- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
எப்போவுமே நம்ம ஹோட்டலுக்கு போனா அங்க மீல்ஸ் ஆர்டர் பண்ணும் போது பெரும்பாலான ஹோட்டலில் இந்த பீட்ரூட் சென்னா பொரியல் இருக்கும் இந்த பொரியல் ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும். ஆனா இந்த பொரியல் எப்படி செய்றது அப்படின்னு எல்லாருக்கும் ஒரே குழப்பமா இருக்கும். இனிமேல் அந்த குழப்பமே தேவை இல்லை இதே செய்முறைல செஞ்சு பாத்தீங்கன்னா கண்டிப்பா ஹோட்டலில் கிடைக்கிற அதே பீட்ரூட் சென்னா பொரியல் வீட்லையே செய்ய முடியும். வீட்ல காரக்குழம்பு வச்சா போதும் இந்த சைட் டிஷ் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். இந்த சைட் டிஷ் செய்றது ரொம்ப ரொம்ப ஈசி ஹோட்டல்ல கிடைக்கிறதால அங்க மட்டும் தான் நல்லா இருக்கும் அப்படின்னு நினைக்க வேண்டாம்.
வீட்ல இதே மாதிரி செஞ்சு பாருங்க கண்டிப்பா செம டேஸ்டா இருக்கும். சுவையான இந்த ரெசிபியை ஒரு தடவை வீட்ல செஞ்சுட்டீங்கன்னா அதுக்கப்புறம் வீட்ல இருக்குற எல்லாரும் அடிக்கடி கேட்பாங்க நீங்களுமே வீட்ல அடிக்கடி செய்வீங்க. வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா அவங்களுக்கு சைவ விருந்து வைக்கும் போது இந்த சூப்பரான பீட்ரூட் சென்னா பொரியல் செஞ்சு கொடுங்க கண்டிப்பாக விரும்பி சாப்பிடுவாங்க. சுவையான இந்த ரெசிபியை மிஸ் பண்ணாம உங்க வீட்ல செஞ்சு பாருங்க சுடச்சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடுவதற்கும் ரொம்ப டேஸ்டா இருக்கும்.
குழந்தைகளுக்கு இந்த பொரியல்ல சாப்பாடு போட்டு பிசைந்து ஊட்டி விடலாம் லஞ்ச் பாக்ஸ்க்கும் கொடுத்து விடலாம். ரொம்ப ரொம்ப ஆரோக்கியமான ஒரு உணவாக இருக்கும். பீட்ரூட் சென்னா ரெண்டுமே ஹெல்தியான உணவு அதனால கண்டிப்பா இதை அடிக்கடி குழந்தைகளுக்கு சென்று கொடுங்க. இதுக்கு வெள்ளை சுண்டல் மட்டும்தான் பயன்படுத்தணும் கருப்பு சுண்டல் பயன்படுத்தினால் நல்லா இருக்காது. கண்டிப்பா ஒரு தடவை வெள்ளை சுண்டல் பீட்ரூட் சேர்த்து இந்த பொரியல் செஞ்சு பாருங்க. இப்ப வாங்க இந்த சுவையான பீட்ரூட் சென்னா பொரியல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : காலை டிபனுக்கு சூப்பரான பீட்ரூட் இடியாப்பம் ஒரு முறை இப்படி வீட்டில் செஞ்சி பாருங்கள்!
Ingredients
Method
ஒரு குக்கரில் ஊற வைத்த வெள்ளை சுண்டல் சேர்த்து மஞ்சள் தூள் உப்பு சேர்த்து பொடி பொடியாக நறுக்கிய பீட்ரூட் பச்சை மிளகாய் சேர்த்து நான்கு விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்.
ஒரு மிக்ஸி ஜாரில், தேங்காய் துருவல் சின்ன வெங்காயம், புளி, சீரகம், கடுகு, காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து பருப்பு கடலைப்பருப்பு கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதை சேர்த்து ஐந்து நிமிடத்திற்கு வதக்கிய பிறகு வேக வைத்துள்ள சுண்டல் பீட்ரூட்டை சேர்த்து நன்றாக கிளறி இறக்கினால் சுவையான பீட்ரூட் சென்னா பொரியல் தயார்.






