போட்டிகள் நிறைந்த இந்த உலகில் எந்த தொழில் செய்தாலும் அதில் நிறைய சிக்கல்களும் சிரமங்களும் இருக்கும். சூழ்ச்சிகளாலும் பொறாமையாலும் உங்கள் தொழில் முன்னேற்றத்தை வளர்ச்சியை அடையாமல் இருந்தாலும் அனைவருக்கும் மத்தியில் நீங்கள் முன்னேற முருகப்பெருமானை இந்த ஒரு பொருளால் அபிஷேகம் செய்து பாருங்கள். சிறப்பான தொழில் வளர்ச்சிக்கு முருகனுக்கு அபிஷேகம் செய்யும் முறையை பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.

அபிஷேக பிரியர் முருகர்
முருகன் அபிஷேக பிரியராக இருப்பவர். முருகனுக்கு அபிஷேகம் செய்யக்கூடிய அபிஷேக பொருட்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான பலன்களை கொடுக்கக் கூடியது. முருகனுக்கு பிடித்தமான அனைத்து பொருட்களையும் வாங்கிக் கொடுத்து அபிஷேகம் செய்ய முடியாதவர்கள் உங்களுக்கு என்ன பிரச்சனை இருக்கிறதோ அதற்கு தகுந்தார் போல் நீங்கள் அபிஷேகத்தில் கலந்து கொண்டு அபிஷேகத்திற்கான பொருளை வாங்கி கொடுக்கலாம். வீட்டிலேயே கூட முருகன் சிலைக்கு அபிஷேகம் செய்து வழிபடலாம்.
வேண்டுதல்களை நிறைவேற்றும் முருகப்பெருமான்
தொழில் சிறப்பாக அமையவும் போட்டிகளை எதிர்த்து செய்யும் தொழில் முன்னேற்றம் காண்பதற்கும் முருகப்பெருமானுக்கு எந்த பொருளால் அபிஷேகம் செய்வது என்பதை பற்றி பார்க்கலாம். தமிழ் கடவுள் ஆன முருக பெருமான் பக்தர்கள் அவரிடம் கேட்கும் அனைத்து வேண்டுதல்களையும் விரைவில் நிறைவேற்றுவார். பக்தர்களிடையே முருகப்பெருமான் மீது அசைக்க முடியாத நம்பிக்கை நிலவி வருவதற்கு காரணம் முருகப்பெருமான் எதை கேட்டாலும் கொடுப்பார். முருகப்பெருமானுக்கு உகந்த நாள் செவ்வாய்க்கிழமை என்பதால் வீட்டிலேயே முருகன் சிலை வைத்திருப்பவர்கள் செவ்வாய்க்கிழமை அன்று பூஜை செய்து அபிஷேகம் செய்யலாம்.
முருகப்பெருமான் வழிபாடு
முதலில் பூஜை அறையை சுத்தம் செய்து முருகப்பெருமானுக்கு உகந்த பூக்களால் அபிஷேகம் செய்ய வேண்டும். வெற்றிலை தீபம் என்றால் முருகனுக்கு மிகவும் விருப்பமான ஒன்று எனவே தாம்பூலத்தில் ஆறு வெற்றிலை கை வட்டமாக பரப்பி வைத்து அதன் மீது ஒவ்வொரு அகல் விளக்குகளாக வைத்து எண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றுங்கள். முருகப்பெருமானுக்கு பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்தால் தொழிலில் நல்ல முன்னேற்றம் காணலாம் எனவே சுத்தமான பன்னீரை எடுத்து முருகனுக்கு அபிஷேகம் செய்து தீபங்களை ஏற்றி வைத்து வீட்டிலேயே மனதார வழிபாடு செய்யலாம். கந்த சஷ்டி கவசம் பாடி முருகனுடைய மனதை குளிர செய்யலாம். முருகப்பெருமானுடைய அருளால் உங்களுடைய தொழில் சிறப்பாக இருக்கும் இந்த பூஜையை சஷ்டி கிருத்திகை வளர்பிறை போன்ற நாட்களில் செய்யலாம். இந்த பூஜையை சஷ்டியில் விரதம் இருந்து மேற்கொண்டால் எல்லா வளங்களும் கிடைக்கும். கோவிலுக்கு சென்று பன்னீர் வாங்கி கொடுத்து அபிஷேகம் செய்வதால் எவ்வளவு இடையூறுகள் இருந்தாலும் தொழில் ரீதியான போட்டிகள் பிரச்சனைகள் இருந்தாலும் விரைவில் நிவர்த்தி அடையும்.
இதனையும் படியுங்கள் : பணக்கஷ்டம் தீர முருகனுக்கு ஒரு ரூபாய் பரிகாரம்!!




