- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, dinner
தென்னிந்திய காலை உணவு வகைகளில் மிகவும் பிரபலமான ஒன்றாக தோசை மற்றும் இட்லி உள்ளது. அதுவும் குறிப்பாக, தோசை என்றால் பலரது விருப்பமான உணவாகும். சொல்லப்போனால், இட்லியை விட தோசை பிரியர்கள் தான் அதிகம். எத்தனை தோசை சுட்டுக் கொடுத்தாலும் அவர்கள் அதை சலிக்காமல் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் தோசை தான் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் நீங்களும் தோசை பிரியர் என்றால் உங்களுக்கான பதிவு தான் இது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி ருசிக்கும் இந்த அற்புதமான உணவு தற்போது ஏகப்பட்ட வெரைட்டிகளில் கிடைக்கின்றது. ஆனியன் தோசை, ரவை தோசை, மாசாலா தோசை, கேரட் தோசை என இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அந்த வகையில் எப்போதும் வழக்கமான தோசை சாப்பிட்டு போர் அடுத்துவிட்டதா? அப்படியானால் சத்தான மிகவும் சுவையான பார்லி தோசையை வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்து பாருங்கள்.
வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இது காலை உணவுக்கு ஏற்றது. காலை உணவிற்கு எப்பவும் ஒரே மாதிரியாக இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, பொங்கல் என்று சாப்பிடாமல் இந்த மாதிரி ருசியான பார்லி தோசை செஞ்சு சாப்பிட்டு பாருங்கள். இந்த சுவையான தோசையை அப்படியே சாப்பிடலாம் அல்லது காரசாரமான தக்காளி சட்னி, தேங்காய் சட்னியுடன் சேர்த்து பரிமாறினால், உங்கள் குடும்பத்தினர் இனி தோசை மட்டும் போதும் என்பார்கள். இப்போது இந்த பதிவில் சுவையான பார்லி தோசை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : ஆந்திரா உள்ளி காரம் தோசை
Ingredients
Method
முதலில் பார்லி, வெள்ளை சோளம், உளுந்தம் பருப்பு, வெந்தயம் இவற்றை நன்கு அலசி விட்டு ஊறவைத்து கொள்ளவும்.
பின் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து, ஒரு பவுளுக்கு மாற்றி அதனுடன் உப்பு சேர்த்து நன்கு கலந்து சிறிது நேரம் ஊற வைத்து கொள்ளவும்.
ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு கரண்டி மாவை எடுத்து தோசையாக வார்த்து சுற்றி எண்ணெய் விட்டு இரண்டு பக்கமும் வேக வைத்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான பார்லி தோசை தயார்.






