எப்போதும் ஒரே மாதிரியான தோசையை செய்யாமல் இதுபோல் ஆரோக்கியமான முறையில் சுரைக்காய் தோசை செய்து கொடுங்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்!!!

- Advertisement -

காலையில் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? தோசை சுடலாம் என்று நினைத்தால் தோசை மாவு இல்லையா? அப்படியானால் கவலையை விடுங்கள். வீட்டில் சுரைக்காய் இருந்தால், அதைக் கொண்டு அட்டகாசமான சுவையில் தோசை செய்யலாம். இதுவரை சுரைக்காய் கொண்டு கூட்டு, சம்பார் தான் செய்திருப்பீர்கள். அடுத்த முறை சுரைக்காயை வெச்சு சமைப்பதாக இருந்தால், சுரைக்காய் தோசை செய்யுங்கள். உடல் எடையை குறைக்க நாம் அனைவரும் பல தந்திரங்களை முயற்சிக்கும்போது பசியை எதிர்ப்பது மற்றும் கடுமையான உணவு திட்டங்களை கடைபிடிப்பது எளிதானது அல்ல.

-விளம்பரம்-

ஊட்டச்சத்து நிபுணர்கள் தோசைகளை அளவுக்கேற்ப சாப்பிட்டால் அது உடல் எடையைக் குறைக்கவும், ஆரோக்கியத்தை குணப்படுத்தவும் உதவுகிறது என்று நம்புகிறார்கள். அன்றாட தோசையில், ஒரு பகுதி உளுத்தம் பருப்புடன் மூன்று பங்கு அரிசியை சாப்பிடப் பழகிவிட்டோம். இது குறைந்த புரதம் மற்றும் அதிக கார்போஹைட்ரேட்டுகளை உட்கொள்வதற்கு வழிவகுக்கிறது என்கிறார்கள். ஆனால் அதற்கு பதிலாக நாம் செய்ய வேண்டியது, சத்தான உணவைத் தேடுவதுதான். அதாவது சாதாரண தோசைக்கு பதிலாக சுரைக்காய் மற்றும் பாசி பருப்பு தோசையை தயாரித்து சாப்பிடலாம்.

- Advertisement -

சுரைக்காய் உடல் சூட்டை குறைக்கும். சுரைக்காயில் வைட்டமின் பி, சி சத்துக்களை அதிகம் உள்ளது. சுரைக்காயின் சதைப் பகுதியை வெட்டி சாறு பிழிந்து அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து பருகி வர சிறுநீரக கோளாறு, சிறுநீர் கட்டு, நீர் எரிச்சல், நீர் கட்டு ஆகிய பிரச்சனைகள் குணமாகும். இந்த பிரச்னைகளுக்கு ஒரே தீர்வு சுரைக்காய். இவ்வளவு மருத்துவ பயன்களை கொண்டுள்ள சுரைக்காயில் சுவைமிகுந்த காலை உணவான சுரைக்காய் தோசை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

Print
No ratings yet

சுரைக்காய் தோசை | Bottle Gourd Dosa Recipe In Tamil

காலையில் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? தோசை சுடலாம் என்று நினைத்தால் தோசை மாவு இல்லையா? அப்படியானால் கவலையை விடுங்கள். வீட்டில் சுரைக்காய் இருந்தால், அதைக் கொண்டு அட்டகாசமான சுவையில் தோசை செய்யலாம். இதுவரை சுரைக்காய் கொண்டு கூட்டு, சம்பார் தான் செய்திருப்பீர்கள். அடுத்த முறை சுரைக்காயை வெச்சு சமைப்பதாக இருந்தால், சுரைக்காய் தோசை செய்யுங்கள். அன்றாட தோசையில், ஒரு பகுதி உளுத்தம் பருப்புடன் மூன்று பங்கு அரிசியை சாப்பிடப் பழகிவிட்டோம். இது குறைந்த புரதம் மற்றும் அதிக கார்போஹைட்ரேட்டுகளை உட்கொள்வதற்கு வழிவகுக்கிறது என்கிறார்கள். ஆனால் அதற்கு பதிலாக நாம் செய்ய வேண்டியது, சத்தான உணவைத் தேடுவதுதான். அதாவது சாதாரண தோசைக்கு பதிலாக சுரைக்காய் மற்றும் பாசி பருப்பு தோசையை தயாரித்து சாப்பிடலாம்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Breakfast, dinner
Cuisine: Indian, TAMIL
Keyword: Bottle Gourd Dosa
Yield: 4 People
Calories: 149kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கிரைண்டர்
  • 1 தோசைக்கல்

தேவையான பொருட்கள்

  • 1 சுரைக்காய்
  • 2 கப் இட்லி அரிசி
  • 1 கப் துவரம் பருப்பு
  • 2 பச்சை மிளகாய்
  • 4 வர ‌மிளகாய்
  • 10 பல் பூண்டு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • உப்பு தேவையான அளவு
  • நல்லெண்ணெய் தேவையான அளவு
  • கொத்தமல்லி சிறிதளவு
  • 10 சின்ன வெங்காயம்

செய்முறை

  • முதலில் சுரைக்காயை நன்கு கழுவி விட்டு தோல் சீவி துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பின் இட்லி அரிசி மற்றும் பருப்பை நன்கு கழுவி 4 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
  • பின் கிரைண்டரில் முதலில் அரிசி, பருப்பு சுரைக்காய், வர மிளகாய், பூண்டு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • பின் அரைத்து வைத்துள்ள மாவை ஒரே பவுளுக்கு மாற்றி தேவையான அளவு உப்பு, நறுக்கிய சின்ன வெங்காயம், கருவேப்பிலை மற்றும் கொத்த மல்லி சேர்த்து கலந்து 10 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
  • பின் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு கரண்டி மாவை எடுத்து தோசையாக வார்த்து சுற்றி எண்ணெய் விட்டு இரண்டு பக்கமும் சுட்டு எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான சுரைக்காய் தோசை தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 149kcal | Carbohydrates: 3.6g | Protein: 13g | Sodium: 82mg | Potassium: 173mg | Vitamin A: 57IU | Vitamin C: 189mg | Calcium: 29mg | Iron: 24mg

இதனையும் படியுங்கள் : வீட்டில் சுரைக்காய் இருந்தால் போதும் சூப்பரான சுரைக்காய் பர்பி ஒரு தரம் இப்படி செய்து பாருங்க! அப்புறம் அடிக்கடி நீங்களே செய்வீங்க!