Advertisement
சைவம்

கெட்டியான பாதாம் பனீர் கிரேவி தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள, இப்படி செஞ்சி!பாருங்க|

Advertisement

இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் பன்னீரை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியெனில் உங்கள் வீட்டில் பன்னீர் மற்றும் பாதாம் இருந்தால், அதைக் கொண்டு சுவையான பாதாம் பன்னீர் கிரேவி செய்யுங்கள்.

 இந்த பன்னீர் கிரேவி சப்பாத்திக்கு மட்டுமின்றி, பூரிக்கும் அட்டகாசமாக இருக்கும். இந்த கிரேவி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுமாறு இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். இதனை சுலபமாகவும் விரைவாகவும் செய்யலாம். பன்னீர் கிரேவி வட இந்தியாவில் இருந்து பெறப்பட்ட உணவு வகை.

Advertisement

இது பன்னீர் பட்டர் மசாலா வில் இருந்து வேறுபட்டது. இதனை வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு சுலபமாக செய்யலாம். சப்பாத்தி, பரோட்டா, தவிர்த்து சீரக சாதம் வெஜிடபிள் பிரியாணி தக்காளி சாதம் ஆகியவற்றுடன் இது சுவையாக இருக்கும். பன்னீர் கிரேவி என்பது அருமையான தொட்டுக்கறி ஆகும். சுவையான எளிய முறையில் பன்னீர் கிரேவி செய்யும் முறை பற்றிப் பார்க்கலாம்.

பாதாம் பனீர் கிரேவி | Almond Paneer Gravy Recipe In Tamil

Print Recipe
பன்னீர் கிரேவி சப்பாத்திக்கு மட்டுமின்றி, பூரிக்கும் அட்டகாசமாக இருக்கும். இந்த கிரேவி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுமாறு இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். இதனை சுலபமாகவும் விரைவாகவும் செய்யலாம். பன்னீர் கிரேவி வட இந்தியாவில் இருந்துபெறப்பட்ட உணவு வகை. இது பன்னீர் பட்டர் மசாலா வில் இருந்து வேறுபட்டது. இதனை வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு சுலபமாக செய்யலாம். சப்பாத்தி,
Advertisement
பரோட்டா, தவிர்த்து சீரக சாதம் வெஜிடபிள் பிரியாணி தக்காளி சாதம் ஆகியவற்றுடன் இது சுவையாக இருக்கும். பன்னீர் கிரேவி என்பது அருமையான தொட்டுக்கறி ஆகும். சுவையான எளிய முறையில் பன்னீர் கிரேவி செய்யும் முறை பற்றிப் பார்க்கலாம்.
Course curry, Gravy
Cuisine tamil nadu
Keyword Almond Paneer Gravy
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 615

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 2 ஸ்பூன் மல்லி விதை தனியா
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1/2 ஸ்பூன் சோம்பு
  • 1/2 ஸ்பூன் மிளகு
  • 3 வரமிளகாய்
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 2 பச்சை மிளகாய்
  • 6 பல் பூண்டு
  • 1 துண்டு இஞ்சி
  • 2 சின்னபட்டை
  • 2 ஏலக்காய்
  • 1 பாக்கெட் பனீர்
  • 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • எண்ணெய் தேவைக்கு
  • மல்லிதழை சிறிதளவு
  • 15 பாதாம்

Instructions

  • முதலில் கடாயை அடுப்பில் வைத்து மல்லி விதை, சீரகம், சோம்பு, மிளகு, வரமிளகாய், பாதாம் முதலியவற்றை வறுக்க எடுத்து வைத்துக் கொள்ளவும். அவை ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • பனீரை எடுத்து துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில்வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை,ஏலக்காய் போடவும். அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
  • மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய் நன்கு வதங்கியதும், வெங்காயம், தக்காளி அரைத்ததைச் சேர்க்கவும்.
  • பின் அரைத்த மசாலா சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விடவும். பின் கட் பண்ணிய பனீர் சேர்க்கவும். நன்கு கொதித்து கிரேவி பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். பின் இறக்கி மல்லிதழை தூவவும்.
  • சுவையான, ஆரோக்கியமான பாதாம் பனீர் கிரேவி ரெடி. சப்பாத்தி, பரோட்டா, தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும்.

Nutrition

Serving: 300g | Calories: 615kcal | Carbohydrates: 234g | Fat: 234g | Cholesterol: 32mg | Sodium: 1029mg | Potassium: 432mg | Fiber: 2.4g | Calcium: 32mg
Advertisement
Prem Kumar

Recent Posts

கொய்யாப்பழ ரோஸ் மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்து! இனி அடிக்கடி இந்த சுவையான மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை…

16 நிமிடங்கள் ago

கேரளா ஸ்பெஷல் ருசியான நேந்திரம் பழம் பஜ்ஜி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!!

மழைக்காலத்தில் அல்லது டீக்கடைகளில் நமக்கு பிடித்த ஒன்று வடை அதுவும் சூடான சுவையான வடை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது அதிலும்…

49 நிமிடங்கள் ago

செல்வம் பெருகிக் கொண்டே இருக்க குபேரனை எப்படி வழிபட வேண்டும்

செல்வம் பலமடங்கு பெருகவும், நமக்கு தேவையான செல்வத்தை சம்பாதிக்கவும், நாம் சேமித்து வைத்துள்ள செல்வத்தை பாதுகாக்கவும், எப்போதும் நம் வீட்டில்…

2 மணி நேரங்கள் ago

எளிமையான மற்றும் சுவையான தக்காளி சிக்கன் கறி ஒரு முறை இப்படி செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள் அந்த அளவிற்கு இதன் சுவை இருக்கும்!!

ஞாயிற்றுக்கிழமை வந்துட்டாலே, பலருக்கும் ஜாலியாக இருக்கும். ஏன்னா நமக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு, அதை எவ்வளவு நேரம் வேணாலும் பொறுமையா…

5 மணி நேரங்கள் ago

அருமையான வாழைக்காய் பருப்பு கடையல் இப்படி செய்தால் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!

மதிய நேரத்தில் என்ன சமைக்கலாம் என்று யோசித்தே சலித்து போய்விட்டதா. சாம்பார் செய்வதை விட சுலமான முறையில் அதுவும் சுவையான…

5 மணி நேரங்கள் ago

சகல ஐஸ்வர்யத்தையும் கொடுக்கும் சாம்பிராணி தூபம்

பொதுவாக நம் வீட்டில் எப்பொழுது பூஜை செய்து விளக்கு ஏற்றி தெய்வத்தை வழிபட்டாலும் சாம்பிராணி தூபம் போடுவது வழக்கம். அது…

6 மணி நேரங்கள் ago