப்போது? தேதி, நேரம்.. முழு விவரம் இதோ!

Advertisement

கோடை தொடங்கியதுமே பள்ளி விடுமுறை, மாம்பழம், தர்பூசணி என நினைவுக்கு வரும். அதோடு கத்திரி வெயில் காலம் சுட்டெரிக்குமே என்பதையும் யோசிப்போம். பஞ்சாங்கத்தில் பரணி 3 ஆம் காலில் சூரியன் பிரவேசிக்கும் காலத்தை தான் அக்னி நட்சத்திரம் என்று சொல்லப்படுகிறது. ஜோதிடம் மற்றும் பஞ்சாங்கத்தின்படி, பரணி நட்சத்திரம் தொடங்கி கிருத்திகை நட்சத்திரம் வரை சூரியனின் பயணிக்கும் காலமே அக்னி நட்சத்திரம் என்றும் கத்தரி வெயில் எனவும் அழைக்கப்படுகிறது.

ஜோதிட சாஸ்திர கணிப்பு படி பொதுவாக 21 நாட்கள் அக்னி நட்சத்திர காலகட்டம் இருக்கும். இவை மூன்றாகப் பிரிக்கப்படுகிறது. முதல் 7 நாட்கள் வெப்பத்தின் அளவு மெதுவாக அதிகரிக்கத் தொடங்கும். மத்தியில் இருக்கும் 7 நாட்கள் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருக்கும். கடைசி 7 நாட்களில் மெதுவாக வெப்ப அளவு குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்பும் என்பது ஜோதிடத்தில் உள்ளவர்கள் கூறுகிறார்கள். இதன்படியே இந்த ஆண்டு வரும் மே மாதம் 4ம் தேதி தொடங்குகிறது. இந்த முறை 25 நாட்கள் அக்னி வெயில் இருக்கும் என்கிறார்கள்.

Advertisement

அக்னி நட்சத்திரம் எப்போது?

வழக்கமாக தமிழ்நாட்டில் கோடை காலம் என்றாலே வெயில் சுட்டெரிக்கும். அதுவும் அக்னி நட்சத்திர காலத்தில் தமிழ்நாட்டில் வெயில் மிக கடுமையாக வாட்டி வதைக்கும். பஞ்சாங்கத்தில் பரணி 3 ஆம் காலில் சூரியன் பிரவேசிக்கும் காலத்தைதான் அக்னி நட்சத்திரம் என்று சொல்லப்படுகிறது. அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் மே மாதம் 4-ம் தேதி தொடங்கி 28-ம் தேதியுடன் முடிவடைகிறது.

அக்னி நட்சத்திரத்தில் என்னென்ன செய்யலாம்

திருமணம், நிச்சயதார்த்தம், சீமந்தம், பெண் பார்த்தல், கட்டிய வீட்டில் குடிபுகுதல், வாடகை வீடு மாறுதல், உபநயனம் ஆகியவை செய்வதில் எந்த தவறும் இல்லை. சுப விசேஷங்களுக்கு பேச்சுவார்த்தை நடத்தலாம்.

அக்னி நட்சத்திரத்தில் செய்ய கூடாதவை

அக்னி நட்சத்திர காலத்தில் எந்த விதமான சுப காரியங்களும் தொடங்க மாட்டார்கள். புதிய பேச்சுவார்த்தைகளும் துவக்க மாட்டார்கள். ஜோதிட சாஸ்திரத்தில் இது அக்னி நட்சத்திர தோஷம் என்று அழைக்கப்படுகிறது. வீடு கட்ட

Advertisement
ஆரம்பிப்பது மற்றும் அதற்கான கிணறு வெட்டுதல், பூமி பூஜை செய்வது, விவசாய விதைப்பு வேலைகள், மரம் வெட்டுதல், குழந்தைகளுக்கு காது குத்தி மொட்டையடித்தல், கிரகப்பிரவேசம், பந்தல் கால் நடுவது, தெய்வத் திருவுருவங்களைப் பிரதிஷ்டை செய்வது போன்றவைகளைத் தவிர்ப்பது நல்லது.

அக்னி நட்சத்திரத்தை சமாளிக்க சில டிப்ஸ்

முக்கியமான தேவை இல்லாத பட்சத்தில் சூரியன் உச்சி வானில் இருக்கும்போது வெளியே செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

Advertisement

எலுமிச்சை பழத்தில் ஜூஸ் போட்டு குடியுங்கள். அது உங்கள் உடலுக்குத் தேவையான உடனடி ஆற்றலை அளிக்கும்.

உடலில் வியர்வைத் தங்குவதால்தான் வியர்க்குரு ஏற்படுகிறது. இதைத் தடுக்க, தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் குளிக்க வேண்டும்.

பச்சை காய்கறிகள், வெள்ளரிக்காய், ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ், வெங்காயம் மற்றும் பீன்ஸ் போன்ற நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளை உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்ளலாம்.

கோடையில் அதிக உப்பு, காரம், எண்ணெய் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும்.

அன்றாடம் சாப்பிடும் பால் பொருட்களான பால், சீஸ், தயிர் போன்றவையும் உடல் வெப்பத்தை அதிரிக்கும். எனவே இதனை கோடையில் அளவாக சாப்பிடுவது நல்லது.

அசைவ உணவுப் பிரியர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். அத்தகையவர்கள் கோடையில் சிக்கன், நண்டு, இறால் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அவை சிலசமயங்களில் சூட்டை கிளப்பி வயிற்றுப் பிரச்சனைகள் ஏற்படும்.

இதனையும் படியுங்கள் : மேஷத்தில் வர போகும் கஜலட்சுமி யோகத்தால் யோகத்தை பெறப்போகும் மூன்று ராசிகாரர்கள்

Advertisement
Prem Kumar

Recent Posts

மீந்து போன சப்பாத்தியை வீணாக்காமல் அதில், சூப்பரான சப்பாத்தி நூடுல்ஸ் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

பெரும்பாலானோரின் வீட்டில் இரவு நேரத்தில் சப்பாத்தி தான் டின்னராக இருக்கும். அப்படி உங்கள் வீட்டில் இரவு செய்து சப்பாத்தியானது மீதம்…

5 மணி நேரங்கள் ago

வேலை பார்க்கும் இடத்தில் நல்ல பெயர் வாங்குவதற்கு ஒரு எளிமையான பரிகாரம்

இந்த உலகில் உள்ள அனைவரும் நேர்மையாக வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று அனைவரிடமிருந்தும் பாராட்டுக்களை…

6 மணி நேரங்கள் ago

மலாய் கோஃப்தா  ஒரு முறை இப்படி ட்ரை பன்னி பாருங்க சட்டி நிறைய செய்தாலும் காலியாகும்!

சப்பாத்தி என்றாலே அதற்கு சைட் டிஷ் ஆக குருமா தக்காளி சட்னி போன்றவை தான் அதிகமாக செய்வோம். அதையும் தவிர்த்து…

8 மணி நேரங்கள் ago

கொய்யாப்பழ ரோஸ் மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்து! இனி அடிக்கடி இந்த சுவையான மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை…

10 மணி நேரங்கள் ago

கேரளா ஸ்பெஷல் ருசியான நேந்திரம் பழம் பஜ்ஜி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!!

மழைக்காலத்தில் அல்லது டீக்கடைகளில் நமக்கு பிடித்த ஒன்று வடை அதுவும் சூடான சுவையான வடை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது அதிலும்…

11 மணி நேரங்கள் ago

செல்வம் பெருகிக் கொண்டே இருக்க குபேரனை எப்படி வழிபட வேண்டும்

செல்வம் பலமடங்கு பெருகவும், நமக்கு தேவையான செல்வத்தை சம்பாதிக்கவும், நாம் சேமித்து வைத்துள்ள செல்வத்தை பாதுகாக்கவும், எப்போதும் நம் வீட்டில்…

12 மணி நேரங்கள் ago