- Advertisement -
அடிக்குற வெயிலுக்கு புத்துணர்ச்சியுடன் இருக்க இது போன்று ஆப்பிள் கேரட் ஜுஸ் செய்து குடித்து பாருங்க. அந்த நாள் முழுவதும் எனர்ஜி ஆக இருக்கும். குழந்தைகளுக்கும் கொடுத்து பாருங்க விரும்பி குடிப்பார்கள்.
-விளம்பரம்-
இந்த ஜுஸ் எப்படி போடுவதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
- Advertisement -
ஆப்பிள் கேரட் ஜுஸ் | Apple Carrot Juice Recipe In Tamil
அடிக்குற வெயிலுக்கு புத்துணர்ச்சியுடன் இருக்க இது போன்று ஆப்பிள் கேரட் ஜுஸ் செய்து குடித்து பாருங்க. அந்த நாள் முழுவதும் எனர்ஜி ஆக இருக்கும். குழந்தைகளுக்கும் கொடுத்து பாருங்க விரும்பி குடிப்பார்கள்.இந்த ஜுஸ் எப்படி போடுவதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Yield: 2 people
Equipment
- மிக்ஸி
தேவையான பொருட்கள்
- ½ கப் நறுக்கிய ஆப்பிள்
- 1 கேரட் சிறியது
- 3 டேபிள் ஸ்பூன் சர்க்கரை
- ¼ டீஸ்பூன் பன்னீர்
செய்முறை
- முதலில் ஆப்பிள் மற்றும் கேரட்டை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சியில் சேர்த்து அத்துடன் சர்க்கரை சேர்த்து அரைக்கவும்.
- அரைத்த கலவையை சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு பாத்திரத்தில் வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
- பிறகு அதில் பன்னீர் சிறிது சேர்த்து ஐஸ் கட்டிகளும் சேர்த்து அருந்தவும்.