வீட்டில் சம்பாதிக்க கூடிய இடத்தில் இருக்கும் ஒருவர் தொழில் வளர்ச்சி பெற்று மென்மேலும் அதிகம் சம்பாதிக்கக்கூடிய முன்னேற்றம் பெறுவதற்கு அவர்களுடைய கையால் இந்த தீபத்தை ஏற்றுவது நல்ல பலன்களை கொடுக்கும். ஆன்மீக ரீதியாக பல நன்மைகளை அளிக்கக்கூடிய நவதானிய தீபம் ஏற்றுவதை பற்றியும் அதனுடைய பலன்களைப் பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.
நவதானியங்கள்
நவதானியங்கள் ஒன்பது கிரகங்களுக்கும் உரிய தானியங்கள் இந்த தானியங்களை கொண்டு தீபம் ஏற்றும் போது அந்தந்த கிரகங்களின் ஆற்றலை ஈர்த்து அவற்றின் நற்பலன்களை பெறலாம். இதனால் எந்த வகையான தோஷங்களாக இருந்தாலும் அவை நீங்கி தொழிலில் சிறந்த வளர்ச்சி கிடைக்கும்.

நவகிரகங்களுக்குரிய தானியங்கள்
கோதுமை-சூரியன்
நெல் -சந்திரன்
துவரை-செவ்வாய்
பச்சைப்பயிறு-புதன்
கொண்டைக்கடலை-குரு
மொச்சை-சுக்கிரன்
எள்-சனி
உளுந்து-ராகு
கொள்ளு-கேது
நவதானிய தீபம் ஏற்றுவதால் உண்டாகும் பலன்கள்
நவதானிய மாவிளக்கு என்பது புனிதமான ஒன்று. நவதானிய விளக்கு ஏற்றும் போது வீட்டில் நேர்மறை சக்தி அதிகரிக்கும் மன அமைதி பெறும் மகிழ்ச்சி ஏற்படும். திருமண தடை குழந்தை பாக்கியம் போன்றவை தாமதமாக இருக்கும்போது நவதானிய தீபம் ஏற்றுவதால் நல்ல பலன் கிடைக்கும். தானியங்களில் லட்சுமிதேவி இருப்பதால் லட்சுமி தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். அறிவு மனத்தெளிவு போன்றவை கிடைக்கும்.
நவதானிய மாவிளக்கு ஏற்றும் முறை
நவதானியங்களை சேர்த்து மாவு செய்து மாவிளக்கு போல் செய்து அதில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் விட்டு பிரி போட்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்வதால் நல்ல பலன்கள் கிடைக்கும். நவதானியங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்தையும் பிரதிபலிக்கும் இந்த தீபத்தை ஏற்றுவதால் அந்த கிரகங்களின் சாந்தி ஏற்பட்டு பணவரவு அதிகரிக்கும். ஒன்பது தானியங்களும் ஒன்பது கிரகங்களையும் பிரதிநிதிப்படுத்துவதால் ராகு கேது தோஷம் சனி தோஷம் போன்றவை நீங்கும். இந்த தீபத்தை அமாவாசை பௌர்ணமி வெள்ளிக்கிழமை நவராத்திரி போன்ற நாட்களில் ஏற்றுவது நல்லது. இந்த விளக்கு ஏற்றும் போது “ஓம் மகாலட்சுமியை நமஹ” என்ற மந்திரத்தை 11 அல்லது 21 அல்லது 108 முறை உச்சரிக்கலாம். வீட்ல அனைவருக்கும் மன நிம்மதி கிடைக்க இந்த தீபத்தை ஏற்றுவது மிகவும் நல்லது.
இதனையும் படியுங்கள் : கனவுகள் சொல்லும் பலன்கள்




