- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian
- Course
- Side Dish
காலையில் வீட்டில் இட்லி, தோசை தான் செய்யப் போகிறீர்களா? அதற்கு வழக்கமாக செய்யும் சட்னியை செய்யாமல், சற்று வித்தியாசமான சுவையுடைய குழம்பு செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உளுத்தம் பருப்பு இருந்தால் அதைக் கொண்டு குழம்பு செய்யுங்கள். இந்த உளுத்தம் பருப்பு குழம்பு இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். முக்கியமாக இந்த குழம்பு சத்தானதும் கூட. வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால், அவர்களுக்கு இந்த குழம்பை அடிக்கடி செய்து கொடுப்பது நல்லது.
குறிப்பாக இந்த குழம்பு செய்வதற்கு மிகவும் சுலபமானது என்பதால், வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பேச்சுலர்கள் இந்த குழம்பை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. உளுந்தில் நம் உடலுக்கு தேவையான புரதம், கொழுப்பு, வைட்டமின் B மற்றும் கார்போஹைடிரேட் சத்துக்கள் அதிகம் உள்ளன. இது வளர் இளம் பெண்களுக்கு ஏற்ற உணவாகும். இதை களி செய்து உண்பதால் மாதவிடாய் பிரச்சனைகள் தீரும்.
இதில் உள்ள இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் ஆகியவை, பெண்களின் இடுப்பு எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. உளுந்தில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. நரம்பு மண்டலம் வலிமை பெற உதவுகிறது. இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள உளுந்தம் பருப்பில் சுவையான குழம்பு செய்து பாருங்கள். இந்த குழம்பை இட்லி, தோசைக்கு மட்டுமின்றி, சாதம், பூரி மற்றும் சப்பாத்தியுடன் சேர்த்து பிசைந்து சாப்பிடவும் நன்றாக இருக்கும். இப்போது ஆரோக்கியமான கருப்பு உளுந்து குழம்பு எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : மூட்டு வலி வந்தா இந்த உளுந்து பால் செஞ்சு குடிங்க மூட்டு வலி பறந்து போயிடும்!
Ingredients
Method
முதலில் உளுந்தை எட்டு மணி நேரம் வரை ஊற வைத்து கொள்ளவும். பின் இதனை ஒரு குக்கரில் சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள், உப்பு, பிரியாணி இலை சேர்த்து வேகவைத்து எடுக்கவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து காய்ந்ததும் சீரகம், பட்டை, கிராம்பு சேர்த்து அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
எண்ணெய் பிரிந்து வந்ததும் வேகவைத்த உளுந்து, மல்லி தூள், சீரகத்தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து பத்து நிமிடங்கள் வேக வைக்கவும்.
அதன்பிறகு தண்ணீர் நன்கு வற்றி கிரேவி பதத்திற்கு வந்ததும் கஸ்தூரி மேத்தி, வெண்ணெய், கிரீம் சேர்த்து கலந்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான கருப்பு உளுந்து கறி தயார்.






