- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
குஸ்கா என்றாலே நம் அனைவருக்கும் பிடிக்கும். அசைவம் சாப்பிடாதவர்கள் கூட இந்த குஸ்காவை விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது எல்லாம் வீட்டில் எந்த விசேஷம் என்றாலும் முதலில் செய்வது இந்த குஸ்கா தான். அசைவம் சாப்பிடுபவர்கள் சிக்கன், மட்டன் என விதவிதமாக சமைத்து சாப்பிடுபவர்கள். சைவ பிரியர்களுக்காகவும் சில பிரியாணி வகைகள் உண்டு அதில் முக்கியமானது இந்த குஸ்கா. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய குஸ்கா நாம் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம்.
குஸ்காவில் பல வகை உண்டு, அதில் பிளேன் குஸ்கா, பன்னீர் குஸ்கா, மஷ்ரூம் குஸ்கா, மட்டன் குஸ்கா, மற்றும் தக்காளி குஸ்கா பிரசித்தி பெற்றது. அதில் நாம் இங்கு பார்க்க இருப்பது ஆம்பூர் ஸ்டைல் குஸ்கா. இந்த பதிவில் கூறியுள்ள முறையில் குஸ்கா செய்து பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கி வரும்போதே சிலருக்கு நாக்கில் எச்சில் ஊறும். சிலருக்கு தினமும் குஸ்கா சாப்பிட்டாலும் திகட்டாது. நீங்கள் குஸ்கா பிரியரா? அதுவும் ஆம்பூர் ஸ்டைலில் செய்யப்படும் குஸ்காவை சாப்பிட விருப்பப்படுகிறீர்களா?
அப்படியானால் உங்களுக்காக இந்த ஆம்பூர் குஸ்காவை வீட்டிலேயே எப்படி எளிய முறையில் செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம். இந்த குஸ்கா செய்வது மிகவும் ஈஸி. மேலும் இந்த குஸ்காவை பேச்சுலர்கள் கூட செய்து சுவைக்கலாம். பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் இந்த குஸ்காவின் ஸ்பெஷல், எவ்வளவு சாப்பிட்டாலும் திகட்டாது. வயிறு நிரம்பியது போன்ற உணர்வையும் தராது. ஆசை தீர சாப்பிடலாம். இப்போது சுவையான ஆம்பூர் ஸ்டைல் குஸ்காவை வீட்டிலேயே எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : சண்டே ஸ்பெஷலாக ஆம்பூர் ஸ்டைல் காளான் பிரியாணி இப்படி செய்து பாருங்க!
Ingredients
Method
முதலில் மிளகாயை சுடு தண்ணீரில் ஊற வைத்து மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் விழுது, தயிர் சேர்த்து நன்கு வதக்கவும். பின் புதினா, கொத்தமல்லி, தக்காளி சேர்த்து நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
அதன்பிறகு ஊற வைத்த அரிசியை சேர்த்து கலந்து எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் விட்டு குக்கரை மூடி இரண்டு விசில் விட்டு இறக்கவும்.
பின் குக்கரை திறந்து நெய் சேர்த்து கலந்து விடவும். அவ்வளவுதான் சுவையான ஆம்பூர் குஸ்கா தயார்.






