திராட்சை பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா ?

- Advertisement -

முன்பெல்லாம் பலரது வீடுகளில் ஸ்னாக்ஸ் என்று என்று கேட்டால் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் தின்பண்டங்களையும் பழ வகைகளையும் தான் சாப்பிட தருவார்கள். உதாரணமாக நீங்கள் சிறுவயதில் இருந்த பொழுது உங்கள் வீட்டில் உங்களுக்கு அதிகமாக பழங்களை சாப்பிட கொடுத்திருப்பார்கள் அதையும் தாண்டி கடலை மிட்டாய், எள்ளு உருண்டை, சீடை போன்ற உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை மட்டும் தான் தந்திருப்பார்கள். ஆனால் இப்போது சாப்பாட்டையே ஒரு நிமிடத்தில் தயார் செய்து சாப்பிடலாம் என்ற நிலைமைக்கு வந்து விட்டோம். இப்படி ஆரோக்கியம் மற்ற சூழலில் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : உடம்பில் உள்ள கழிவுகளை நீக்க எளிய வழி!

- Advertisement -

பல ரெடிமேடு உணவுகள் இன்று சூப்பர் மார்க்கெட்டில் இருந்து மளிகை கடை வரை விற்பனை செய்து கொண்டு இருக்கிறார்கள். இது போன்ற பொருட்களை நீங்கள் முதலில் தவிர்த்து விடுங்கள். வீட்டில் முறையாக செய்யப்படும் உணவுகளை மட்டும் சாப்பிட்டு உடலுக்கு நன்மை பயக்கும் பழ வகைகளை சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்வதற்கு வழிமுறைகளை மேற்கொள்ளுங்கள். அந்த வகையில் இன்று ஒரு திராட்சை பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி நாம் இந்த உடல் நலம் குறித்த தொகுப்பில் இன்று காணலாம்.

சீரான ரத்த ஓட்டம்

திராட்சைகளில் நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளதால். இந்த நார்ச்சத்துக்கள் நாம் உடம்பில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைப்பதற்கு உதவியாக இருக்கும் மேலும் உடலில் சீரான ரத்த ஓட்டத்திற்கும் உதவியாக இருக்கும்.

எலும்புகள் ஆரோக்கியத்திற்கு

திராட்சை சாப்பிடுவதால் நம்முடைய எலும்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளக்கூடிய கால்சியம், விட்டமின் கே, பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற பொருள்கள் திராட்சையில் அதிக அளவில் காணப்படுகிறது.

-விளம்பரம்-

நோய் எதிர்ப்பு சக்தி

திராட்சை சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் முதன்மை நன்மை நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். திராட்சை பழத்தில் அதிகமாக காணப்படும் விட்டமின் சி கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிரிகளான பாக்டீரியா வைரஸ் போன்றவைக்கு எதிராக போராட நம் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

நல்ல தூக்கதிற்கு

நம் உடலில் தூங்குவதற்காக மெலடோனின் என்ற சுரப்பி சுரக்கும். திராட்சை சாப்பிடுவதால் இந்த சுரப்பி சுரப்பதற்காக திராட்சைகள் பெரிதும் உதவியாக இருக்கும் ஆகையால் நல்ல துக்கம் வரும்.

சக்கரை அளவை கட்டுபடுத்தும்

திராட்சை பழம் சாப்பிடுவதன் மூலம் இரத்தத்தில் சர்க்கரை அளவை இது அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளும். மேலும் திராட்சை பழம் சாப்பிடுவதால் நீரிழிவு நோய் ஏற்படாமல் தடுக்கும் வல்லமை கொண்டது.

-விளம்பரம்-

புற்றுநோயை தடுக்க

மேலும் திராட்சை பழத்தை நாம் சாப்பிடுவதால் திராட்சை பழத்தில் அதிகமாக சாப்பிடுவதால் புற்றுநோய் ஏற்படும் ஆபத்தை குறைக்க உதவும். மேலும் திராட்சையில் ரெஸ்வொரட்ரோல் எனப்படும் பொருள் புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களை பரவலை கட்டுப்படுத்தி புற்று நோய்க்கு எதிராகவும் செயல்படும்.

நரம்பு பிரச்னைகள்

மேலும் திராட்சையில் உள்ள ரெஸ்வொரட்ரோல் நமக்கு நரம்பு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும் இதனால் நம்முடைய மூளை ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவிகரமாக இருக்கும்.

இதய நோய்களுக்கு

திராட்சை பழத்தில் உள்ள ரெஸ்வொரட்ரோல் என்ற பொருள் புற்றுநோயை தடுப்பது மட்டும் இல்லாமல் வேறொரு நன்மையும் நமக்கு செய்கிறது. இதற்கு இதயத்திற்கு ஆபத்து விளைவிக்கும் நோய்கள் மற்றும் ஹார்ட் அட்டாக் போன்றவற்றிலிருந்து நம்மை பாதுகாக்கும்.

இதையும் படியுங்கள் : உடல் எடையை இயற்கையாக அதிகரிக்க வேண்டுமா ? இதை செய்து சாப்பிடுங்கள்.

இரத்த அழுத்தம்

மேலும் திராட்சையில் இருக்கும் பொட்டாசியம் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதை குறைக்க வல்லது, சோடியம் ரத்த அழுத்த பிரச்சனைகளை குறைப்பதற்கு உதவியாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here