- Prep
- 15 min
- Cook
- 10 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
அவரைக்காயில் இருக்கும் அதிகப்படியான புரத சத்துக்கள் தலைமுடி பிரச்சனையை விரைவாக சரி செய்கிறது. எனவே அடிக்கடி அவரைக்காய் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் வலுப்பெறும். ஆனால் அவரைக்காய் என்றாலே பலருக்கும் பிடிப்பதில்லை. குறிப்பாக குழந்தைகளுக்கு அவரைக்காய் என்றாலே சாப்பாடு இறங்காது. ஆனால் இந்த முறையில் ஒருமுறை அவரைக்காயை சமைத்துக் கொடுத்து பாருங்கள், தட்டில் ஒரு துண்டு அவரைக்காய் கூட மிஞ்சாது, எல்லாமே காலியாகிவிடும். வழக்கமான மதியம் குழம்பிற்கு ,பொரியல் வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா. அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான அவரைக்காய் பொரியல் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும்.
இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது. எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதுவும் கொங்கு நாட்டு ஸ்டைலில் அவரைக்காயை பொரியல் செய்து சாப்பிட்டால், அதன் சுவையே தனி தான். பெரும்பாலும் இந்த பொரியல் தென்னிந்தியாவில் அதிலும் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமானது. நார்ச்சத்து அதிகம் உள்ள அவரைக்காய்களை அவ்வப்போது சாப்பிட்டு வருவது செரிமான உறுப்புகளின் நலத்தை மேம்படுத்தும். தினமும் உணவில் அவரைக்காய் பொரியல், கூட்டு போன்றவற்றை சேர்த்து சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும். இந்த அவரைக்காய் பொரியல் காரக்குழம்பு , மிளகு குழம்பு, பூண்டு குழம்பு போன்ற குழம்பு வகைகளுக்கு நல்ல பொருத்தமாக இருக்கும். செய்து பாருங்கள்.
இதனையும் படியுங்கள் : ருசியான அவரைக்காய் க்ரீன் கறி இப்படி செய்து பாருங்கள்! அவரைக்காயை பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க!
Ingredients
Method
முதலில் அவரைக்காயை கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பின் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கலந்து அவரைக்காயை சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கி பின் சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடி போட்டு வேக விடவும்.
அவரைக்காய் வெந்ததும், துருவிய தேங்காயை சேர்த்து கலந்து அடுப்பை அணைத்து விடவும்.
அவ்வளவுதான் சுவையான, சுலபமான, அவரைக்காய் பொரியல் தயார். சுடு சாதத்தில் நெய் விட்டு, இந்த பொரியலை போட்டு கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.






