- Prep
- 20 min
- Cook
- 20 min
- Total
- 40 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, dinner
இன்று நாம் பூரி, சப்பாத்திக்கு உடன் வைத்து சாப்பிடுவதற்கு ஏற்ற பூரி கிழங்கு மசாலா ரெசிபி பற்றி தான் நாம் பார்க்கப் போகிறோம். பொதுவாக நமது வீடுகளில் சப்பாத்தி, பூரி போன்ற டிபன் வகை உணவுகள் செய்யும் போது அதனுடன் தொட்டு சாப்பிடுவதற்காக உருளைக்கிழங்கு குருமா தான் பெரும்பாலான வீடுகளில் செய்து பரிமாறுவார்கள். ஆனால் இன்று நாம் பாலக்காடு ஸ்டைலில் பூரி கிழங்கு மசாலா செய்து பார்க்க போகிறோம்
இதையும் படியுங்கள் : சுவையான வெஜ் குருமா செய்வது எப்படி ?
ஆனால் இதில் உருளைக்கிழங்குக்கு பதிலாக நாம் மரவள்ளிக்கிழங்கை பயன்படுத்த போகிறோம். இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இது போல் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒரு பூரி சாப்பிட வேண்டிய இடத்தில் இரண்டு பூரி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த பாலக்காடு பூரி கிழங்கு மசாலா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Ingredients
Method
முதலில் நாம் வைத்திருக்கும் இரண்டு மரவள்ளி கிழங்குகளை குக்கரில் போட்டு வேக வைத்து பின் வேக வைத்த மரவள்ளி கிழங்கை மசித்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி.
பின் எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் ஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு, அரை டீஸ்பூன் சோம்பு, இரண்டு வரமிளகாய் மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து நன்கு தாளித்துக் கொள்ளுங்கள்.
அதன் பின்பு இந்த தாளிப்புடன் நம் நீள வாக்கில் நறுக்கி வைத்திருக்கும் ஒரு பெரிய வெங்காயம், ஐந்து பச்சை மிளகாய் மற்றும் அரை டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின்பு இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போகி வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கி வந்தவுடன்.
பின் இதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி, அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். பின் தக்காளி நன்கு மசிந்து வந்ததும் இதனுடன் ஒரு கப் அளவு தண்ணீர் மற்றும் நாம் மசித்து வைத்திருக்கும் மரவள்ளி கிழங்கு சேர்த்து கடாயை மூடி வைத்து நன்கு கொதிக்க விடுங்கள்.
பின் பூரி கிழங்கு மசாலா கெட்டியான பதத்திற்கு வந்ததும் சிறிது கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கி விடுங்கள். அவ்வளவு தான் காரசாரமான பாலக்காடு பூரி கிழங்கு மசாலா இனிதே தயாராகிவிட்டது






