பெரும்பாலும் அவரைக்காய் வைத்து நம்ம அவரைக்காய் பொரியல் தான் செஞ்சு சாப்பிட்டு இருப்போம். ஆனா அவரைக்காய் வச்சு வித்தியாசமா இந்த மாதிரி ஒரு தொக்கு செஞ்சு சாப்பிட்டு பாருங்க. இட்லி தோசை சப்பாத்தி பூரின்னு எல்லாத்துக்குமே சூப்பரான காமினேஷனா இருக்கும். முக்கியமா சப்பாத்தி செஞ்சீங்கன்னா ஒரு தடவை இந்த அவரைக்காய் தொக்கு செஞ்சு சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் எப்ப சப்பாத்தி செஞ்சாலும் அவரைக்காய் தொக்கு தான் வீட்ல இருக்குற எல்லாருக்கும் கேப்பாங்க. அந்த அளவுக்கு ருசியானதாக இருக்கும்.
அவ்ளோ டேஸ்டான இந்த ரெசிபியை கண்டிப்பா உங்க வீட்ல ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க. சுவையான அவரைக்காய் தொக்கு செய்வதற்கு நம்ம வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு வதக்கி அரைச்சு செய்ய போறோம். அதனால டேஸ்ட் இன்னுமே சூப்பரா இருக்கும். குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ்க்கு இந்த அவரைக்காய் தொக்கு போட்டு சாதம் போட்டு கிளறி கொடுத்து விடலாம் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு வந்துடுவாங்க.
அவரைக்காய் சாப்பிடாத குழந்தைகளும் கூட இந்த அவரைக்காய் தொக்கு செஞ்சு கொடுத்தா நிச்சயமா சாப்பிடுவாங்க. அவ்ளோ ருசியான இந்த ரெசிபி ஈஸியா செஞ்சு முடிச்சிடலாம். அவரைக்காய் வாங்குனீங்கன்னா கண்டிப்பா இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க. இத சுடச்சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடவும் சூப்பரா இருக்கும் பழைய சாதத்துக்கு தொட்டுக்க சாப்பிடவும் சூப்பரா இருக்கும். இதோட ரெசிபி பார்க்கும்போதே சாப்பிடணும்னு நமக்கு வாயில் எச்சில் ஊறும். இப்ப வாங்க இந்த ருசியான அவரைக்காய் தொக்கு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
அவரைக்காய் தொக்கு | Avarakkai Thokku Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 1/4 கி அவரைக்காய்
- 2 பெரிய வெங்காயம்
- 2 தக்காளி
- 1 துண்டு இஞ்சி
- 5 பல் பூண்டு
- 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1 டேபிள் ஸ்பூன் தனியா தூள்
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1 டீஸ்பூன் சோம்பு
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- 1 கொத்து கறிவேப்பிலை
- கொத்தமல்லி சிறிதளவு
செய்முறை
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து பெரிய வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.
- பிறகு மிளகாய் தூள் மஞ்சள் தூள் தனியா தூள் சேர்த்து நன்றாக வதக்கி ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- பிறகு அதே கடாயில் எண்ணெய் சேர்த்து சோம்பு சீரகம் தாளித்து நறுக்கிய அவரைக்காய் சேர்த்து வதக்கவும்.
- பிறகு அரைத்து வைத்த விழுது தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
- அவரைக்காய் நன்றாக வெந்து வந்ததும் கொத்தமல்லி இலைகள் கருவேப்பிலை போட்டு இறக்கினால் சுவையான அவரைக்காய் தொக்கு தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : ருசியான அவரைக்காய் தேங்காய் பால் கிரேவி கிரேவி இப்படி ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க!