ஹோட்டல் சுவையில் பட்டர் நாண் வீட்டில இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

- Advertisement -

ஈஸியான முறையில் பட்டர் நாண் செய்ய…! ஹோட்டலில் சாப்பிடும் ‘பட்டர் நாண்’!, இன்னைக்கு நம்ம வீட்லயே செய்து பார்க்கலாமா?நிறைய பேருக்கு ஹோட்டலுக்கு சென்றால் பட்டர் நான் சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருக்கும். பெரும்பாலும் இதை யாரும் வீட்டில் செய்ய மாட்டார்கள். ஆனால், நம்முடைய வீட்டிலேயே சுலபமாக

-விளம்பரம்-

இந்த பட்டர் நாண் ரெசிபியை செய்து பார்க்கலாமா? அது மட்டுமல்லாமல் கடைகளில் சென்று சாப்பிட்டால், இந்த பட்டர் நாண்க்கும், கிரரேவிக்கும் சேர்த்து, அதிகப்படியான பணம் செலவாகும். நம்முடைய வீட்டிலேயே பட்டர் நாண் தயார் செய்துவிட்டால், ஒரு வெஜிடபிள் குருமா வைத்துக்கூட, திருப்தியாக ஆசை தீர, இந்த பட்டர் நாணை சாப்பிட்டுக் கொள்ளலாமே!

- Advertisement -
Print
2.50 from 2 votes

பட்டர் நாண் | Butter Naan Recipe in Tamil

ஈஸியான முறையில் பட்டர் நாண் செய்ய…! ஹோட்டலில் சாப்பிடும் ‘பட்டர் நாண்’!, இன்னைக்கு நம்ம வீட்லயே செய்து பார்க்கலாமா?நிறைய பேருக்கு ஹோட்டலுக்கு சென்றால் பட்டர் நான் சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருக்கும். பெரும்பாலும் இதை யாரும் வீட்டில் செய்ய மாட்டார்கள். ஆனால், நம்முடைய வீட்டிலேயே சுலபமாக இந்த பட்டர் நாண் ரெசிபியை செய்து பார்க்கலாமா? அது மட்டுமல்லாமல் கடைகளில் சென்று சாப்பிட்டால், இந்த பட்டர் நாண்க்கும், கிரரேவிக்கும் சேர்த்து, அதிகப்படியான பணம் செலவாகும். நம்முடைய வீட்டிலேயே பட்டர் நாண் தயார் செய்துவிட்டால், ஒரு வெஜிடபிள் குருமா வைத்துக்கூட, திருப்தியாக ஆசை தீர, இந்த பட்டர் நாணை சாப்பிட்டுக் கொள்ளலாமே!
Prep Time20 minutes
Active Time15 minutes
Total Time35 minutes
Course: Breakfast, dinner
Cuisine: Indian, TAMIL
Keyword: Butter Naan, பட்டர் நாண்
Yield: 4 People
Calories: 36kcal

Equipment

  • பெரிய பவுள்
  • அடுப்பு

தேவையான பொருட்கள்

  • 3 cup மைதா மாவு
  • 1 tsp ட்ரை ஈஸ்ட்
  • 6 tbsp வெண்ணெய்
  • 1 tbsp சர்க்கரை
  • 2 tbsp தயிர்
  • தண்ணீர் தேவையான அளவு
  • தேவையான அளவு உப்பு                             

செய்முறை

  • பட்டர் நாண் செய்ய முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, வெதுவெதுப்பாக சூடேற்றி, அதில் ட்ரை ஈஸ்ட் மற்றும் சர்க்கரை சேர்த்து கரைத்து வைக்க வேண்டும்.
  • பின்னர் மற்றொரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, தயிர், பாதி வெண்ணெய் சேர்த்து கலந்து, ஈஸ்ட் மற்றும் சர்க்கரை கலந்த நீரை ஊற்றி, நன்கு மென்மையாக சப்பாத்தி மாவு போல் பிசைய வேண்டும்.
  • பிறகு அதனை 1 அல்லது 2 மணிநேரம் வரை நன்கு ஊற வைக்க வேண்டும்.
  • பிறகு பார்த்தால், மாவு நன்கு உப்பியிருக்கும். அதனை மீண்டும் அதனை ஒரு முறை பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திப் போன்று தேய்த்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின் அடுப்பை பற்ற வைத்து, தீயை குறைவில் வைத்து, அதன் மேல் தேய்த்து வைத்துள்ளதை மாவை வைக்க வேண்டும்
  • நாணானது நன்கு உப்பி மேலே வரும் போது, அதன் மேல் வெண்ணெயை தடவி, மறுபக்கம் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்க வேண்டும்.
  • அவ்வளவுதான் சுவையான பட்டர் நாண் தயார். அதன் மீது சிறிது வெண்ணெயை தடவி சூடாக பரிமாறலாம்.

Nutrition

Serving: 450gm | Calories: 36kcal | Carbohydrates: 45g | Sodium: 352mg | Potassium: 426mg | Sugar: 3.6g | Calcium: 2mg

இதையும் படியுங்கள்: காரசாரமான சுவையில் பொங்கல் புளிக்கறி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

LEAVE A REPLY

Recipe Rating




Please enter your comment!
Please enter your name here