- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- LUNCH
காய்கறிகளில் பலவிதமான வகைகள் இருந்தாலும், அனைவருக்கும் பிடித்த ஒன்று என்றால் அது உருளைக்கிழங்கு தான். உருளைக்கிழங்கு பிடிக்காதவங்க அப்படின்னு யாருமே இருக்க மாட்டாங்க. அவங்களுக்காக நம்ம விதவிதமான பல வெரைட்டிகள்ல உருளைக்கிழங்கு செய்து கொடுத்திருப்போம். அதிலும் தயிர் சாதம், சாம்பார் சாதம், ரசம் சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம் என அனைத்து வகையான சாதத்துடனும் தொட்டுக்கொண்டு சாப்பிட இந்த உருளைக்கிழங்கு வறுவல் ஒன்று மட்டும் இருந்தால் போதும். உருளைக்கிழங்கு வகைகளில் ஒன்றுதான் பேபி உருளைக்கிழங்கு. பார்ப்பதற்கு அழகாக சின்னச்சின்ன உருண்டைகளாக இந்த உருளைக்கிழங்கு இருக்கும்.
மற்ற உருளைக்கிழங்கை நறுக்கி பயன்படுத்துவார்கள். இந்த உருளைக்கிழங்கை எந்த ஒரு ரெசிபிக்கும் அப்படியே பயன்படுத்துவார்கள். இது அதன் தனி சிறப்பு. டேஸ்டியான செட்டிநாடு பேபி உருளைக்கிழங்கு வறுவல் ரொம்பவே எளிதான முறையில் வீட்டிலேயே செய்யலாம். எல்லா வகையான சாதத்துக்கும் நல்ல சைடு டிஷ்ஷாக இருக்கக் கூடிய இந்த உருளைக்கிழங்கு வறுவல் இந்த மாதிரி நீங்கள் செய்யும் பொழுது சாம்பார் சாதம், ரசம் சாதம், வெரைட்டி ரைஸ் என்று எது செய்தாலும் போதும் போதும் உருளைக்கிழங்கு வறுவல் வைத்து சாப்பிட தோன்றும். அந்த அளவிற்கு சுவையாக இருக்கக்கூடிய இந்த பேபி உருளைக்கிழங்கு மிளகு வறுவல் எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : மாலை நேர ஸ்நாக்ஸாக ருசியான உருளைக்கிழங்கு பட்டாணி கட்லெட் இப்படி வீட்டில் செய்து பாருங்க!
Ingredients
Method
முதலில் உருளைக்கிழங்கை நன்கு கழுவி விட்டு குக்கரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக வைத்து தோல் நீக்கி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றாமல் தனியா, வர மிளகாய், கடலை பருப்பு, உளுந்து, மிளகு, சோம்பு சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
இவை நன்கு ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பின் உருளைக்கிழங்கை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
பின் உருளைக்கிழங்கு லேசாக நிறம் மாறியதும் நாம் அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் உப்பு சேர்த்து கலந்து மூடி வைத்து வேக விடவும்.
அதன்பிறகு மசாலா வாசனை போனதும் அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான செட்டிநாடு ஸ்டைல் பேபி உருளைக்கிழங்கு வறுவல் தயார்.






