- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
வாரத்துல ரெண்டு தடவை கீரை சாப்பிடுவதால் நம்ம உடம்புக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். இரும்பு சத்து குறைபாடு இருக்கிறவங்க வாரத்துல மூணு நாள் கூட கீரை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். கீரை சாப்பிடுவதால் உடம்புக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறவர்கள் கீரை சாப்பிட்டாலே போதும் மாத்திரை கூட போட தேவையே இல்லை. அந்த வகையில் கீரை சமைச்சு சாப்பிட ஒரு சிலருக்கு சுத்தமா பிடிக்காது அந்த மாதிரி பிடிக்காதவங்க கூட இந்த மாதிரி ஒரு தடவை கீரை தொக்கு செஞ்சு கொடுத்தா கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க.
கீரைகள் பலவகையான கீரைகள் இருக்கு பாலக்கீரை, அரைக்கீரை, முளைக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம். அந்த வகையில இப்ப நம்ம சூப்பரான அரைக்கீரை தொக்கு தான் செய்யப் போறோம். இந்த தொக்கு செய்வதற்கு நீங்க எந்த கீரை வேணாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் எல்லாமே செம்ம டேஸ்ட்டா இருக்கும். சுட சுட சாதத்துல இந்த கீரை தொக்கு வச்சு பிசைந்து சாப்பிட ரொம்ப சூப்பரா இருக்கும்.
பொதுவா குழந்தைகள் கீரை சாப்பிட மாட்டாங்க ஆனா அவங்களே இந்த ரெசிபியை விரும்பி சாப்பிடுவாங்க அந்த அளவுக்கு சூப்பரா இருக்கும் நல்லா காரசாரமாக குறிப்பாக சாப்பிடுவதற்கு ரொம்பவே ருசியா இருக்கும். இந்த டேஸ்டான சூப்பரான அரைக்கீரை தொக்கு இந்த மாதிரி ஒரு தடவை கண்டிப்பா செஞ்சு பாருங்க குழந்தைகளுக்கு ஸ்கூல் லன்ச் பாக்ஸ்க்கோ இந்த தொக்கு போட்டு கிளறி கொடுத்து விடலாம் கண்டிப்பா விரும்பி சாப்பிட்டு விட்டு தான் வருவாங்க மீதமே இருக்காது. இப்ப வாங்க இந்த ருசியான அரைக்கீரை தொக்கு ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
Ingredients
Method
அரைக்கீரையை கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு, சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் பெரிய வெங்காயம் பூண்டு மிளகாய் தூள் உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
அந்த விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும். அரைக்கீரையை சேர்த்து நன்றாக கலந்து பெருங்காயத்தூள் சேர்த்து புளி கரைசல் ஊற்றி நன்றாக கலந்து ஐந்து நிமிடத்தில் இறக்கினால் சுவையான அரைக்கீரை தொக்கு தயார்.






