- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- evening, snacks
நம்மில் பலருக்கும் கட்லெட் மிகவும் பிடித்த ஸ்னாக்ஸ் ரெசிபிகளில் ஒன்று. அந்தவகையில், ஆரோக்கியமான மற்றும் சத்து நிறைந்த ஒரு ரெசிபி பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். அன்றாட சமையலில் இருந்து ஏதாவது புதிதாக செய்து சாப்பிட வேண்டும் என்று பலரும் நினைப்போம். விதவிதமாக செய்து ருசியாக சாப்பிட வேண்டும் என்று நினைப்போம். அதேவேளையில் ஆரோக்கியத்தில் சமரசம் கூடாது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் பிடித்தமான உணவு செய்ய வேண்டும் என்று எண்ணுவோம். வீட்டிலேயே ஆரோக்கியமாக செய்து சாப்பிட உருளைக்கிழங்கு பட்டாணி கட்லெட் ட்ரை பண்ணி பாருங்க. குழந்தைகள் பள்ளி முடிந்து வந்தபின் சாப்பிட ஏற்ற சிம்பிள் ஸ்நாக்ஸ். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினர்களும் உருளைக்கிழங்கினால் செய்யப்பட்ட உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். எனவே இந்த பதிவில் உருளைக்கிழங்கு பட்டாணி கட்லெட் செய்வது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம்.
மாலை நேரங்களில் தங்கள் குழந்தைகளுக்கு ஒரு 15 நிமிடங்களில் ஏதாவது ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் தாய்மார்கள், இந்த உருளைக்கிழங்கு பட்டாணி கட்லெட் செய்து கொடுக்கலாம் மிகவும் சுவையாக இருக்கும். கட்டாயம் உங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். உங்கள் வீட்டிற்கு திடீரென விருந்தாளிகள் வந்தால் கவலை வேண்டாம், சிறிது நேரத்திற்குள்ளேயே இந்த ஸ்னாக்கை செய்து நீங்கள் அசத்தலாம். டீ, காபி குடிக்கும் சமயத்தில் இந்த உருளைக்கிழங்கு பட்டாணி கட்லெட் சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.
இதனையும் படியுங்கள் : சப்பாத்திக்கு இந்த உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா செஞ்சு கொடுங்க நாலஞ்சு சப்பாத்தி கூட சாப்பிட வாங்க!
Ingredients
Method
முதலில் பட்டாணி மற்றும் உருளைக்கிழங்கை ஒரு குக்கரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பவுளில் உருளைக்கிழங்கு மற்றும் பட்டாணியை மசித்து சேர்த்துக் கொள்ளலாம்.
பின் அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி இலை, இஞ்சி பூண்டு விழுது, சீரக தூள் மற்றும் சாட் மசாலா தூள், உப்பு சேர்த்து அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ளவும்.
இந்த கலவையை சிறிதளவு எடுத்து வடை போல் தட்டி வைத்துக் கொள்ளவும்.
சோள மாவை அரை கப் தண்ணீர் ஊற்றி சிறிதளவு உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து கரைத்து கொள்ளவும்.
பின்னர் சோள மாவு கரைசலில் பிரட்டி எடுத்து பின் பிரெட் தூளில் பிரட்டி எடுத்து அரை மணி நேரம் பிரிட்ஜில் வைக்கவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கட்லெட்டுகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான உருளைக்கிழங்கு பட்டாணி கட்லெட் தயார்.






