- Prep
- 10 min
- Cook
- 20 min
- Total
- 30 min
- Serves
- 5
- Cuisine
- Indian, tamilnadu
- Course
- dinner
தினமும் சப்பாத்தி, பூரி செய்து சாப்பிட்டு அலுத்துவிட்டதா? இன்று சற்று வித்தியாசமாக வீட்டில் செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் பட்டர் குல்ச்சா செய்து சாப்பிடுங்கள். இதுவரை நீங்கள் பட்டர் குல்ச்சாவை ஹோட்டல்களில் தான் சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் அந்த பட்டர் குல்ச்சாவை வீட்டிலேயே ஈஸியாக செய்யலாம்.
இதனையும் படியுங்கள் : சுவையான பாலக்காடு பூரி கிழங்கு மசாலா செய்வது எப்படி ?
முக்கியமாக பட்டர் குல்ச்சா செய்வதற்கு வீட்டில் உள்ள பொருட்களே போதுமானது. இந்த பட்டர் குல்ச்சா குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். பேச்சுலர்கள் கூட இதை முயற்சிக்கலாம்.இந்த பதிவில் சுவையான பட்டர் குல்ச்சா எப்படி செய்வது என்று பார்ப்போம் வாருங்கள்.
Ingredients
Method
முதலில் ஒரு பாத்திரத்தில் பால், சர்க்கரை, உப்பு, பேக்கிங் சோடா மற்றும் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் மைதா மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
பின் பிசைந்த மாவை மூடி வைத்து 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பின்பு சிறிது மாவை எடுத்து உருட்டி, சப்பாத்தி போன்று தேய்க்க வேண்டும்.
பின் அதன் மேல் நீரைத் தடவ வேண்டும்.
பிறகு ஒரு நாண்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும். தவா சூடானதும், தேய்த்து வைத்துள்ள குல்ச்சாவை தவாவில் போட வேண்டும்.
அப்படி போடும் போது, நீர் தடவிய பக்கம் அடியில் இருக்க வேண்டும்.
குல்ச்சா சற்று உப்பி வரும் போது, தவாவை எடுத்து, அப்படியே கவிழ்ந்து நெருப்பில் சிறிது நேரம் காட்டி, பின் தவாவை அடுப்பில் வைத்து குல்ச்சாவை திருப்பிப் போட்டு வேக வைத்து எடுத்து, அதன் மேலே சிறிது வெண்ணெயைத் தடவினால், சுவையான பட்டர் குல்ச்சா தயார்.






