என்னதான் புளி சாதம், லெமன் சாதம், தயிர் சாதம், மாங்காய் சாதம், தேங்காய் சாதம் நிறைய கலவை சாதங்கள் இருந்தாலும் இன்னைக்கு நம்ம கொஞ்சம் வித்தியாசமா வெற்றிலை வச்சு வெற்றிலை பூண்டு சாதம் செய்ய போறோம். இந்த வெற்றிலைப் பூண்டு சாதம் செரிமான பிரச்சனைகளுக்கு ரொம்ப ரொம்ப நல்லது. வெற்றிலை வச்சு பீடா மாதிரி சாப்பிட்டு இருப்பீங்க ஆனா இந்த வெற்றிலை வச்சு ஒரு கலவை சாதம் கண்டிப்பா சாப்டே இருக்க மாட்டீங்க. ஒரே ஒரு தடவை மட்டும் இந்த மாதிரி செஞ்சு சாப்பிட்டு பாருங்க உங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். குழந்தைகளுக்கு ஸ்கூல் லஞ்ச் பாக்ஸ்க்கு காலேஜ் போறவங்களுக்கு வேலைக்கு போறவங்களுக்கு எல்லாத்துக்குமே இந்த சாதமும் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும்.
மதியம் வரைக்கும் அப்படியே இருக்கும். வெற்றிலையை நல்லா குட்டி குட்டியா நறுக்கி சேர்க்கணும் இத எண்ணெயில் வதக்கிட்டா பெருசா இதோட பச்சை வாசனை இருக்காது. அதோட ஃப்ளேவர் மட்டும்தான் நமக்கு கிடைக்கும். பூண்டு சேர்க்கறதால ரொம்பவே டேஸ்ட்டா இருக்கும். வெற்றிலை வச்சு செய்றதால இது எப்படி இருக்கும் அப்படின்னு யோசிக்க வேண்டாம். கண்டிப்பா இந்த வெற்றிலை சாதம் ரொம்பவே ருசியா இருக்கும். ருசியான இந்த சாதத்துக்கு உருளைக்கிழங்கு வருவல் வாழைக்காய் வறுவல் இந்த மாதிரி ஏதாவது சைடு டிஷ்ஷா செஞ்சுக்கலாம்.
இது ஒரு பெர்பெக்ட்டான லஞ்ச் பாக்ஸ் ரெசிபியா இருக்கும். சுவையும் அட்டகாசமாக இருக்கும். ஒரே ஒரு தடவை மட்டும் இதை செஞ்சு பாருங்க. மற்ற எல்லா கலவை சாதங்களையும் விட இது கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும். அதிகமான செரிமான பிரச்சினைகள் இருந்தா வாரத்துக்கு ஒரு தடவை கூட இந்த வெற்றிலை பூண்டு சாதம் செஞ்சு சாப்பிடலாம். கடைசியா கொஞ்சமா நெய் ஊத்தி கிளறி எடுத்தா சூப்பரான வெற்றிலை பூண்டு சாதம் தயாராகும். நெய் இருந்தா சேர்த்துக்கலாம். இல்லன்னா எதுவும் பிரச்சனை இல்லை அப்படியே கூட சாப்பிடலாம் டேஸ்ட்டாவே இருக்கும்.இப்ப வாங்க இந்த சுவையான வெற்றிலை பூண்டு சாதம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
வெற்றிலை பூண்டு சாதம் | Betal Leaf Garlic Rice Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 4 வெற்றிலை
- 7 பல் பூண்டு
- 1 டீஸ்பூன் சோம்பு
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 4 முந்திரி
- 1 டீஸ்பூன் நெய்
- 1 1/2 கப் வடித்த சாதம்
- 1/4 டீஸ்பூன் மிளகு
- 1 பட்டை
- 1 பெரிய வெங்காயம்
- 1 டேபிள் ஸ்பூன் வறுத்த வேர்க்கடலை
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சோம்பு பட்டை மிளகு சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
- ஒரு பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கி சேர்த்து முந்திரி பருப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
- பொடியாக நறுக்கிய பூண்டு பொடியாக நறுக்கிய வெற்றிலை சேர்த்து நன்றாக எண்ணெயிலேயே வதக்கி மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வதக்கவும்.
- இறுதியாக ஒரு கப் சாதம் நெய் சேர்த்து கிளறினால் சுவையான வெற்றிலை பூண்டு சாதம் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : முட்டை மிளகு மசாலா செய்து ரசம் சாதம் கூட வச்சு சாப்பிட்டு பாருங்க அவ்வளவு ருசியாக இருக்கும்!!