- Prep
- 5 min
- Cook
- 10 min
- Total
- 15 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, dinner
வீட்ல இட்லி தோசை மாவு இல்ல அப்படின்னா இன்ஸ்டன்ட்டா ரவை தயிர் வைத்து செய்யக்கூடிய இந்த சூப்பரான பன் தோசை ட்ரை பண்ணி பாருங்க. இந்த ரெசிபி ரொம்ப ரொம்ப சிம்பிளான ஈஸியான ஒரு ரெசிபி ரொம்ப ரொம்ப குறைவான பொருட்களை வைத்தே ஒரு சூப்பரான டிபன் ரெடி பண்ணிடலாம். டேஸ்டான இந்த ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் இந்த ரெசிபியை கண்டிப்பா கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க அந்த அளவுக்கு ருசியா இருக்கும்.
தாளிப்பு கரண்டி வச்சு தான் இந்த பன் தோசை செய்ய வேண்டும். இதுல உங்களுக்கு தேவையான காய்கறிகள் கூட சேர்த்துக் கொள்ளலாம். நம்ம இதுல கேரட் மட்டும் துருவி சேர்த்துக்கொள்ள போறோம். டேஸ்டான ருசியான இந்த பன் தோசைக்கு சுருக்குன்னு தக்காளி சட்னி, காரச் சட்னி வச்சு சாப்பிட்டா அவ்வளவு ருசியா இருக்கும். சட்டினு யாராவது வீட்டுக்கு விருந்தாளிகள் வந்துட்டாங்க மாவு எதுவுமில்லை அப்படின்னா காலைல டிபனுக்கோ இல்ல இரவு டிபனுக்கோ இந்த சுவையான பன் தோசை ரெசிபியை செஞ்சு கொடுக்கலாம்.
வீட்ல மாவு இல்ல அப்படின்னா அதுக்கு பதிலா பொங்கல் பூரி சப்பாத்தி அப்படின்னு சாப்பிட பிடிக்கலைன்னா இந்த மாதிரி ட்ரை பண்ணி பார்க்கலாம். இதுக்கு அரிசி மாவு மைதா மாவு அப்படின்னு எதுவுமே சேர்க்க தேவையில்லை. ரவையும் தயிரும் இருந்தாலே போதுமானது. தயிர் லைட்டா புளிக்கணும் நிறைய புளிக்க கூடாது. டேஸ்டான ருசியான இந்த பன் தோசை ரெசிபியை கண்டிப்பாக ட்ரை பண்ணி பாருங்க.இப்ப வாங்க இந்த சுவையான டேஸ்டான பன் தோசை ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : அந்திரா பச்சை பயறுைதோசை
Ingredients
Method
ஒரு பாத்திரத்தில் ரவை தயிர் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஊற வைக்கவும்.
அரைமணி நேரம் ஊறவைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
பிறகு ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு,பச்சை மிளகாய்,கொத்தமல்லி இலைகள், துருவிய கேரட் சேர்த்து நன்றாக வதக்கி மாவில் சேர்த்து கொள்ளவும்.
ஒரு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் சேர்த்து இரண்டு கரண்டி மாவு ஊற்றி இரண்டு நிமிடம் இரண்டு பக்கமும் மிதமான தீயில் வேக வைத்து எடுத்தால் சுவையான பன் தோசை தயார்.






