நிறைய பேர் வீட்ல பீன்ஸ் பருப்பு உசிலி அடிக்கடி செஞ்சு பழக்கம் இருக்கும் ஆனா ஒரு சிலர் வீட்ல பொரியல் மட்டுமே செஞ்சு பழக்கம் இருக்கும் அந்த மாதிரி வெறும் பொரியல் மட்டுமே செஞ்சு சாப்பிடறவங்க இனிமேல் இந்த மாதிரி பருப்பு உசிலி செஞ்சு சாப்பிட்டு பாருங்க. இந்த பருப்பு உசிலிய நம்ம அவரைக்காய் பீன்ஸ் வாழைப்பூ கொத்தவரங்காய் அப்படின்னு எல்லாத்துலயுமே செஞ்சு சாப்பிடலாம். வீட்ல கார குழம்பு வைக்கும் போது இந்த பருப்பு உசிலி சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிட்டு பாருங்க. ரொம்ப டேஸ்டா இருக்கும். கல்யாண வீடுகளுக்கு விசேஷ வீடுகளுக்கு போகும் போது அங்க கண்டிப்பா இந்த பருப்பு உசிலி பொரியல் இருக்கும்.
அத பாக்கும் போது நமக்கு வீட்லயும் இதே மாதிரி செஞ்சு சாப்பிடணும் அப்படின்னு தோணிக்கிட்டே இருக்கும். அந்த மாதிரி உங்களுக்கு தோணுச்சுன்னா அது எப்படி செய்யறது அப்படின்னு குழப்பமே வேண்டாம் இப்ப சொல்ற இதே செய்முறையில் மட்டும் செஞ்சு பாருங்க. ஒரு சூப்பரான பருப்பு உசிலி ரெசிபி உங்களுக்கு கிடைக்கும். இத நிறைய காய்கறிகள்ல செய்ய முடிஞ்சாலும் இன்னைக்கு நம்ம அவரைக்காய் வைத்து தான் செய்யப் போறோம்.
அவரைக்காய் வைத்து இந்த பருப்பு உசிலி செய்யும் போது ரொம்ப டேஸ்டா இருக்கும். எல்லா ரெசிபிக்குமே இந்த சைட் டிஷ் ரொம்ப சூப்பரா இருந்தாலும் காரக்குழம்புக்கு தான் ரொம்ப டேஸ்டா இருக்கும். அப்படியே விசேஷ வீடுகளில் ஹோட்டலில் கிடைக்கிற மாதிரியே ஒரு சூப்பரான ரெசிபியை வீட்டிலேயே செய்ய முடியும். இதே அளவுகளில் மட்டும் செஞ்சு பாருங்க. இந்த ரெசிபி செய்றதுக்கு அவரைக்காயை அரைவேக்காடு வேக வச்சா மட்டுமே போதுமானது.இப்ப வாங்க இந்த சுவையான அவரைக்காய் பருப்பு உசிலி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
அவரைக்காய் பருப்பு உசிலி | Avarakai Paruppu Usili Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1/2 கப் துவரம்பருப்பு
- 1/2 கப் கடலை பருப்பு
- 3 காய்ந்த மிளகாய்
- 1/4 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/4 கி அவரைக்காய்
- 1/2 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
- 1 கொத்து கருவேப்பிலை
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் துவரம் பருப்பு கடலை பருப்பு காய்ந்த மிளகாய் அனைத்தையும் சேர்த்து ஊற வைக்கவும்.
- அவரைக்காய் பொடி பொடியாக நறுக்கி கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து அரைவேக்காடு வெந்ததும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்
- ஊற வைத்த பருப்பை மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள் பெருங்காயத்தையும் உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
- அதனை இட்லி பாத்திரத்தில் சேர்த்து அவித்து எடுத்துக் கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து பருப்பு கருவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்.
- அரைத்து வைத்த பருப்பை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து அதனுடன் அவரைக்காய் சேர்த்து உப்பு சேர்த்து நன்றாக கிளறி இறக்கினால் அவரைக்காய் பருப்பு உசிலி தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : சிம்பிளான அவரைக்காய் பொரியல் எப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிடுங்க!