போட்டி எடுத்தா அதுல கிரேவி செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. ஒரு சிலருக்கு மட்டன் சிக்கன் விட போட்டி தான் ரொம்ப ரொம்ப பிடிக்கும். மட்டன் பிரை சிக்கன் ப்ரை கடம்பா ஃப்ரைன்னு நிறைய ரெசிப்பீஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க அந்த வகையில ஒரு தடவ போட்டி எடுத்து அதுல பிரை செஞ்சு சாப்பிட்டு பாருங்க. டேஸ்ட் ரொம்ப ரொம்ப அட்டகாசமா இருக்கும். மட்டன் குழம்பு வச்சு கூடவே இந்த போட்டி ஃப்ரை சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிட்டால் அவ்வளவு சூப்பரா இருக்கும். வெறும் போட்டி பிரை மட்டுமே சாப்பிட்டா கூட அவ்வளவு ருசியா இருக்கும். நல்லா கிரிஸ்பியா மொறுமொறுன்னு சாப்பிட்டு பாருங்க அவ்வளவு ருசியா இருக்கும். இது செய்றது ரொம்ப ரொம்ப ஈசி. போட்டி சாப்பிடுவது உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது.
வயிற்றுப்புண் வாய்ப்புண் எல்லாத்தையுமே சரியாக்கும். இந்த போட்டி பிரை ரெசிபி ஒரே ஒரு தடவை செஞ்சு பார்த்தீங்களா போட்டி பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிட ஆரம்பிச்சுடுவாங்க. வீட்ல இருக்க கூடிய சின்னவங்கள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க அந்த அளவுக்கு சூப்பரா இருக்கும். இந்த ருசியான போட்டி பய ரெசிபி போட்டி பிரியர்களுக்கு ரொம்பவே பிடிக்கும். இந்த சிம்பிளான போட்டி பிரை ரெசிபி கண்டிப்பா எல்லாரும் ட்ரை பண்ணி பார்க்க வேண்டிய ஒரு ரெசிபி. இப்ப வாங்க இந்த சுவையான போட்டி பிரை ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
போட்டி ஃப்ரை | Boti Fry Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
- 1 குக்கர்
தேவையான பொருட்கள்
- 1/4 கி போட்டி
- 2 பெரிய வெங்காயம்
- 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 2 பச்சை மிளகாய்
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/4 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1/4 டீஸ்பூன் மல்லி தூள்
- 1/4 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
- 1 கொத்து கறிவேப்பிலை
- கொத்தமல்லி சிறிதளவு
செய்முறை
- குக்கரில் போட்டியை கழுவி சுத்தம் செய்து மஞ்சள் தூள் சேர்த்து ஐந்து விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து நறுக்கிய பெரிய வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வதக்கவும்.
- வேக வைத்த போட்டியை சேர்த்து கிரிஸ்பியான உடன் மிளகாய் தூள் கரம் மசாலா, மல்லித்தூள் சேர்த்து இரண்டு நிமிடத்திற்கு நன்றாக வதக்கவும்.
- இறுதியாக கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான போட்டி பிரை தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : சுரைக்காய் ஆட்டு குடல் கறி குழம்பு ருசியாக சுலபமாக இப்படி கூட செய்யலாம்!