பீட்ரூட் ரொம்ப ரொம்ப சத்தான ஒரு காய்கறி அப்படினு சொல்லலாம் இந்த பீட்ரூட்ல ஜூஸ் போட்டு குடித்து இருப்பீங்க, பீட்ரூட்டில பொரியல் கூட்டு செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க, பீட்ரூட் பச்சடி கூட செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா இந்த பீட்ரூட் பிரியாணி இதுவரைக்கும் யாருமே செஞ்சிருக்க மாட்டீங்க. இந்த செய்முறையில் ஒரே ஒரு தடவை பீட்ரூட் பிரியாணி செஞ்சு பாருங்க அதுக்கப்புறமா நீங்களே உங்க வீட்ல அடிக்கடி செய்வீங்க. வெஜிடபிள் பிரியாணி காளான் பிரியாணி, முட்டை பிரியாணி, மட்டன் பிரியாணி சிக்கன் பிரியாணி மீன் பிரியாணி அப்டின்னு நிறைய ரெசிபிஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க.
ஆனா இந்த பிரியாணி சாப்பிடுறதுக்கு ரொம்ப ருசியா சூப்பரா இருக்கும். பீட்ரூட் வச்சு பொரியல் செஞ்சு கொடுத்தா குழந்தைகள் சாப்பிட மாட்டாங்க அப்படின்னா இந்த மாதிரி பிரியாணி ரெசிபி செஞ்சு கொடுங்க. வீட்ல சிக்கன் மட்டன் எடுக்காத சமயத்துல பீட்ரூட் இருந்தா அதை வச்சு சூப்பரா இந்த மாதிரி பிரியாணி செஞ்சு கூடவே தயிர் பச்சடி வச்சு கொடுத்துட்டீங்கன்னா குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க. குழந்தைகளுடோ லஞ்ச் பாக்ஸுக்கும் இதை நீங்க கொடுத்து விடலாம்.
கண்டிப்பா விரும்பி சாப்பிட்டு டிபன் பாக்ஸ் காலியாகி தான் கொண்டு வருவாங்க. ஸ்கூல் போற குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் ஆபீஸ் போறவங்களுக்கு காலேஜ் போறவங்களுக்கு எல்லாருக்குமே கொடுத்து விடலாம். சைட் டிஷ்ஷே இல்லையென்றால் கூட சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். இதுல நம்ம தேங்காய் பால் ஊத்தி செய்றதால டேஸ்ட் இன்னுமே அட்டகாசமா இருக்கும். தேங்காய் பால் கண்டிப்பா சேர்த்துக்கோங்க அப்பதான் டேஸ்ட் இன்னும் சூப்பராக இருக்கும்.இப்ப வாங்க இந்த ருசியான டேஸ்டான பீட்ரூட் பிரியாணி ரெசிபி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
பீட்ரூட் பிரியாணி | Beetroot Biriyani Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 குக்கர்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 1/4 கி பீட்ரூட்
- 1 பட்டை, கிராம்பு
- 1 கல்பாசி
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- 1 டேபிள் ஸ்பூன் நெய்
- புதினா, கொத்தமல்லி சிறிதளவு
- 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 2 பெரிய வெங்காயம்
- 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1 கப் அரிசி
- 2 ஏலக்காய்
- 1 கப் தேங்காய் பால்
செய்முறை
- முதலில் ஒரு பீட்ரூட்டை நறுக்கி வைத்துக் கொண்டு மீதி உள்ள பீட்ரூட்டை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு குக்கரில் எண்ணெய் நெய் சேர்த்து பட்டை கிராம்பு, சோம்பு, ஏலக்காய், கல்பாசி சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
- பெரிய வெங்காயத்தை நறுக்கி சேர்த்து நன்றாக வதக்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- பீட்ரூட்டை நறுக்கி வைத்துள்ளதை சேர்த்து நன்றாக வதக்கியதும் புதினா கொத்தமல்லி இலைகள் மிளகாய் தூள் கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.
- அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு ஒரு கப் பீட்ரூட் சாறு ஒரு கப் தேங்காய் பால் சேர்த்து அரிசியை கழுவி சேர்த்து மூன்று விசில் விட்டு இறக்கினால் சுவையான பீட்ரூட் பிரியாணி தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : சுட சுட சாதத்துடன் சாப்பிட ருசியான பீட்ரூட் குழம்பு ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!