என்னதான் நிறைய காய்கறிகள் இருந்தாலும் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு காய்கறி ரொம்ப பிடிக்கும். ஒரு சிலருக்கு கசப்பான பாகற்காய் சுத்தமா பிடிக்காது ஆனா பாகற்காய் சாப்பிடறது மூலமாக நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் எல்லாமே அழிந்து போகும். பாகற்காய் வச்சு பாகற்காய் குழம்பு பாகற்காய் தொக்கு பாகற்காய் பொரியல் பாகற்காய் சிப்ஸ் அப்படின்னு நிறைய செஞ்சு இருப்பீங்க ஆனா எப்படி செஞ்சாலும் ஒரு சிலர் பாகற்காய வெறுக்க தான் செய்வாங்க. அந்த மாதிரி பாகற்காயை வெறுக்கிறவங்க கூட விரும்பி சாப்பிடுவதற்கு இந்த மாதிரி ஒரு சூப்பரான பாகற்காய் தொக்கு செஞ்சு கொடுங்க.
ரசம் சாதம் சாம்பார் சாதம் பருப்பு சாதம் இது எல்லாத்துக்கும் ஒரு சூப்பரான காமினேஷனா இருக்கும். இந்த ரெசிபிக்கு உங்களுக்கு தேவைப்பட்டா கொஞ்சமா புளித்தண்ணீர் சேர்க்கலாம். இல்ல அப்படின்னா தக்காளி மட்டும் நிறைய சேர்த்து வதக்கி செய்யலாம். இந்த சுவையான பாகற்காய் தொக்கு ரெசிபி செய்வது ரொம்ப ரொம்ப ஈசி. இந்த தொக்கு இட்லி தோசைக்கு கூட சூப்பரா இருக்கும். பழைய சாதம் சுடு கஞ்சி சுடச்சுட சாதம் எல்லாத்துக்குமே ஒரு அட்டகாசமான காம்பினேஷனா இருக்கும். ஒரு தடவை இதே செய்முறையில் இந்த பாகற்காய் தொக்கு ரெசிபி செஞ்சு பாருங்க கண்டிப்பாக செம்ம டேஸ்டா இருக்கும்.
இந்த டேஸ்டான பாகற்காய் தொக்கு ரெசிபியை எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க மிச்சம் வைக்காம சாப்பிட்டு முடிச்சிடுவாங்க. குழந்தைகளுக்கு கூட இந்த தொக்குல சாதம் போட்டு கிளறி லஞ்ச் பாக்ஸ்க்கு கொடுத்துவிடலாம். இதுக்கு சைடு டிஷ்ஷா அப்பளம் வச்சு விட்டா கண்டிப்பா காலி பண்ணிட்டு தான் வருவாங்க. அந்த அளவுக்கு செம சூப்பரா இருக்கும். இந்த சூப்பரான டேஸ்டான பாகற்காய் தொக்கு ரெசிபிக்கு கடைசியா நம்ம தேங்காய் சீரகம் அரைத்து சேர்த்தால் தொக்குக்கு ஒரு தனி ருசி கிடைக்கும். இப்ப வாங்க இந்த சுவையான ஆரோக்கியமான பாகற்காய் தொக்கு ரெசிபி ரொம்ப சிம்பிளா எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
பாகற்காய் தொக்கு | Bitter Gourd Thokku Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 2 பாகற்காய்
- 2 பெரிய வெங்காயம்
- 2 தக்காளி
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1 டீஸ்பூன் சோம்பு
- 1/4 கப் தேங்காய் துருவல்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- ஒரு கடாயில் சோம்பு சேர்த்து தாளித்ததும் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
- பாகற்காயை பொடி பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கிய பிறகு குழந்தை மிளகாய் தூள் உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து வேக வைக்கவும்.
- பாகற்காய் வெந்ததும் மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் சீரகம் சேர்த்து அரைத்து பாகற்காயில் சேர்த்து இறக்கினால் சுவையான அரைத்துவிட்ட பாகற்காய் தொக்கு தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : கிராமத்து பாகற்காய் புளி குழம்பு இப்படி செய்து பாருங்க! மதிய உணவுக்கு ஏற்ற குழம்பு!