Home சைவம் கத்திரிக்காய் மசாலா வெங்காயம் தக்காளி இல்லாம இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

கத்திரிக்காய் மசாலா வெங்காயம் தக்காளி இல்லாம இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நம்ம கிரேவியா ஏதாவது செஞ்சாலே அதுல நிறைய வெங்காயம் தக்காளி போட்டா தான் நல்லா இருக்கும் அப்படின்னு நினைப்போம் ஆனா இப்ப நம்ம செய்ய போற இந்த கத்திரிக்காய் மசாலாவில் வெங்காயம், தக்காளி எதுவுமே இல்லாம சூப்பரான ஒரு கிரேவி செய்ய முடியும். இந்த கிரேவி செய்றதுக்கு நமக்கு ரொம்ப ரொம்ப குறைவான நேரமே போதுமானது தான். இந்த கத்திரிக்காய் கிரேவியை நம்ம சுடு சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம் ரசத்துக்கு சைட் டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம் தயிருக்கு சைடிஷா வச்சு சாப்பிடலாம் பிரியாணிக்கே கூட இதை சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம் அவ்வளவு டேஸ்டா இருக்கும். கத்திரிக்காயை பிடிக்காதுன்னு சொல்றவங்க கூட இந்த கத்திரிக்காய் மசாலா வச்சு கொடுத்தா விரும்பி சாப்பிடுவாங்க.

-விளம்பரம்-

நம்ம பிஞ்சு கத்திரிக்காயா எடுத்துக்கிட்டோம் அப்படின்னா இன்னும் ருசி சூப்பராவே இருக்கும். யாராவது கத்திரிக்காய் குழம்பு செஞ்சு கொடுங்கனு உங்க கிட்ட கேட்டாங்கன்னா இந்த சூப்பரான கத்திரிக்காய் மசாலா ரெசிபியை செஞ்சு கொடுங்க. கத்திரிக்காய் புளி குழம்பு விட இந்த கத்திரிக்காய் மசாலா அவ்வளவு ருசியா இருக்கும். பழைய சாதத்துக்கு கூட இந்த கத்திரிக்காய் மசாலாவ சைடிஷ்ஷா வெச்சு சாப்பிடலாம். இதுக்கு நம்ம மசாலா வறுத்து அரைச்சு போடுறதால அதோட வாசனையும் ருசியும் ரொம்பவே சூப்பரா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான கத்திரிக்காய் மசாலாவ எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

Print
No ratings yet

கத்தரிக்காய் மசாலா | Brinjal Masala Recipe In Tamil

பொதுவா நம்ம கிரேவியா ஏதாவது செஞ்சாலே அதுல நிறைய வெங்காயம் தக்காளி போட்டா தான் நல்லா இருக்கும் அப்படின்னு நினைப்போம் ஆனா இப்ப நம்ம செய்ய போற இந்த கத்திரிக்காய் மசாலாவில் வெங்காயம், தக்காளி எதுவுமே இல்லாம சூப்பரான ஒரு கிரேவி செய்ய முடியும். இந்த கிரேவி செய்றதுக்கு நமக்கு ரொம்ப ரொம்ப குறைவான நேரமே போதுமானது தான். இந்த கத்திரிக்காய் கிரேவியை நம்ம சுடு சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம் ரசத்துக்கு சைட் டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம் தயிருக்கு சைடிஷா வச்சு சாப்பிடலாம் பிரியாணிக்கே கூட இதை சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம் அவ்வளவு டேஸ்டா இருக்கும். கத்திரிக்காயை பிடிக்காதுன்னு சொல்றவங்க கூட இந்த கத்திரிக்காய் மசாலா வச்சு கொடுத்தா விரும்பி சாப்பிடுவாங்க.
Prep Time10 minutes
Active Time15 minutes
Total Time25 minutes
Course: LUNCH
Cuisine: Indian, TAMIL
Keyword: Brinjal Masala
Yield: 4 People
Calories: 205kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/4 கி கத்தரிக்காய்
  • 1 டீஸ்பூன் உளுந்தம் பருப்பு
  • 1 டீஸ்பூன் கடலை பருப்பு
  • 1 டீஸ்பூன் மல்லி
  • 5 வர மிளகாய்
  • 1 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 1 துண்டு புளி
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1/4 டீஸ்பூன் வெந்தயம்
  • 1 டீஸ்பூன் வேர்க்கடலை
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 2 கொத்து கறிவேப்பிலை
  • 1 கைப்பிடி தேங்காய் துண்டுகள்
  • 1 டீஸ்பூன் எள்
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்

செய்முறை

  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து உளுந்தம் பருப்பு கடலைப்பருப்பு வெந்தயம் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
  • பிறகு அதனுடன் சீரகம் மிளகு பட்டை கிராம்பு, ஏலக்காய் மல்லி விதைகள் காய்ந்த மிளகாய் அனைத்தையும் சேர்த்த நன்றாக வறுத்துக் கொள்ளவும்.
  • இறுதியாக அடுப்பை அணைத்து விட்டு தேங்காய் துண்டுகள் மற்றும் எள் சேர்த்து நன்றாக கிளறி ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • அதே கடாயில் எண்ணெய் ஊற்றி கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் நறுக்கிய கத்திரிக்காய் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து மூடி போட்டு 10 நிமிடத்திற்கு எண்ணெயிலேயே வேக வைக்கவும்.
  • அதனுடன் அரைத்த விழுது சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக வேகவைத்த இறக்கினால் சுவையான கத்திரிக்காய் மசாலா தயார்.

Nutrition

Serving: 550g | Calories: 205kcal | Carbohydrates: 4.8g | Protein: 8g | Fat: 1.5g | Sodium: 253mg | Potassium: 124mg | Fiber: 2.4g | Vitamin A: 41IU | Vitamin C: 75mg | Calcium: 23mg | Iron: 9.76mg

இதனையும் படியுங்கள் : அடுத்த முறை கத்தரிக்காய் வாங்கினால் இந்த கத்தரிக்காய் ரோஸ்ட் செய்து பாருங்கள் அவ்வளவு ருசியாக இருக்கும்!!