ஆந்திரா ஸ்டைல் வெண்டைக்காய் மசாலா இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்க! சாதத்துக்கு அருமையாக இருக்கும்!
இந்தியாவில் தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக ஆந்திரா ரெசிபிக்கள் தான் சுவையாகவும், நன்கு காரமாகவும் இருக்கும். அதிலும் ஆந்திராவில் சட்னி, தால், கோங்குரா, பெண்டகாயா மசாலா போன்றவை தான் மிகவும் பிரபலமானவை. வழக்கமான மதியம் குழம்பிற்கு, ஒரே மாதிரியான பொரியல் வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எ
இந்தியாவில் தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக ஆந்திரா ரெசிபிக்கள் தான் சுவையாகவும், நன்கு காரமாகவும் இருக்கும். அதிலும் ஆந்திராவில் சட்னி, தால், கோங்குரா, பெண்டகாயா மசாலா போன்றவை தான் மிகவும் பிரபலமானவை. வழக்கமான மதியம் குழம்பிற்கு, ஒரே மாதிரியான பொரியல் வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா. அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான பெண்டகாயா மசாலா செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும்.
வெண்டைக்காயை கொண்டு பொரியல், சாம்பார், புளிக்குழம்பு என என்னவேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் வெண்டைக்காய் வழுவழுப்பான தன்மையைக் கொண்டதால், இதை பக்குவமாக சமைத்தால் தான் அந்த வழுவழுப்புத்தன்மை இல்லாமல் இருக்கும். வெண்டைக்காயுடன் வறுத்த வேர்க்கடலை சேர்த்து மிக எளிதாக 20 நிமிடங்களுக்குள் செய்யக்கூடிய ஸைட் டிஷ் என இந்த வெண்டைக்காய் வேப்புடுவை குறிப்பிடலாம். இதனைத் தயிர் சாதம், ரசம் சாதத்துடன் சாப்பிட்டால் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு ருசியாக இருக்கும்.
ஆந்திரா உணவில் இந்த வெண்டைக்காய் மசாலா பிரதான உணவு. எந்த பண்டிகை நிகழ்ச்சி என்றாலும் இது கட்டாயம் இடம் பெறும். அந்த வகையில் அவர்களின் ஸ்பெஷலான வெண்டைக்காய் மசாலா எப்படி செய்வது என்று பார்க்கலாம். இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். ஆந்திராவில் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய பெண்டகாயா வேப்புடு செய்முறை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ஆந்திரா கிரீன் ஆப்பிள் ஊறுகாய் வீட்டில் இருந்தால் போதும், ஆரோக்கியமும், ருசியும் நிறைந்த சைடிஷ்ஷாக வைத்து சாப்பிடலாம்!