- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Bengali
- Course
- LUNCH
இன்று உங்கள் வீட்டில் மதிய உணவிற்கு செய்ய நினைக்கிறீர்களா? சற்று வித்தியாசமான சிக்கன் ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? உங்களுக்கு பெங்காலி ரெசிபிக்கள் ரொம்ப பிடிக்குமா? அப்படியானால் பெங்காலி கிச்சடி செய்யுங்கள். இன்றைய வேகமான வாழ்க்கைச் சூழலில், உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு சத்தான உணவுகள் மிக அவசியம். அந்த வகையில், புரதச்சத்து நிறைந்த பருப்பு மற்றும் அரிசி சேர்த்து செய்யப்படும் கிச்சடி ஒரு மிகச்சிறந்த தேர்வாகும். இது செரிமானத்திற்கு எளிதானது மட்டுமின்றி, நீண்ட நேரம் பசியைக் கட்டுப்படுத்தி உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகிறது. முக்கியமாக இந்த ரெசிபி செய்வது மிகவும் சுலபம்.
அதோடு இது பேச்சுலர்கள் செய்யும் வகையில் ஈஸியான செய்முறையை கொண்டிருக்கும். வீட்டிற்கு வந்த நண்பர்கள் மற்றும் விருந்தினர்களை உபசரிக்க இந்த பெங்கால் கிச்சடியை விட சிறந்த உணவு எதுவும் இருக்க முடியாது. இதன் சுவை, சாப்பிட்டு முடித்தது உங்கள் கைகளை கழுவாமலேயே சுத்தம் செய்யும் அளவுக்கு சுவையாக இருக்கும். இந்த பெங்கால் கிச்சடியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் வகையில், மிகக் குறைந்த நேரத்தில் செய்து விடலாம். இப்போது பெங்கால் பாரம்பரிய உணவில் ஒன்றான சுவைக்கும், ருசிக்கும் பெயர் பெற்ற பெங்கால் கிச்சடி எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : குண்டாக சாப்டான பெங்கால் ரசகுல்லா எப்படி செய்வது தெரியுமா? நீங்களும் வீட்டில் செய்து பாருங்க!
Ingredients
Method
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து பாசிப்பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு குக்கரில் பாசுமதி அரிசி மற்றும் நாம் வறுத்த பாசிப்பருப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்கு வேகவைத்து எடுத்து கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து சூடானதும் காய்ந்த மிளகாய், கடுகு, சீரகம், சோம்பு, வெந்தயம், கருஞ்சீரகம் சேர்த்து பொரிந்ததும் பிரியாணி இலை, இஞ்சி, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விடவும். கொதி வந்ததும் நாம் வேகவைத்துள்ளதை சேர்த்து நன்கு கலந்து ஒரு கொதி விடவும்.
பின் நறுக்கிய கொத்தமல்லி, எலுமிச்சை சாறு மற்றும் நெய் சேர்த்து நன்கு கலந்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான பெங்கால் கிச்சடி தயார்.






