- Advertisement -
பீட்ரூட்டை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட இந்த சுவையான மில்க் ஷேக்கை குழந்தைகள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு குடிப்பது மிகவும் ஆரோக்கியமானது. நிறைய ஃபுட் கலரிங் கொண்ட சாதாரண மில்க் ஷேக் கொடுப்பதற்கு பதிலாக இந்த பீட்ரூட் மில்க் ஷேக்கை கொடுக்கலாம். குழந்தைகளுக்கு மில்க் ஷேக் என்றாலே பிடிக்கும் ஆனால் சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கும் மில்க் ஷேக் குழந்தைகளுக்கு நல்லதல்ல.
இதையும் படியுங்கள் : சுவையான ஆப்பிள் மில்க் ஷேக் செய்வது எப்படி ?
- Advertisement -
எனவே ரோஸ் மில்க் சுவையுடன் கூடிய இந்த பீட்ரூட் மில்க் ஷேக் குழந்தைகளுக்கு ஆரோக்கியமானது. இந்த மில்க் ஷேக்கை வீட்டிலே குறைந்த நேரத்தில் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை சரியாக படித்து பார்த்து நீங்களும் செய்து குழந்தைகளுக்கு கொடுங்கள்.
-விளம்பரம்-
பீட்ரூட் மில்க் ஷேக் | Beetroot Milkshake Recipe In Tamil
பீட்ரூட்டை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட சுவையான மில்க் ஷேக் இதை குழந்தைகள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமானது. நிறைய ஃபுட் கலரிங் கொண்ட சாதாரண மில்க் ஷேக் கொடுப்பதற்கு பதிலாக இந்த பீட்ரூட் மில்க் ஷேக்கை கொடுக்கலாம். குழந்தைகளுக்கு மில்க் ஷேக் என்றாலே பிடிக்கும் ஆனால் சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கும் மில்க் ஷேக் குழந்தைகளுக்கு நல்லதல்ல. எனவே ரோஸ் மில்க் ஷேக் சுவையுடன் கூடிய இந்த பீட்ரூட் மில்க் ஷேக் குழந்தைகளுக்கு ஆரோக்கியமானது. இந்த மில்க் ஷேக்கை வீட்டிலே குறைந்த நேரத்தில் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை சரியாக படித்து பார்த்து நீங்களும் செய்து குழந்தைகளுக்கு கொடுங்கள்.
Yield: 2 people
Calories: 47kcal
Equipment
- 1 பவுள்
- 1 மிக்ஸி
- குக்கர்
தேவையான பொருட்கள்
- 1 கப் பால்
- 2 பீட்ரூட்
- ½ டேபிள் ஸ்பூன் ஏலக்காய்த்தூள்
- சர்க்கரை தேவையான அளவு
- ஐஸ் கட்டிகள் தேவைப்பட்டால்
செய்முறை
- முதலில் பீட்ரூட்டைத் தோல் சீவி நறுக்கி, ஒரு குக்கரில் சேர்த்து நான்கு விசில் வரும் வரை வேகவைக்கவும்.
- பிறகு பீட்ரூட்டை மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.
- அதை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- பிறகு மிக்சியில் பால், சர்க்கரை சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும்.
- பிறகு ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு அரைத்த பீட்ரூட்டை எடுத்து பாலில் சேர்த்து, ஏலக்காய்தூள் சேர்த்து, அரைத்து எடுத்தால், பீட்ரூட் மில்க் ஷேக் தயார். தேவைப்பட்டால் ஐஸ் கட்டிகளை சேர்த்து கொள்ளலாம்.
Nutrition
Serving: 40கிராம் | Calories: 47kcal | Carbohydrates: 8.9g | Protein: 15g | Saturated Fat: 2.4g | Sodium: 27mg | Potassium: 87mg | Sugar: 8.9g