காலை உணவுக்கு ருசியான வாழைத்தண்டு தோசை இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!

- Advertisement -

தென்னிந்தியாவில் அதிக மக்கள் விரும்பி சாப்பிடும் முக்கிய உணவுளில் ஒன்று தோசை. குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் தோசை என்றால் மிகவும் பிடிக்கும். சுவையாகவும், விரைவில் செய்து சாப்பிடும் அளவுக்கு இருக்கும். மேலும் இது ஒரு ஆரோக்கியமான உணவு. தோசையில் பல வகைகள் உண்டு. கல் தோசை, வெங்காயத் தோசை, ரவா தோசை, பொடி தோசை, முட்டை தோசை, கோதுமை தோசை, மசாலா தோசையென அடுக்கிக்கொண்டே போகலாம்.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள் : உடனடியாக ஏதாவது செய்து சாப்பிட ருசியான அவசர தோசை இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி!!

- Advertisement -

இதுவரை நீங்கள் எத்தனையோ தோசைகளை செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் வாழைத்தண்டு கொண்டு தோசை செய்து சாப்பிட்டுள்ளீர்களா? ஆம், வாழைத்தண்டு கொண்டு தோசை செய்யலாம். இந்த வாழைத்தண்டு தோசை சட்னி, சாம்பார் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த வாழைத்தண்டு சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக பாதையில் தொற்று உள்ளவர்கள் உட்கொள்வது நல்லது.

Print
4 from 1 vote

வாழைத்தண்டு தோசை | Banana Stem Dosa Recipe in Tamil

தென்னிந்தியாவில் அதிக மக்கள் விரும்பி சாப்பிடும் முக்கிய உணவுளில் ஒன்று தோசை. குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் தோசை என்றால் மிகவும் பிடிக்கும். சுவையாகவும், விரைவில் செய்து சாப்பிடும் அளவுக்கு இருக்கும். மேலும் இது ஒரு ஆரோக்கியமான உணவு. தோசையில் பல வகைகள் உண்டு. கல் தோசை, வெங்காயத் தோசை, ரவா தோசை, பொடி தோசை, முட்டை தோசை, கோதுமை தோசை, மசாலா தோசையென அடுக்கிக்கொண்டே போகலாம். இதுவரை நீங்கள் எத்தனையோ தோசைகளை செய்து சுவைத்திருப்பீர்கள். இந்த வாழைத்தண்டு தோசை சட்னி, சாம்பார் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
Prep Time15 minutes
Active Time10 minutes
Total Time25 minutes
Course: Breakfast, dinner
Cuisine: Indian
Keyword: Dosai
Yield: 4 People
Calories: 89kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 தோசை கரண்டி
  • 1 மிக்ஸி
  • 1 தோசை கல்

தேவையான பொருட்கள்

  • 1/2 துண்டு வாழைத்தண்டு
  • 3 கப் இட்லி மாவு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 துண்டு இஞ்சி
  • கறிவேப்பிலை சிறிதளவு
  • 2 வர மிளகாய்
  • 1/4 டீஸ்பூன் பெருங்காயம் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் வாழைத்தண்டுடை நார் எடுத்து கலர் மாறாமல் இருக்க மோரில் போட்டு மீண்டும் நார் இருந்தால் எடுக்கவும்.
  • பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில், மோரில் நன்கு கழுவிய வாழைத்தண்டு அதனுடன் சீரகம், வரமிளகாய், இஞ்சி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
  • அரைத்த விழுதை இட்லி மாவில் சேர்த்து கலந்து பெருங்காயத்தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • பின்னர் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து கல் சூடானதும், ஒரு கரண்டி மாவை தோசையாக விரித்து விட்டு ஒரு புறம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபுறம் வேக வைக்கவும்.
  • அவ்வளவுதான். சுவையான வாழைத்தண்டு தோசை ரெடி. இந்த தோசைக்கு எல்லாவிதமான சட்னி மற்றும் சாம்பார் வகைகளும் சிறந்த காம்பினேஷன் ஆக இருக்கும்.

Nutrition

Serving: 500g | Calories: 89kcal | Carbohydrates: 22.8g | Protein: 1.1g | Fat: 0.3g | Sodium: 240mg | Potassium: 358mg | Fiber: 2.6g | Vitamin C: 8.7mg