Home சைவம் பெங்காலி வெண்டைக்காய் ப்ரை இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பெங்காலி வெண்டைக்காய் ப்ரை இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

வெண்டைக்காய் வச்சு வெண்டைக்காய் கார குழம்பு வெண்டைக்காய் பொரியல் வெண்டைக்காய் பச்சடி வெண்டைக்காய் சிப்ஸ் அப்படின்னு நிறைய வெரைட்டீஸ் செய்யலாம். அந்த வகையில இன்னைக்கு நம்ம வெண்டைக்காய் வச்சு செய்யக்கூடிய ஒரு பெங்காலி வெண்டைக்காய் ஃப்ரைதான் செய்யப் போறோம். இந்த வெண்டைக்காய் ஃப்ரை ரொம்ப ரொம்ப சிம்பிளா அதிக மசாலா இல்லாமல் இருக்கும். நிறைய மசாலா போட்டு பொரியல் சாப்பிட பிடிக்காதவங்க இந்த மாதிரி சிம்பிளா ஒரு பொரியல் செஞ்சு சாப்பிடலாம்.

-விளம்பரம்-

குழந்தைகளோட டிபன் பாக்ஸ்க்கு கணவரோட லஞ்ச் பாக்ஸ்க்கு வீட்ல வேலைக்கு போற பெண்களோட லஞ்ச் பாக்ஸ்க்கு எல்லாத்துக்குமே ஒரு சூப்பரான சைடு டிஷ்ஷா இந்த வெண்டைக்காய் ஃப்ரை இருக்கும். இந்த வெண்டைக்காய் ப்ரை பெங்காலில ரொம்ப ரொம்ப ஃபேமஸ். அப்படி பெங்காலி ல பேமஸா இருக்கக்கூடிய வெண்டைக்காய் ஃப்ரை தான் இப்ப நம்ம செய்யப்போறோம். இந்த வெண்டைக்காய் ப்ரை செய்றது ரொம்ப ரொம்ப ஈஸி.

வெண்டைக்காய் கட் பண்ணி வச்சுட்டா போதும் அதுக்கு அப்புறமா ஒரு 15 நிமிஷத்துல சூப்பரா இந்த பொரியல் செஞ்சு முடிச்சிடலாம். மசாலா இருக்க மாதிரியே இருக்கும் ஆனா நிறைய மசாலா இருக்காது. இந்த பெங்காலி ஸ்டைல் வெண்டைக்காய் ஃப்ரை சாதம் தக்காளி சாதம் ரசம் சாதம் எல்லாத்துக்குமே ஒரு பெர்ஃபெக்ட்டான காம்பினேஷனா இருக்கும். வீட்ல வெண்டைக்காய் நிறைய இருக்கு கார குழம்பு வச்சு ரொம்ப போர் அடிக்குது அப்படின்னா கண்டிப்பா இந்த சூப்பரான வெண்டைக்காய் ப்ரை செஞ்சு சாப்பிட்டு பாருங்க. டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்.

வீட்டுக்கு யாராவது சட்டையில் விருந்தாளிகள் வந்துட்டா கூட இந்த சூப்பரான வெண்டைக்காய் ஃப்ரை செஞ்சு அசத்தலாம். ரொம்ப ரொம்ப சட்டுனு செய்றதால ரொம்ப ரொம்ப சூப்பராவே இருக்கும். இந்த பெங்காலி ஸ்டைல் வெண்டைக்காய் பிரை ஒரு தடவை செஞ்சுட்டீங்கன்னா அதுக்கு அப்புறம் உங்களுக்கு இதோட டேஸ்ட் ரொம்ப பிடிச்சு போய் அடிக்கடி செய்வீங்க. இத வாங்க இந்த சுவையான பெங்காலி ஸ்டைல் வெண்டைக்காய் ஃப்ரை எப்படி சீக்கிரமா டேஸ்ட்டா செய்றதுன்னு பார்க்கலாம்.

Print
No ratings yet

பெங்காலி வெண்டைக்காய் ஃப்ரை | Bengali Lady’s Finger Fry Recipe In Tamil

வெண்டைக்காய் வச்சு வெண்டைக்காய் கார குழம்பு வெண்டைக்காய் பொரியல் வெண்டைக்காய் பச்சடி வெண்டைக்காய் சிப்ஸ் அப்படின்னு நிறைய வெரைட்டீஸ் செய்யலாம். அந்த வகையில இன்னைக்கு நம்ம வெண்டைக்காய் வச்சு செய்யக்கூடிய ஒரு பெங்காலி வெண்டைக்காய் ஃப்ரைதான் செய்யப் போறோம். இந்த வெண்டைக்காய் ஃப்ரை ரொம்ப ரொம்ப சிம்பிளா அதிக மசாலா இல்லாமல் இருக்கும். நிறைய மசாலா போட்டு பொரியல் சாப்பிட பிடிக்காதவங்க இந்த மாதிரி சிம்பிளா ஒரு பொரியல் செஞ்சு சாப்பிடலாம். குழந்தைகளோட டிபன் பாக்ஸ்க்கு கணவரோட லஞ்ச் பாக்ஸ்க்கு வீட்ல வேலைக்கு போற பெண்களோட லஞ்ச் பாக்ஸ்க்கு எல்லாத்துக்குமே ஒரு சூப்பரான சைடு டிஷ்ஷா இந்த வெண்டைக்காய் ஃப்ரை இருக்கும்.
Prep Time10 minutes
Active Time15 minutes
Total Time25 minutes
Course: Side Dish
Cuisine: Bengali, Indian
Keyword: Bengali Lady’s Finger Fry
Yield: 4 People
Calories: 81kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 1/4 கி வெண்டைக்காய்
  • 1 டீஸ்பூன் மல்லி
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1/4 டீஸ்பூன் மிளகு
  • 3 வர மிளகாய்
  • 4 பல் பூண்டு
  • கொத்தமல்லி சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • வெண்டைக்காயை கழுவி சின்ன சின்னதாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
  • பிறகு ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து வெண்டைக்காயை போட்டு நன்றாக வதக்கி வழவழப்பு தன்மை போக எடுக்கவும்.
  • ஒரு மிக்ஸி ஜாரில் பூண்டு சீரகம் காய்ந்த மிளகாய் மல்லி விதைகள் மிளகு கொத்தமல்லி இலைகள் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • பிறகு கடாயில் எண்ணெய் சேர்த்து அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து வதக்கி வெண்டைக்காய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக வதங்கி இறக்கினால் சுவையான பெங்காலி வெண்டைக்காய் ஃப்ரை தயார்.

Nutrition

Serving: 350g | Calories: 81kcal | Carbohydrates: 3.5g | Protein: 16g | Fat: 2.28g | Sodium: 73mg | Potassium: 150mg | Fiber: 8.3g | Vitamin A: 35IU | Vitamin C: 128mg | Calcium: 15mg | Iron: 7.3mg

இதனையும் படியுங்கள் : வெண்டைக்காய் பால்கறி இப்படி செஞ்சு பாருங்க, ஒரு குன்டான் சாதம் இருந்தாலும் பத்தாது!           

-விளம்பரம்-