தாபா ஸ்டைல் ஆலு‌ பூனா இப்படி செய்து பாருங்கள் சப்பாத்தி, பூரி போன்றவற்றிக்கு ஏற்ற வகையில் இருக்கும்!!

- Advertisement -

இன்று இரவு உங்கள் வீட்டில் செய்யும் சப்பாத்தி, பூரிக்கு வித்தியாசமான சுவையுடைய சைடு டிஷ் என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதுவும் உங்களுக்கு பஞ்சாபி ஸ்டைல் கிரேவிகள் மிகவும் பிடிக்குமா? அப்படியானால் இன்று உங்கள் வீட்டில்ஆலு பூனா கிரேவி செய்யுங்கள். இது அட்டகாசமான சுவையுடன் இருப்பதோடு, சப்பாத்தி, நாண், ஜீரா ரைஸ் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். நம்மில் பலருக்கு எளிமையான முறையில் சப்பாத்தி செய்யத் தெரிந்த அளவுக்கு, அதற்கேற்ப கிரேவி செய்யத்தெரியாது. ஆனால் சுவையான கிரேவி செய்தால் வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாகவே சாப்பிடுவார்கள். பொதுவாக பஞ்சாபி சமையல் என்றாலே அது தனி சுவைத்தான்.

-விளம்பரம்-

பஞ்சாபி தாபா என்றாலே மிகவும் பிரபலமான ஒன்று. ஏனென்றால் அங்கு சமைக்கப்படும் உணவுகள் மிகவும் சுவையாக இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிட கூடிய வகையில் இருக்கும். அந்த வகையில் பஞ்சாபி முறையில் ஆலு வைத்து இது போன்று கிரேவி செய்து பாருங்கள். வீட்டில் உள்ளவர்களெல்லாம் அசந்து போய்டுவாங்க. ஆலு கொண்டு பஞ்சாபி தாபா ஸ்டைலில் எப்படி ஒரு கிரேவி செய்யலாம் என்று பார்ப்போம். இந்த ஆலு பூனா கிரேவி செய்வது மிகவும் சுலபமாக இருப்பதோடு, பூரி, சப்பாத்திக்கு அட்டகாசமாகவும் இருக்கும். அதோடு இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாகவும் இருக்கும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இந்த ஆலு பூனா கிரேவி பஞ்சாபி சுவையில் இப்படி ஒருமுறை செய்து கொடுத்து பாருங்கள், அடிக்கடி கேட்டு அடம் பிடிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

- Advertisement -
Print
No ratings yet

ஆலு பூனா | Aloo Bhuna Recipe In Tamil

இன்று இரவு உங்கள் வீட்டில் செய்யும் சப்பாத்தி, பூரிக்கு வித்தியாசமான சுவையுடைய சைடு டிஷ் என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதுவும் உங்களுக்கு பஞ்சாபி ஸ்டைல் கிரேவிகள் மிகவும் பிடிக்குமா? அப்படியானால் இன்று உங்கள் வீட்டில் ஆலு பூனா கிரேவி செய்யுங்கள். இது அட்டகாசமான சுவையுடன் இருப்பதோடு, சப்பாத்தி, நாண், ஜீரா ரைஸ் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். நம்மில் பலருக்கு எளிமையான முறையில் சப்பாத்தி செய்யத் தெரிந்த அளவுக்கு, அதற்கேற்ப கிரேவி செய்யத்தெரியாது. ஆனால் சுவையான கிரேவி செய்தால் வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாகவே சாப்பிடுவார்கள்.
Prep Time10 minutes
Active Time15 minutes
Total Time25 minutes
Course: Breakfast, dinner
Cuisine: Indian, punjabi
Keyword: Aloo Bhuna
Yield: 4 People
Calories: 164kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 2 உருளைக்கிழங்கு
  • 2 பெரிய வெங்காயம்
  • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 2 பச்சை மிளகாய்
  • 2 தக்காளி
  • 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெய்
  • 2 டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் தனியா தூள்
  • 1 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1/2 டீஸ்பூன் சாட் மசாலா
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/4 கப் தயிர்
  • 1/2 டீஸ்பூன் கஸ்தூரி மேத்தி
  • கொத்தமல்லி சிறிதளவு
  • 1 குடைமிளகாய்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் உருளைக்கிழங்கை ஒரு குக்கரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். பின் இதனை நான்கு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பின் தக்காளியை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். தயிருடன் காஷ்மீர் மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின் இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் தக்காளி விழுது மற்றும் உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்கவும். பின் கரம் மசாலா, கஸ்தூரி மேத்தி மற்றும் தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி வைத்து கொதிக்க விடவும்.
  • பின் மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய் சேர்த்து அத்துடன் பெரிய வெங்காயம், குடைமிளகாய், பச்சை மிளகாய் மற்றும் வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கவும்.
  • பின் சாட் மசாலா சேர்த்து நன்கு கலந்து, இந்த காய்கறி கலவையை கிரேவியில் சேர்த்து கொத்தமல்லி தழை தூவி இரண்டு நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான ஆலு பூனா தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 164kcal | Carbohydrates: 3.7g | Protein: 6.4g | Fat: 2g | Sodium: 62mg | Potassium: 127mg | Fiber: 4.8g | Sugar: 37g | Vitamin A: 179IU | Calcium: 21mg | Iron: 15mg

இதனையும் படியுங்கள் : பஞ்சாபி ஸ்டைல் தம் ஆலு கிரேவி இப்படி செய்து பாருங்கள் இரண்டு சப்பாத்தி அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!