Advertisement
சைவம்

சூப்பரான ஸ்நாக்ஸ் சாப்பிடனுமா வீட்டில் 2 பீட்ரூட் இருந்தால் போதும் இப்படி மட்டும் செய்து பாருங்க!

Advertisement

இன்று நாம் மாலை நேரங்களில் டீ காபியுடன் ஸ்நாக்ஸ் ஆக சாப்பிடும் வகையில் பீட்ரூட் கோலா உருண்டை பற்றி தான் பார்க்கப் போகிறோம். பொதுவாக சிக்கன் மட்டன் மட்டும் பயன்படுத்தி செய்யும் கோலா உருண்டைகளை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் இது போன்று சைவ கோலா உருண்டைகளையும் சில காய்கறிகளை பயன்படுத்தி நாம் செய்யலாம் அப்படிதான் இன்று நாம் பீட்ரூட்டை பயன்படுத்தி கோலா உருண்டை செய்ய போகிறோம். உங்கள்

இதையும் படியுங்கள் : சுவையும் மணமும் நிறைந்த அரபிக் டீ செய்வது எப்படி ?

Advertisement

வீட்டில் உள்ள குழந்தைகள் பீட்ரூட்டை ஒதுக்குகிறார்கள் என்றால். இது போன்று பீட்ரூட்டில் இந்த சைவ கோலா உருண்டை செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். மேலும் இது போன்ற மழை நேரங்களில் மலைக்கு இதமாக சுட சுட செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த பீட்ரூட் கோலா உருண்டை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் பாருங்கள்.

பீட்ரூட் கோலா உருண்டை | Beetroot Kola Urundai Recipe in Tamil

Print Recipe
இது போன்று சைவ கோலா உருண்டைகளையும் சில காய்கறிகளை பயன்படுத்தி நாம் செய்யலாம் அப்படிதான் இன்று நாம் பீட்ரூட்டை பயன்படுத்தி கோலா உருண்டை செய்ய போகிறோம். உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் பீட்ரூட்டை ஒதுக்குகிறார்கள் என்றால். இது போன்று பீட்ரூட்டில் இந்த சைவ கோலா உருண்டை செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். மேலும் இது போன்ற மழை நேரங்களில் மலைக்கு இதமாக சுட சுட செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
Course Snack
Cuisine Indian, TAMIL
Keyword Kola Urundai, கோலா உருண்டை
Prep Time 20 minutes
Advertisement
Cook Time 20 minutes
Total Time 40 minutes
Servings 5 People
Calories 253

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Ingredients

தேங்காய் அரைக்க

  • ¼ கப் துருவிய தேங்காய்
  • 4 பச்சை மிளகாய்
  • 4 சின்ன வெங்காயம்
  • 1 tsp சோம்பு
  • 2 பட்டை
  • 1 tsp கசகசா
  • 1 பல் பூண்டு
  • 1 துண்டு இஞ்சி

கோலா உருண்டை செய்ய

  • 1 பெரிய பீட்ரூட் துருவியது
  • அரைத்த தேங்காய்
  • 2 tbsp பொட்டு கடலை மாவு
  • 1 tbsp அரிசி மாவு
  • உப்பு தேவையான அளவு
  • பொரிக்க எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் நான்கு டேபிள் ஸ்பூன் அளவு பொட்டுக்கடலை சேர்த்து மாவாக அரைத்துக் கொள்ளுங்கள். பின் அரைத்த பொட்டுகடலை மாவை தனியாக எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
    Advertisement
  • பின் மீண்டும் மிக்ஸி ஜாரில் கால் கப் துருவிய தேங்காய், நான்கு பச்சை மிளகாய், 4 சின்ன வெங்காயம், ஒரு டீஸ்பூன் சோம்பு, இரண்டு பட்டை, ஒரு டீஸ்பூன் கசகசா ஒரு பல் பூண்டு, ஒரு துண்டு இஞ்சி போன்ற பொருட்களை சேர்த்து கொரகொரவென அரைத்துக் கொள்ளுங்கள்.
  • முக்கியமாக இதனுடன் தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளுங்கள். பின்பு ஒரு பெரிய பவுளில் ஒரு பெரிய அளவு பீட்ரூட்டை துருவி சேர்த்து அதனுடன் இரண்டு டேபிள்ஸ்பூன் அளவு பொட்டுக்கடலை மாவு, அரைத்த தேங்காய், தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு அரிசி மாவு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள்.
  • பின்பு பீட்ரூட்டை சிறு சிறு உருண்டையாக பிடித்து ஒரு தட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். பின் கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, தீயை மிதமாக எரிய விட்டு பின் எண்ணெய் காய்ந்ததும்.
  • பின் நாம் உருண்டை பிடித்து வைத்திருக்கும் கோலா உருண்டையை கடாயில் சேர்த்து நன்கு வேகமாறு பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் சுவையான சைவ பீட்ரூட் கோலா உருண்டை இனிதே தயாராகி விட்டது.

Nutrition

Serving: 150gram | Calories: 253kcal | Carbohydrates: 33g | Protein: 13g | Fat: 1g | Saturated Fat: 0.5g | Cholesterol: 10mg | Sodium: 2mg | Potassium: 252mg | Fiber: 1g | Sugar: 2g | Vitamin A: 13IU
Advertisement
Prem Kumar

Recent Posts

மக்காச்சோள கார பணியாரம் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!

தோசை முதல் இட்லி மற்றும் சாம்பார் வரை தென்னிந்திய உணவு எல்லாமே ஆரோக்கியம் தான். தென்னிந்திய உணவு வகைகளில் பெரும்பாலான…

1 மணி நேரம் ago

இன்றைய ராசிபலன் – 30 ஏப்ரல் 2024!

மேஷம் இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. பல சவால்களை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்திலும், வேலையிலும் கவனம் செலுத்த வேண்டிய…

5 மணி நேரங்கள் ago

இரவு டிபனாக ருசியான துவரம் பருப்பு அடை இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்க! 2 அடை அதிகமாவே சாப்பிடுவாங்க!

துவரம் பருப்பில் உடம்பிற்கு தேவையான அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. அதனால் தான் பல உணவை சமைப்பதாக இருந்தாலும் அதில் ஒரு…

13 மணி நேரங்கள் ago

ருசியான வெஜிடபிள் ஒயிட் குருமா இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!

இன்று உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு ஒரு அட்டகாசமான சைடு டிஷ் செய்ய வேண்டுமா? உங்கள் வீட்டில்…

14 மணி நேரங்கள் ago

தித்திக்கு சுவையில் ஆப்பிள் கீர் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! பார்தாலே நாவில் எச்சி ஊறும்!

கீர் ஒரு சுவையான வட இந்திய ரெசிபி ஆகும். கீரில் பல வகைகள் உள்ளன. பாதாம் கீர், கேரட் கீர்,…

15 மணி நேரங்கள் ago

முட்டை போண்டா இப்படி செஞ்சி குடுங்க நிமிசத்துல எல்லாமே காலி ஆகிவிடும்

என்னதான் வாழைக்காய் பஜ்ஜி வெங்காய பஜ்ஜி வெங்காய போண்டா உளுந்து வடை பருப்பு வடை மசால் போண்டா சாப்பிட்டாலும் முட்டை…

16 மணி நேரங்கள் ago