தென்னை மரத்தை போலவே வாழை மரத்தில் இருக்கக்கூடிய வாழைப்பழம், வாழைப்பூ, வாழை தண்டு, வாழைக்காய் என எல்லா பாகங்களுமே உபயோகப்படுத்தக் கூடியதாக இருக்கும். அந்த வகையில் வாழைத்தண்டு வைத்து செய்யக்கூடிய நிறைய ரெசிபீஸ் சிறுநீரக கற்கள் பிரச்சனைக்கு ஒரு தீர்வாக அமையும். சிறுநீரக கற்கள் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு கூட போக தேவையில்லை வாரத்துக்கு மூணு தடவை வாழைத்தண்டு சூப் செய்து குடித்தாலே போதுமானது. அந்த வகையில் வாழைத்தண்டு வைத்து நிறைய ரெசிபிஸ் செய்யலாம்.
வாழைத்தண்டு பருப்பு கூட்டு, வாழைத்தண்டு பொரியல், வாழைத்தண்டு புளிக்குழம்பு அப்படின்னு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி செய்வாங்க. ஆனா நம்ம இந்த வெயிலுக்கு ஏத்த மாதிரி ஒரு சூப்பரான குளுகுளுன்னு இருக்கக்கூடிய வாழைத்தண்டு மோர் கூட்டு பார்க்க போறோம். இந்த ரெசிபி செய்றதுக்கு முன்னாடி வாழைத்தண்டை நறுக்கி மோரில் சேர்க்க வேண்டும் அப்போதுதான் வாழைத்தண்டு கருத்து போகாமல் இருக்கும். வாழைத்தண்டு மோர் கூட்டு கொஞ்சம் வித்தியாசமான ரெசிபியாக இருக்கும். இதுக்கு நம்ம ஒரு மசாலா அரைச்சு செய்ய போறோம் ரொம்ப ரொம்ப சிம்பிளான மசாலா தான் டேஸ்ட் அவ்வளவு சூப்பரா இருக்கும்.
மோர் குழம்பு செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா இந்த வாழைத்தண்டு மோர் போட்டு செஞ்சு சாப்பிட்டு பாருங்க ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்க அப்படின்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. இந்த வாழைத்தண்டு ஒரு கூட்ட சுட சாதத்தைக் கூட்டு பிசைந்து சாப்பிட அவ்வளவு ருசியா இருக்கும். பழைய சாதத்திலையும் போட்டு பிசைந்து சாப்பிடலாம் சாப்பிடும் போது வயித்துக்கு குளுகுளுன்னு அவ்ளோ சூப்பரா இருக்கும். டேஸ்டான இந்த ரெசிபியை கண்டிப்பா ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க. இப்ப வாங்க இந்த ருசியான வாழைத்தண்டு மோர் கூட்டு ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
வாழைத்தண்டு மோர் கூட்டு | Banana Stem Moru Kootu Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 குக்கர்
- 1 கடாய்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 1 கப் நறுக்கிய வாழைத்தண்டு
- 1/2 கப் தயிர்
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1/4 கப் தேங்காய் துருவல்
- 2 பச்சை மிளகாய்
- 1/2 டீஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- வாழைத்தண்டை நறுக்கி மோரில் சேர்த்து ஊற வைத்துக் கொள்ளவும்.
- அதனை குக்கரில் சேர்த்து மஞ்சள் தூள் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் விட்டு எடுக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு கருவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்.
- பிறகு வேகவைத்த வாழைத்தண்டு சேர்த்து வதக்கவும். ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் பச்சை மிளகாய் சீரகம் ஒரு டீஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக அரைத்து வாழைத்தண்டில் சேர்க்கவும்.
- சிறிதளவு தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு 10 நிமிடம் நன்றாக கொதிக்க வைத்து ஆற வைத்துக் கொள்ளவும்.
- பிறகு தயிரை அரைத்து சேர்த்து இறக்கினால் சுவையான வாழை தண்டு மோர் கூட்டு தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : வீடே மணக்க மணக்க ருசியான சௌசௌ மோர்க்குழம்பு ஒரு தரம் இப்படி செய்து பாருங்க!