இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் பன்னீரை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியெனில் உங்கள் வீட்டில் பன்னீர் மற்றும் பாதாம் இருந்தால், அதைக் கொண்டு சுவையான பாதாம் பன்னீர் கிரேவி செய்யுங்கள்.
இந்த பன்னீர் கிரேவி சப்பாத்திக்கு மட்டுமின்றி, பூரிக்கும் அட்டகாசமாக இருக்கும். இந்த கிரேவி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுமாறு இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். இதனை சுலபமாகவும் விரைவாகவும் செய்யலாம். பன்னீர் கிரேவி வட இந்தியாவில் இருந்து பெறப்பட்ட உணவு வகை.
இது பன்னீர் பட்டர் மசாலா வில் இருந்து வேறுபட்டது. இதனை வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு சுலபமாக செய்யலாம். சப்பாத்தி, பரோட்டா, தவிர்த்து சீரக சாதம் வெஜிடபிள் பிரியாணி தக்காளி சாதம் ஆகியவற்றுடன் இது சுவையாக இருக்கும். பன்னீர் கிரேவி என்பது அருமையான தொட்டுக்கறி ஆகும். சுவையான எளிய முறையில் பன்னீர் கிரேவி செய்யும் முறை பற்றிப் பார்க்கலாம்.
பாதாம் பனீர் கிரேவி | Almond Paneer Gravy Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 2 ஸ்பூன் மல்லி விதை தனியா
- 1 ஸ்பூன் சீரகம்
- 1/2 ஸ்பூன் சோம்பு
- 1/2 ஸ்பூன் மிளகு
- 3 வரமிளகாய்
- 2 பெரிய வெங்காயம்
- 2 தக்காளி
- 2 பச்சை மிளகாய்
- 6 பல் பூண்டு
- 1 துண்டு இஞ்சி
- 2 சின்னபட்டை
- 2 ஏலக்காய்
- 1 பாக்கெட் பனீர்
- 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள்
- எண்ணெய் தேவைக்கு
- மல்லிதழை சிறிதளவு
- 15 பாதாம்
செய்முறை
- முதலில் கடாயை அடுப்பில் வைத்து மல்லி விதை, சீரகம், சோம்பு, மிளகு, வரமிளகாய், பாதாம் முதலியவற்றை வறுக்க எடுத்து வைத்துக் கொள்ளவும். அவை ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- பனீரை எடுத்து துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- பின் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில்வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை,ஏலக்காய் போடவும். அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
- மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய் நன்கு வதங்கியதும், வெங்காயம், தக்காளி அரைத்ததைச் சேர்க்கவும்.
- பின் அரைத்த மசாலா சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விடவும். பின் கட் பண்ணிய பனீர் சேர்க்கவும். நன்கு கொதித்து கிரேவி பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். பின் இறக்கி மல்லிதழை தூவவும்.
- சுவையான, ஆரோக்கியமான பாதாம் பனீர் கிரேவி ரெடி. சப்பாத்தி, பரோட்டா, தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும்.