Advertisement
சைவம்

இட்லி, பொங்கல், தோசைக்கு மட்டும் இல்ல சாதத்துக்கு கூட கத்திரிக்காய் இட்லி சாம்பார் இப்படி செய்து பாருங்க!

Advertisement

என்னதான் இட்லிக்கு சட்னி வெரைட்டியா வச்சாலும் கத்திரிக்காய் சாம்பாருக்கு இணையே இல்லைங்க. மணக்க மணக்க கத்திரிக்காய் இட்லி சாம்பார் இப்படி செஞ்சு பாருங்க அடிக்கடி செய்ய ஆரம்பித்து விடுவீங்க. பொதுவாக பொங்கலுக்கு கத்திரிக்காய் இட்லி சாம்பார் செய்வது உண்டு. குறைந்த பொருட்களை வைத்து சட்டுனு பத்து நிமிஷம் கூட ஆகாமல் இட்லி, தோசை, சப்பாத்தி, பொங்கல் என்று  வகையான பல டிபன் வகைகளுக்கும், சூடான சாதத்துடனும் சாப்பிட அருமையான கத்திரிக்காய் இட்லி சாம்பார்  அருமையாக இருக்கும்

நொடியில் தயாரிக்க கூடிய இந்த சாம்பார் பணியாரம், ஊத்தாப்பம், தோசை, இட்லி போன்றவற்றுக்கு சூப்பரான காம்பினேஷன் ஆக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கவரும் வண்ணம் நிச்சயம் இருக்கும். கத்திரிக்காய் ,முதல்கட்ட சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் வல்லமை பெற்றது. ஆஸ்துமா, ஈரல் நோய்கள்,தொண்டைக்கட்டு, உடல் பருமன் முதலியவற்றைக் குணப்படுத்தும் காய்கறிகளுள் கத்தரிக்காயும் குறிப்பிடத்தக்கது. இன்னும் இன்னும் வேண்டுமென்று கேட்கத் தூண்டும் இந்த கத்திரிக்காய் இட்லி சாம்பார் எப்படி எளிதாக தயாரிப்பது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

Advertisement

கத்திரிக்காய் இட்லி சாம்பார் | Brinjal Idly Sambar In Tamil

Print Recipe
என்னதான்இட்லிக்கு சட்னி வெரைட்டியா வச்சாலும் கத்திரிக்காய் சாம்பாருக்கு இணையே இல்லைங்க.மணக்க மணக்க கத்திரிக்காய் இட்லி சாம்பார் இப்படி செஞ்சு பாருங்க அடிக்கடி செய்ய ஆரம்பித்துவிடுவீங்க. பொதுவாக பொங்கலுக்கு கத்திரிக்காய் இட்லி சாம்பார் செய்வது உண்டு. குறைந்தபொருட்களை வைத்து சட்டுனு பத்து நிமிஷம் கூட ஆகாமல்
Advertisement
இட்லி, தோசை, சப்பாத்தி, பொங்கல்என்று  வகையான பல டிபன் வகைகளுக்கும், சூடான சாதத்துடனும் சாப்பிட கத்திரிக்காய்இட்லி சாம்பார்  அருமையாக இருக்கும். நொடியில் தயாரிக்க கூடியஇந்த சாம்பார் பணியாரம், ஊத்தாப்பம், தோசை, இட்லி போன்றவற்றுக்கு சூப்பரான காம்பினேஷன்ஆக இருக்கும்.
Course Breakfast, dinner, Kulambu, LUNCH
Cuisine tamilnadu
Keyword kathirikkai Idly Sambar
Prep Time 5 minutes
Advertisement
Cook Time 10 minutes
Servings 4
Calories 60

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1/4 கிலோ கத்திரிக்காய்
  • 1 கப் துவரம் பருப்பு
  • 1 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 3 பச்சை மிளகாய்
  • 3 இலை கறிவேப்பிலை
  • 1/2 தேக்கரண்டி கடுகு
  • 1/4 தேக்கரண்டி பெருங்காயம்
  • 1 தேக்கரண்டி எண்ணெய்

Instructions

  • துவரம் பருப்பினை தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவி வைத்துக் கொள்ளவும். தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
  • கத்திரிக்காய் , வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாயினை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • குக்கரில் துவரம் பருப்பு, நறுக்கி வைத்திருக்கும் கத்திரிக்காய், வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள், பெருங்காயம், உப்பு மற்றும் பச்சை மிளகாய் போடவும்.
  • இவை அனைத்துடனும் 4 கப் தண்ணீர் ஊற்றி 3 விசில் வரும் வரை வேக வைக்கவும். குக்கரின் ப்ரஷர் அடங்கியதும் திறந்து ஒரு கரண்டியை வைத்து மசித்து விடவும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். தாளித்தவற்றை வேக வைத்து மசித்து வைத்திருக்கும் காய்களுடன் போட்டு கிளறி விடவும்.  சுவையான கத்திரிக்காய் இட்லி சாம்பார் ரெடி.

Notes

இதனை இட்லி, தோசையுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். அதிகம் காரம் இல்லாததால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்

Nutrition

Serving: 500g | Calories: 60kcal | Carbohydrates: 37g | Protein: 19g | Fat: 2g | Cholesterol: 2mg | Sodium: 10mg | Potassium: 83mg | Fiber: 2g
Advertisement
Prem Kumar

Recent Posts

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

2 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

4 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

12 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

14 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

1 நாள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago