- Prep
- 20 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamilnadu
- Course
- Side Dish
வாழைப் பூவை வைத்து வாழைப்பூ கூட்டு ரெசிபியை தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போரோம். வாழைப்பூவை கூட்டாக இப்படி செய்து கொடுத்தால் நிச்சயமாக வீட்டில் இருப்பவர்கள் விரும்பி உண்பார்கள். வாழைப்பூவில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளடங்கியுள்ளது. வாழைப்பூ கூட்டு ஆரோக்கியத்திற்கு மிக மிக நல்லது. வாழைப்பூவை முந்தைய நாளே வாங்கி சுத்தம் செய்த வைத்துவிட்டால், வெறும் பத்தே நிமிடத்தில் சூப்பரான இந்த கிரேவியை செய்துவிடலாம். இந்த சத்துமிக்க வாழைப்பூ கூட்டு உங்க வீட்ல இருக்கிறவங்க எல்லாருக்கும் வாரத்தில் ஒரு முறையாவது செய்து கொடுங்க. வாங்க அந்த ரெசிபியை தெரிந்து கொள்வோம்.
Ingredients
Method
வாழைப்பூவை நரம்பை நீக்கி சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும். நறுக்கிய பீவை மோரில் போட்டு வைப்பதால் அவை கருத்துவிடாமல் இருக்கும். பூண்டு, சீரகம், சோம்பு, தேங்காய் துருவலை விழுதாக அரைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து கருவேப்பிலை தாளித்து, பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்துவதக்கவும்.
நன்கு வதங்கியதும் வாழைப்பூ, பருப்பு சேர்த்து இந்த கலவையுடன், தேங்காய் விழுது தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிடவும்.சுவையான வாழைப்பூ கூட்டு தயார்.






