Advertisement
ஸ்வீட்ஸ்

பார்த்தாலே நாவில் எச்சி ஊறும் பிரெட் அல்வா வீட்டிலேயே சில நிமிஷத்தில் சுலபமாக இப்படி செய்து சாப்பிடலாம்!

Advertisement

அல்வா என்றாலே அனைவருக்கும் பிடித்தமான ஒரு ஸ்வீட் பீட்ரூட் அல்வா கேரட் அல்வா கோதுமை அல்வா காசி அல்வா பாதாம் அல்வா அசோகா அல்வா என பல்வேறு சுவையில் அல்வாக்கள்  உண்டு. ஆனால் மிக சுலபமாக செய்யக்கூடிய ஒரு அல்வா தான் பிரட் அல்வா.

இப்பொழுதெல்லாம் பிரியாணி சாப்பிட்டு முடித்தவுடன் இனிப்பிற்காக நாம் சாப்பிடுவது பிரட் அல்வா தான் அதனுடைய சுவையை அடித்துக் கொள்ளவே முடியாது அவ்வளவு ருசியாக இருக்கும்.

Advertisement

கல்யாண வீடு, விசேஷ வீடுகள், ஹோட்டல்களில் நாம் சாப்பிட்ட பிரட் அல்வா சுவை நம் நாவிலேயே நடனமாடும் அதே மாதிரியான சுவையில் நம் வீட்டிலும் செய்ய வேண்டும் என்று நினைப்போம் ஆனால் சில பேருக்கு எவ்வளவு முயற்சி செய்தாலும் நன்றாகவே வராது காரணம் சரியான அளவுகளில் நாம் பொருட்களை பயன்படுத்துவது தான் அந்த வகையில் சரியான அளவுகளில் பொருட்களை வைத்து பிரட் அல்வா மிகவும் சுவையாக எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

பிரட் அல்வா | Bread Halwa Recipe In Tamil

Print Recipe
பிரியாணி சாப்பிட்டு முடித்தவுடன் இனிப்பிற்காக நாம்சாப்பிடுவது பிரட் அல்வா தான். கல்யாண வீடு,விசேஷ வீடுகள், ஹோட்டல்களில் நாம் சாப்பிட்ட பிரட் அல்வா சுவை நம் நாவிலேயே நடனமாடும்அதே மாதிரியான சுவையில் நம் வீட்டிலும் செய்ய வேண்டும் என்று நினைப்போம் ஆனால் சிலபேருக்கு எவ்வளவு முயற்சி செய்தாலும் நன்றாகவே வராது காரணம் சரியான அளவுகளில் நாம்பொருட்களை பயன்படுத்துவது தான் அந்த
Advertisement
வகையில் சரியான அளவுகளில் பொருட்களை வைத்து பிரட்அல்வா மிகவும் சுவையாக எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
Course sweets
Cuisine tamil nadu
Keyword bread halwa
Prep Time 5 minutes
Cook Time 8 minutes
Servings 4
Calories 680

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 6 பிரட் துண்டுகள்
  • 12 முந்திரி
  • 150 மில்லி நெய்
  • 2 கப் பால்
  • 3/4 கப் சர்க்கரை
  • 1/2 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
    Advertisement

Instructions

  • பிரெட் துண்டுகளின் ஓரத்தை வெட்டி விட வேண்டும் பிறகு அந்த பிரட் துண்டுகளை சிறுசிறு துண்டுகளாக வெட்டிவைத்துக் கொள்ள வேண்டும்
     
  • ஒரு கடாயில்நெய் அல்லது எண்ணெய் சேர்த்து வெட்டி வைத்துள்ள பிரட் துண்டுகளை பொன் நிறமாகும் வரை பொறித்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் எடுத்து வைத்துள்ள பாலை சேர்த்து கிளற வேண்டும் பிரட் துண்டுகள் பாலில் நன்றாக ஊறிவேக வேண்டும்.
  • இப்பொழுது அதில் சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறவும் இடையில் எடுத்து வைத்துள்ள நெய்யை சிறிதுசிறிதாக சேர்த்துக் கொள்ள வேண்டும். மற்றொரு கடாயில் சிறிதளவு நெய் ஊற்றி அதில் முந்திரியை பொன்னிறமாகும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  • பாலில் வெந்த பிரட் துண்டுகள் அல்வா பதத்திற்கு வரும் வரை கிளறிய பிறகு அதில் சிறிதளவு ஏலக்காய்பொடியையும் பொறித்து வைத்துள்ள முந்திரிகளையும் சேர்த்து கிளறி எடுத்து வைத்தால் சுவையானபிரட் அல்வா தயார்.
  • பிரட் துண்டுகளை வைத்து மிக எளிமையாக செய்யக்கூடியஇந்த அல்வாவை உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் அவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

Nutrition

Serving: 300g | Calories: 680kcal | Carbohydrates: 6.7g | Protein: 41.3g | Fat: 55.8g | Cholesterol: 180mg | Sodium: 104mg | Potassium: 305mg | Calcium: 8mg
Advertisement
Prem Kumar

Recent Posts

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

5 மணி நேரங்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

10 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

14 மணி நேரங்கள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

14 மணி நேரங்கள் ago

ருசியான கேழ்வரகு முருங்கைக்கீரை அடை டிபனாகவும் சாப்பிடலாம் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்!

தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…

16 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

19 மணி நேரங்கள் ago