- Prep
- 5 min
- Cook
- 15 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- dinner, LUNCH, Side Dish
மக்காச்சோளம் நம்ம உடம்புக்கு ரொம்பவே நல்லது ரொம்பவே ஆரோக்கியமானது அப்படின்னு சொல்லலாம். அந்த வகையில் பெரிய மக்காச்சோளமா இருந்தா அதுல நம்ம சுட்டோ இல்ல வேக வச்சோ எலுமிச்சை சாறு உப்பு மிளகாய் தூள் எல்லாம் மேலே தடவி சாப்பிடலாம். டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். ஆனா பேபி கார்ன் அப்படின்னு சொல்லப்படுற சின்ன மக்காச்சோளம் வச்சு என்ன செய்யறதுன்னு உங்களுக்கு சுத்தமா தெரியலையா அப்போ ஒரு தடவை இந்த மாதிரி வறுத்து அரச்ச மசாலாவை வச்சு பேபி கார்ன் பிரட்டல் செஞ்சு பாருங்க. டேஸ்ட் ரொம்பவே அட்டகாசமா இருக்கும்.
தயிர் சாதம் தக்காளி சாதம் போன்ற கலவை சாதங்களுக்கு இந்த பிரட்டல் வச்சு சாப்பிட்டா ரெண்டு தட்டு சாப்பாடு கூட சாப்பிடலாம் அவ்வளவு ருசியா இருக்கும். இதுக்கு நிறைய மசாலாக்கள் எதுவும் சேர்க்க தேவை இல்லை வீட்டில் இருக்கிற பொருட்களை வைத்து மசாலா வறுத்து அரைச்சு செய்றதால இதோட டேஸ்ட் ரொம்ப அட்டகாசமா இருக்கும். சின்ன குழந்தைகள் அது பெரியவங்க வரைக்கும் எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. உங்க குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸ்க்கு கூட இந்த பிரட்டல் செஞ்சு கொடுக்கலாம் கண்டிப்பாக காலி பண்ணிட்டு தான் வருவாங்க காரணம் அதோட டேஸ்ட் அவ்வளவு ருசியா இருக்கும். இப்ப வாங்க இந்த சூப்பர் டேஸ்டான அட்டகாசமான பேபி கார்ன் பிரட்டல் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ருசியான பேபி கார்ன் வெஜிடேபிள் நூடுல்ஸ் இப்படி ஈஸியாக வீட்டிலே செய்து பாருங்க ! அசத்தலான சுவையில் இருக்கும்!!
Ingredients
Method
முதலில் பேபி கார்னை சிறு துண்டுகளாக வெட்டி தண்ணீரில் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.
ஒரு கடாயில் மிளகு சீரகம் மல்லி விதைகள் உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் அனைத்தையும் சேர்த்து லேசாக வறுத்து ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து பெரிய வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
மஞ்சள் தூள் மிளகாய் தூள் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கி வேக வைத்துள்ள பேபி கார்ன் சேர்த்து அதனுடன் அரைத்த மசாலாவையும் சேர்த்து கிளறவும்.
அனைத்தும் ஒன்று சேர்ந்து வந்தவுடன் அடுப்பை அணைத்தால் சுவையான பேபி கார்ன் பிரட்டல் தயார்.






