- Prep
- 20 min
- Cook
- 20 min
- Total
- 40 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
என்னதான் மதிய உணவுகளுக்கு குழம்பு, சோறு, கிரேவி என சாப்பிடுவதற்கு தயார் செய்து விட்டாலும் சோறுடன் வைத்து சாப்பிடுவதற்கு கூட்டு, பொரியல் மற்றும் அவியல் இது போன்று ஏதாவது ஒன்று வைத்திருந்தால் தான் நாம் சாப்பாடை சாப்பிடவே செய்வோம் இல்லையென்றால் அரைகுறையாக சாப்பிட்டுவிட்டு எழுந்து விடுவோம்.
இதையும் படியுங்கள் : சுவையான பொன்னாங்கன்னி கீரை கூட்டு செய்வது எப்படி ?
அதுவும் குழந்தைகள் என்றால் சுத்தமாக கூட்டு இல்லாமல் சாப்பிட மாட்டார்கள் நீங்களும் அடுத்த நாளைக்கு என்ன கூட்டு செய்வது என்று சிந்தித்துக் கொண்டே இருப்பதற்கு பதிலாக வாரத்தில் ஒரு நாள் இது போன்று இந்த பீன்ஸ் கூட்டு செய்து பாருங்கள் இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும் நீங்கள் வைத்த ஒரு தட்டு சோறும் காலி ஆகிவிடும் அந்த அளவிற்கு அசத்தலான சுவையில் இந்த பீன்ஸ் கூட்டு இருக்கும். ஆகையால் இன்று பீன்ஸ் கூட்டு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்து இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
English Overview: beans kootu is one of the most important dishes in india. beans kootu recipe or beans kootu seivathu eppadi or beans kootu in Tamil are a few important terms to describe this recipe in the tamil language.
Ingredients
Method
முதலில் நாம் எடுத்துக் கொண்ட கால் கிலோ அளவிலான பீன்ஸை முடிந்த அளவிற்கு பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து மூன்று டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.
பின் எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதனுடன் ஒரு டீஸ்பூன் அளவு கடுகு உளுந்தம் பருப்பு சேர்த்து கொள்ளவும், பின் கடுகு பொரிந்து வந்தவுடன் ஒரு டீஸ்பூன் அளவு கடலைப்பருப்பு மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து வறுக்கவும்.
பின் பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள். பின் வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியவுடன். இதனுடன் நாம் நறுக்கி வைத்திருக்கும் பீன்ஸ் சேர்த்து நன்கு கிளறி விடுங்கள்.
அதன் பின் இதனுடன் ஒரு அரை டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி பீன்ஸை வேக வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின் ஒரு மிக்ஸி ஜாரில் மூன்று டீஸ்பூன் வறுத்த வேர்க்கடலை, 3 டீஸ்பூன் பொட்டு கடலை, அரை டீஸ்பூன் சீரகம், இரண்டு சில் தேங்காய் நறுக்கி சேர்த்துக் கொள்ளவும், இரண்டு வர மிளகாய் மற்றும் சிறிது கருவேப்பிலை சேர்க்கவும்.
பின் இதனுடன் தண்ணீர் சேர்க்காமல் அரைகுறையாய் திருதிருவன அரைத்துக் கொள்ளுங்கள். பின்பு இந்த அரைத்த மசாலாவை பீன்ஸ் உடன் சேர்த்து கிளறி விடுங்கள். பின் ஐந்து நிமிடம் பச்சை வாடை போகும் வரை கிளறி விட்டு வேக வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் சுவையான பீன்ஸ் கூட்டு தயார்.






