கிராமத்து ஸ்டைலில் சத்தான உளுந்த களி செய்வது எப்படி ?

- Advertisement -

உங்கள் உடல் எடைய அதிகரிக்க வேண்டும் என்று ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடக்கூடாது. உடல் எடையும் அதிகரிக்க வேண்டும் அதே நேரத்தில் சத்துள்ள உணவாகவும் இருக்க வேண்டும். அதற்காக நாம் சாப்பிட வேண்டிய உணவு உளுந்த களி இயற்கையான முறையில் உடல் எடையை அதிகரிக்கலாம். உளுந்த களியை குறிப்பாக குழந்தை பெற்ற பெண்கள், வயதுக்கு வந்த பெண்களுக்கு சாப்பிட கொடுப்பார்கள், ஆண்களும் சாப்பிடலாம் குழந்தைகள் என அனைவரும் சாப்பிடலாம்.

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : உடல் எடையை வேகமாக குறைக்கும் காலிஃபிளவர் பொரியல் செய்வது எப்படி ?

- Advertisement -

குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கும் பொழுது உழேளுந்த களியுடன் நெய் சேர்த்து கொடுக்கலாம். இப்பொழுது இந்த சத்தான உளுந்த களியை எப்படி செய்யலாம், அதற்கு தேவையான பொருட்கள், செய்முறை மற்றும் இதன் மருத்துவ குணங்கள் ஆகியவற்றை இந்த செய்தி தொகுப்பில் நாம் காணலாம்.

தேவையான பொருட்கள்

  1. கருப்பு உளுந்து – 250 கிராம்
    2.நல்லெண்ணெய் – 50 கிராம்
    3.நாட்டு சக்கரை – 50 கிராம்
    4.தண்ணீர் – தேவையான அளவு

உளுந்த களி செய்முறை

செய்முறை 1

முதலில் எடுத்துக்கொண்ட கருப்பு உளுந்தை நன்கு தடிமனான கடாயில் போட்டு வறுக்கவும். (ஐந்து நிமிடம் வறுத்தால் போதுமானதாக இருக்கும்)

-விளம்பரம்-

செய்முறை 2

நன்கு வறுத்து எடுத்துக் கொண்ட கருப்பு உளுந்தை மிக்சியில் போட்டு நன்றாக மாவாகும் வரை அரைத்து கொள்ளவும்.

செய்முறை 3

மாவாக்கி கொண்ட கருப்பு உளுந்தை அடுப்பு பற்ற வைக்காமல் கடாயில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு நன்றாக கலக்கி கொள்ளவும்.

செய்முறை 4

இப்படி கலக்கிக் கொண்ட மாவை கடாயுடன் அடுப்பில் வைத்து பற்ற வைக்கவும் (மிதமான சூட்டிலேயே அடுப்பை வைக்கவும்)

-விளம்பரம்-

செய்முறை 5

நான்கு டீஸ்பூன் நல்லெண்ணையை விட்டு நன்றாக கலக்கிக் கொண்டே இருக்கவும் சிறிது நேரம் கழித்து நாட்டு சர்க்கரையை உளுந்த மாவுடன் சேர்த்து கலக்கி கொள்ளவும்.

செய்முறை 6

பின்பு 4 டீஸ்பூன் நல்லெண்ணையை சேர்க்கவும் அதன் பின் உளுந்த மாவு அல்வா பாதத்திற்கு வரும்வரை நன்றாக கிண்டவும்.

செய்முறை 7

அல்வா பாதத்திற்கு வந்ததா என்று பார்க்க நல்லெண்ணையை கையில் தொட்டு களியை எடுத்துப் பார்த்தால் கையில் ஒட்டாமல் வந்து விட்டால் சுவையான கருப்பு உளுந்தங்களி தயாராகிவிட்டது.

செய்முறை 8

பின்பு கடாயில் இருந்து எடுத்து ஒரு பவுலில் வைத்து மேல் நான்கு டீஸ்பூன் அல்லது தேவையான அளவிற்கு நெய் ஊற்றி சாப்பிட கொடுக்கலாம்.

மருத்துவ குணங்கள்

இப்படி செய்யப்பட்ட கருப்பு உளுந்த களியை வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிட்டு வந்தால்.உடல் எலும்புகளுக்கும், நரம்புகளுக்கும் நன்றாக வலுவை சேர்க்கும் மற்றும் இயற்கையான முறையில் உடல் எடையே அதிகரித்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here